சயாம்-பர்மா மரண ரயில்வே திட்டத்தில் மலாயாத் தமிழர்களின் பங்கு
>> Wednesday, October 30, 2013
கடந்த அத்தோபர் 19-ஆம் தேதி பினாங்கு காந்திஜி மண்டபத்தில் சயாம் - பர்மா மரண ரயில்வே திட்டம் மற்றும் தேசிய இந்திய இராணுவத்தில் மலாயாத் தமிழர்களின் பங்கு எனும் தலைப்பில் உரை நிகழ்வு நடந்தேறியது. பினாங்கு பாரம்பரிய மையம் ஏற்று நடத்திய இந்நிகழ்வில் கியோட்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.டேவிட் போகட் சிறப்பு உரையாற்றினார். அவரின் உரையின் சில பகுதிகள் காணொளியாகத் தொகுக்கப்பட்டு இங்கு வழங்கப்பட்டுள்ளது.