கைக்குழந்தையாக இருக்கும்போதே அன்னையின் அரவணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் 15 வயதுவரை தன் தந்தையுடன் ஏழ்மை வாழ்க்கை நடத்தி, தன் தந்தையின் இறப்பிற்குப் பிறகு சுயகாலில் உழைத்து நண்பர்களின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் திரு.சந்திரன். இருப்பினும், அவரின் போதாத காலம், கடந்தாண்டு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் தன் உடலின் ஒரு பாதி செயலற்ற நிலைக்கு தள்ளப்பட, இன்று ஒரு காப்பகத்தில் படுத்த படுக்கையாகிக் கிடக்கிறார் திரு.சந்திரன்.
பினாங்கு பொது மருத்துவமனையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சந்திரனை, பினாங்கு இந்து சங்க உதவித் தலைவர் திரு.முருகையா அவர்கள் பலவிடங்களில் முயற்சி செய்து இறுதியில் பெதேஸ்தா எனும் முதியோர் காப்பகத்தில் அவரைத் தற்காலிகமாகத் தங்கவைத்துள்ளார். சந்திரனின் அன்றாட மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட பெதெஸ்தா முதியோர் காப்பகத்தின் தோற்றுநர் திரு.தேவராசு மற்றும் பினாங்கு இந்து சங்க உதவித் தலைவர் திரு.முருகையா ஆகியோர் பலவகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திரு.சந்திரனின் நிலையை உணர்ந்து அவருக்கு உரிய உதவிகளைச் செய்ய எண்ணம் கொண்ட நல்லுள்ளங்கள், கீழ்காணும் காணொளியைக் காண்டு, அதன்வழி மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..