Thursday, December 6, 2007

அமைதிப் பேரணியின் உண்மை நிலவரம்...

வழக்கறிஞர் உதயக்குமார் அவர்கள் அண்மையில் நடந்த அமைதி பேரணித் தொடர்பாக மலேசியாக்கினி நிருபரிடம் பேட்டிக் கொடுத்துள்ளார். இதோ அதன் படக்காட்சி...




இதற்கிடையில் மலேசிய நாளேடுகள், அதிலும் முக்கியமாக தமிழ் நாளேடுகள் நடத்தும் உரிமையாளர்களை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்துறை அமைச்சு அழைத்து இன்று புத்ரா ஜயாவில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் அனைத்து ஊடகங்களும் இந்து உரிமைப் பணிப்படை நடத்திய அமைதிப் பேரணித் தொடர்பாக எந்தவொரு செய்தியும் இனி தலையங்கமாக வெளியிடக்கூடாது எனவும், அதிலும் அரசாங்கத்தையும் போலிஸாரையும் சந்தேகிக்கும் வகையில் கட்டுரைகள் அமையக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 90 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது.

ஆண்டவா.....!!! மலேசியா ஒரு ஜனநாயகமான நாடா? நீயேச் சொல்!!

போராட்டம் தொடரும்...

1 comment:

  1. கடவுளை கண்னை மூடிக் கொண்டுதானே கும்பிடுகிறோம்... அவர் எப்படி பார்பார்... முதலில் நம் மக்களை விழித்திருக்க செய்ய வேண்டும் நண்பரே...

    ReplyDelete

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..