சீலன் பிள்ளை தன்னுடைய 5-ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். காலை 9.15 மணியளவில் திராட்சைப் பழங்களை உண்டு தன் விரதத்தை முடித்துக் கொண்டார். அக்கண்கொள்ளாக் காட்சியைக் காண மலேசியாவிலிருந்து பல வலைப்பதிவர்கள் மற்றும் நிருபர்கள் வந்திருந்தனர். மலேசியாவிலிருந்து ஒருப் பேருந்தில் 50 ஆதரவாளர்கள் சீலனைப் பார்க்க வரும்பொழுது, சுங்கச் சாவடியில் மலேசிய சுங்கத் துரை அதிகாரிகள் அந்தப் பேருந்தை தடுத்து நிறுத்தியதாகவும் பின் விசாரணைக்குப் பின் அவர்களை சிங்கப்பூரினுள் அனுமதித்தனர் எனவும் தெரிய வந்தது. இருப்பினும் சீலனும் மற்ற ஆதரவாளர்களும் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் அந்தப் பேருந்து வந்துச் சேராததால், ஆதரவாளர்கள் சீலனுக்கு மாலையை அணிவித்து அவருக்கு திராட்சைப் பழங்களைக் கொடுத்தனர்.
சீலனுக்கு மீண்டும் ஒரு முறை நம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்..
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..