தமிழர்களின் பாரம்பரிய குடியிருப்பை சட்டவிரோதமாக கைப்பற்றி விற்ற அரசாங்கம்!

>> Tuesday, June 30, 2009

சில காலமாகவே, புவா பாலா கிராம விவகாரம் தொடர்பாக பதிவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. இருப்பினும் முழுத் தகவல்களையும் சேகரிப்பதற்குள் நாட்களாகிவிட்டன. முதலாளித்துவமும் அதிகார வர்க்கமும் பினாங்கில் இந்தியர்களுக்கென இருந்துவந்த ஒரே பாரம்பரிய கிராம நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்த விதத்தைக் கேட்டால் நமக்கே கோபம் வரும். அம்னோ அரசாங்கத்தின் ஆட்சியில் கம்போங் புவா பாலா கிராமம் சட்டவிரோதமாக மூன்றாம் தரப்பினருக்கு கைமாற்றப்பட்டு இறுதியில் நில மேம்பாட்டாளர்களின் கையில் சிக்குண்டு இன்று அம்மக்களின் வாழ்வும், அவர்கள் காலங்காலமாக வளர்த்துவந்த ஆடு, மாடுகளின் கதியும் கேள்விக்குறியாக தொக்கி நிற்கின்றது.

வருகின்ற 2-ஆம் திகதி சூலை மாதம் வீடுகள் உடைப்படுவதற்கான காலக்கெடு. இனி அங்குள்ள மக்களும், இம்முறைக்கேட்டை தினமும் நாளிதழ், இணையங்களின்வழி படித்து, கண்டு அறிந்துகொள்பவர்களும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?

இனி இதுபோன்று நடவாது நம்மையும் நம் நிலங்களையும் பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம்?

இதற்கிடையில் இன்று காலை 10 மணியளவில் பினாங்கு கொம்தாருக்கு இண்ட்ராஃபினரும் வேதமூர்த்தியின் மகள் வைசுணவியும், மற்றும் புவா பாலா குழந்தைகளும் முதியோர்களும் மனு சமர்ப்பிக்க சென்றிருந்தனர். அம்மனுவை பினாங்கு முதல்வரின் அந்தரங்கச் செயலாளர் பெற்றுக் கொண்டுள்ளார். அதுபோக, இன்று மாலை 4 மணியளவில் கொம்தார் கட்டிடத்திற்கு கீழ் இண்ட்ராஃபினருடன் இணைந்து புவா பாலா கிராமவாசிகள் ஒன்று கூடவிருக்கின்றனர். சிலாங்கூர், கெடா, பேராக் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆதரவாளர்கள் ஒன்றுதிரளவிருக்கின்றனர். பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என இண்ட்ராஃபினர் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.

புவா பாலா கிராமவாசிகளிடம் பினாங்கு இண்ட்ராஃப் கண்டெடுத்த நேர்க்காணல் உங்கள் பார்வைக்கு..







பாகம் 1


பாகம் 2



பாகம் 3



பாகம் 4



போராட்டம் தொடரும்...

Read more...

வீர முனீசுவரர் ஆலயம் உடைப்பு!

>> Sunday, June 28, 2009


27 சூன் 2009

ஊடக அறிக்கை

ஆலய உடைப்பு - வீர முனீசுவரர் ஆலயம், யாப் குவான் செங் சாலை, அம்பாங் சாலை, கோலாலம்பூர்

கடந்த 27/06/2009 காலை 10 மணியளவில், ..காவைச் சேர்ந்த குண்டர்கள் என நம்பப்படும் சுமார் 35 பேர் 20 ஆண்டுகால இந்து ஆலயமொன்றை உடைத்து தள்ளியிருக்கின்றனர். அம்னோவின் கைப்பாவையாக விளங்கிவரும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், காவல்த்துறையினர், ..கா குண்டர்கள் போன்றோர்போல்டன் செண்டிரியான் பெர்காட்எனும் மேம்பாட்டு நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு இச்செயலைப் புரிந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

அனுமதியின்றி உட்பிரவேசிப்பவர்களிடமிருந்து ஆலயத்தை பாதுகாக்குமாறு ஆலய நிர்வாகத்தினர் பலமுறைடாங் வாங்கிகாவல் நிலையத்தில் புகார்கள் செய்துள்ளனர். (டாங் வாங்கி/022122/09). ஆலயத்தை உடைக்க அத்துமீறி நுழைந்தவர்கள் நீதிமன்ற ஆணைக் கடிதத்தை ஏதும் தன்னிடம் காட்டவில்லை என ஆலய நிர்வாக உறுப்பினர் திரு.சிவனேசுவரன் தலைமை இன்சுபெக்டர் ஆனந்த் அவர்களிடம் கூறியுள்ளார். அவர்களாகவே வந்து ஆலயத்தை உடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். ஆலயத்தை பாதுகாக்க வேண்டிய காவல்த்துறையினரே குண்டர்களுக்கு பாதுகாப்பாக இருந்து செயல்பட்டது மிகவும் அதிருப்தியை அளிக்கிறது. அப்பாவிகளான ஆலய நிர்வாகத்தினரை அங்கிருந்து களைந்துபோகுமாறு காவல்த்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். காவல்த்துறையினரின் கடமையோ ஆலயத்தை பாதுக்காப்பது. பீனல் கோட் சட்டப்பிரிவு 295-இன் படி, வழிப்பாட்டுத் தளங்களை உடைத்துத் தள்ளுவது சட்டப்படி குற்றம் எனவும், இக்குற்றத்திற்கு தண்டனையாக மூன்றாண்டுகள் சிறைவாசத்தினையும் வழங்குகிறது. ஆலயத்தை தரைமட்டமாக்கிய குண்டர்களையும் மேம்பாட்டு நிறுவனத்தினரையும் காவல்த்துறையினர் கைது செய்து பீனல் கோட் சட்டப்பிரிவு 295-இன் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கவேண்டும்.

இந்நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள்மீது ஏழு நாட்களுக்குள் நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இதுநாள்வரை உடைப்பட்ட பல ஆலயங்களுக்காக திரு.உதயாவும் திரு.வேதாவும் பல முறையீட்டு மனுக்களை சமர்ப்பித்திருந்தாலும், ஒரு தடவைகூட நீதிமன்றத்தில் வழக்குகள் நடவாதது கண்டு மிகவும் அதிருப்தி கொள்கிறோம். குற்றமிழைப்பவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக் கொடுப்பதில் அட்டர்ணி செனரல் முனைப்பு காட்டினாலேயொழிய, ஆலய உடைப்பு விவகாரங்களுக்கு ஒரு தீர்வே கிடைக்காது. பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு கூட்டரசு பிரதேசங்களுக்கான துணை அமைச்சர் தமது அதிகாரப்பூர்வ அறிக்கையினூடாக , இனி எதிர்வருங்காலங்களில் எந்தவொரு வழிபாட்டுத் தளமும் உடைபடாது என வாக்குறுதி கொடுத்திருந்தார். என்ன ஓர் அப்பட்டமான பொய்? சனநாயகத்தின்மீதும், மக்களின்மீதும், நாடாளுமன்றத்தின்மீது அம்னோவிற்கு மதிப்பு கிடையாது. மலேசிய வரலாற்றிலேயே இரண்டில் மூன்று பெரும்பான்மையை அம்னோ இழந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஆலய உடைப்பு. புதிய அம்னோ தலைமைத்துவத்திலும் எந்தவொரு மாற்றமும் கிடையாது, ஆகையால் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்ற நாம் அடுத்த பொதுத்தேர்தலில் (2012-2013) அம்னோவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இதைத் தவிர்த்து வேறு வழியேயில்லை.

வாழ்க மக்கள்!

திரு.செயதாசு
இண்ட்ராஃப் மக்கள் சக்தி

ஆலய உடைப்பு தொடர்பான நிழற்படங்கள் கீழே..












போராட்டம் தொடரும்...

Read more...

பொது சேவைத்துறையில் வேலை வாய்ப்பு

>> Wednesday, June 17, 2009

Iklan Kerja Sektor Awam



கொடுக்கப்பட்டுள்ள சுட்டியைச் சுட்டி, விளம்பரத் தகவல் கொண்ட மென்நூலை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் : வேலை வாய்ப்பு

Read more...

கல்வி அமைச்சுக்கு ஒரு மின்னஞ்சல்..

>> Sunday, June 7, 2009





மேற்காணும் செய்தியைப் படித்தவுடன், உடனடி நடவடிக்கையாக இன்றே கல்வி அமைச்சுக்கு மின்னஞ்சல்வழி உங்களுடைய கோரிக்கையை அனுப்பவும்.

எசு.பி.எம் தேர்வில் அதிகபட்சம் 10 பாடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டால், தமிழிலக்கிய பாடம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை நினைவில் கொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்குங்கள்! தமிழை வாழ வையுங்கள்!

Read more...

புதிய பணிமனைக்குச் செல்லும் உதயகுமார்..

>> Saturday, June 6, 2009

இண்ட்ராஃப் வழக்கறிஞர் திரு.உதயகுமார் பங்சாரில் புதிய பணிமனை ஒன்றினை திறக்கவுள்ளார். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பங்சாரில் தன்னுடைய பழைய பணிமனையின் மாதக் கட்டணம் செலுத்தவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் இயலாது போனதால் மூட வேண்டியதாயிற்று. பல நல்லுள்ளங்கள் அவருக்கு பக்கபலமாக இருந்து நிதியுதவி அளிக்க முன்வந்தாலும், அப்பொழுது இசாவில் தடுத்து வைக்கப்படிருந்த உதயகுமார் அவ்வுதவியை மறுத்துவிட்டார்.

இருப்பினும், விடுதலைக்குப்பின் மீண்டும் 18 கோரிக்கைகளை முன்னெடுத்து போராடத் துவங்கியுள்ள உதயா அவர்கள், சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து 25 பிரிவுகளாக பட்டியலிட்டு வைத்துள்ளார். இந்த ஆய்வுகளைக் கொண்டு உதயா முன்னெடுக்கவிருக்கும் உரிமைப் போராட்டத்திற்கு புதிய செயலகமாக அமையவுள்ளது இப்பணிமனை.

இதற்கிடையில் எதிர்வரும் 19-ஆம் திகதி சூலை மாதம், கிள்ளான் ஒக்கியன் மண்டபத்தில் உதயா தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை வெளியிடுவார் என நம்பப்படுகிறது. அதுவரை பொறுமைக்காக்கும்படி இண்ட்ராஃப் ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





படங்கள் : ரேம்போ ரவி (நன்றி)

போராட்டம் தொடரும்...

Read more...

பினாங்கு தண்ணீர்மலையில் திரு.உதயகுமார் சிறப்புப் பிரார்த்தனை

>> Thursday, June 4, 2009



எதிர்வரும் 13-ஆம் திகதி (சனிக்கிழமை) இரவு 7.00 மணியளவில், பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு சிறீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் திரு.உதயகுமார் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளவிருக்கிறார்.

பினாங்கு மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் இச்சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். 2007-ஆம் ஆண்டில் பினாங்கு இண்ட்ராஃப் கருத்தரங்கிற்கு வருகைப் புரிந்த திரு.உதயகுமார், இ.சா விடுதலைக்கு பின்பு முதன்முறையாக பினாங்கிற்கு வருகை புரிவது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகவலை குறுந்தகவல்வழி தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கவும்


போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP