Monday, January 21, 2008

லண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி

வருகின்ற பிப்ரவரி 1-ஆம் திகதியன்று லண்டனில் மலேசிய இந்தியர்கள் அமைதி பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வழக்கறிஞர் திரு.வேதமூர்த்தி அவர்களுடைய தலைமையில் நடைப்பெறவுள்ள இவ்வமைதிப் பேரணியானது காலை 10.30 மணி தொடங்கி மதியம் 2 மணிவரை நடைப்பெறவுள்ளது. இவ்வமைதிப் பேரணி (Opposite No.10 Downing Street, London, UK) எனுமிடத்தில் நடைப்பெறவுள்ளது.

எனவே, லண்டன் வாழ் மலேசிய இந்தியர்கள் இப்பேரணியில் கலந்துக் கொள்ள அழைக்கப் படுகின்றனர். இப்பேரணியில் கலந்துக் கொண்டால் தங்களுடைய அடையாளம் வெளியே தெரிந்துவிடும் எனப் பயப்பட்டீர்கள் என்றால், எதிர்காலத்தில் மலேசிய இந்திய சமுதாயம் தன் அடையாளத்தை இழந்து நிற்க வேண்டிய நிலமை வந்துவிடும்.
எனவே, மனித உரிமை மீறல்களை எதிர்த்தும், மலேசிய இந்தியர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் விதத்தை எதிர்த்தும், நம்முடைய ஐந்து தலைவர்களை விரைவில் விடுதலைச் செய்யக் கோரியும் இந்த அமைதிப் பேரணியில் கலந்துக் கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு, பாஸ்கரன் மாணிக்கத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.
இங்கிலாந்தில் இருப்பவர்கள் அழைக்க வேண்டிய எண் : 07949366446
வெளிநாட்டில் உள்ளவர்கள் அழைக்க வேண்டிய எண் : 00 44 7949366446

போராட்டம் தொடரும்...

No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..