சுவர்ண பூமி - தமிழர்களின் தொப்புள் கொடி உறவு..

>> Sunday, December 30, 2007


இந்த நாட்டில் நம்மை யார் என்று கேட்கிறார்கள் சிலர்.. முதலில் அப்படி கேட்பவர்களுக்கு அவர்கள் யாரென்றே தெரியவில்லை. வரலாற்றின் ஏடுகளை சற்றே திருப்பிப் பாருங்கள்.. பக்கத்திற்குப்பக்கம் நம் தமிழ் மூதாதையர்கள் கதைதான்.. தமிழர்களுக்கும் மலையகத்திற்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என வரலாறுகள் சொல்கின்றன. இந்த நாட்டிற்கு சஞ்சிக் கூலிகளாகவா நாம் வந்தோம்? இல்லை அது தவறு..! இக்கருத்தை நம் மலேசிய இந்தியர்கள் மாற்றியாக வேண்டும்.. வணிகர்களாக, நாகரீகத்தை கற்றுக் கொடுக்கும் ஆசானாக அல்லவா நாம் இங்கு வந்தோம்.. அரசியலைச் சொல்லிக் கொடுத்தவர்களே நாம்தானே... 2000 ஆண்டுகளுக்கு முன்பே கால் ஊன்றிய நம் சரித்திரத்தை 200 ஆண்டுகள் என சுருக்கிவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றனர் சிலர்.. நாம் இங்கு வந்த விதமே வேறு.. வந்தக் காலமும் வேறு..அரசர்கள் நாம்..! இந்த மண்ணில் நாகரீகம் எனும் விதை துளிர்விடுவதற்கு தண்ணீர் பாய்ச்சியவர்கள் நாம்... நம்மைப் பார்த்து யார் என்று கேட்பவர்களுக்கு வரலாறு பதில் சொல்லும்.. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க சதிகள் பல நடந்தாலும், நமது உரிமைகளை என்றும் நம் தமிழர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நம்முடைய பின்னனியை அனைவரும் தெரிந்திருத்தல் வேண்டும். இதுத் தொடர்பாக சுவர்ண பூமி எனும் தொடர் கட்டுரையை உங்களுக்கு வழங்க இருக்கின்றேன்..



பகுதி 1

தென் கிழக்காசிய நாடுகளில் இந்து சாம்ராஜ்யம் கொடிக்கட்டிப் பறந்தக் காலம் அது.. அரசியல், நீதித்துறை, கலை, கலாச்சாரம், நாகரீகம், மொழி, வணிகம் என அனைத்திலும் இந்து மததின் தாக்கங்கள் இருந்தக் காலம் அது.. சுருங்கச் சொன்னால், தென்கிழக்காசிய மக்களின் நாகரீகம் இந்திய மண் போட்ட விதை. இந்த விதைத் தூவப்படாமல் இருந்திருந்தால், அன்று புகழின் உச்சத்தை அடைந்த சிறீ விஜயம், கடாரம், லங்கா சுகா, பாசாய், மாஜாபாகிட் போன்ற இராஜ்ஜியங்கள் சரித்திரத்தில் பேசப்பட்டிருக்கமாட்டாது..

2-ஆம், 3-ஆம் நூற்றாண்டுகளிலேயே சுவர்ணபூமியில் ஆங்காங்கே சில அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. இந்த அரசுகள் இந்து மதங்களைத் தழுவி, அதன் தர்ம சாஸ்திரங்களைப் பின்பற்றி இராஜ்ஜியம் செய்து வந்துள்ளன.


குறிப்பு : சுவர்ணபூமி (தற்போதைய தீபகற்ப மலேசியா) இப்பெயர், தமிழகத்திலிருந்து வணிக நிமித்தம் கடல்வழி அடிக்கடி வந்துப்போகும் தமிழ் வணிகர்களால் இம்மண்ணுக்கு சூட்டப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வணிகர்கள் சுவர்ணபூமியில் காலடி பதித்திருக்கின்றனர் என்பதற்கு பல மறுக்க முடியாத தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு அன்றையக் காலக்கட்டத்தில் சுவர்ணபூமியில் வாழ்ந்தவர்கள் அனைவரும் (காட்டு வாசிகளைத் தவிர) இந்து மதத்தையும் மகாயான புத்த மதத்தையும் தழுவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமர் 30 குட்டி அரசுகள் சுவர்ணபூமியில் தோன்றி மறைந்துள்ளதாக தடயங்கள் கூறுகின்றன. இந்த அரசுகளின் ஆட்சிக் காலமும் குறுகிய காலமாக இருந்துள்ளது, அதற்குக் காரணம், வடக்கில் கம்போடியாவில் மிகப் பெரிய இந்து சம்ராஜ்யமான 'அங்கோர் வாட்' சாம்ராஜ்யமும், தெற்கில் ஜாவாவில் இந்து அரசான 'மாஜாபாகிட்' அரசும் தலையெடுத்ததுதான்.



7-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து 13-ஆம் நூற்றாண்டுவரை சிறீ விஜயம் எனும் இந்து சாம்ராஜ்யம் தென் கிழக்காசிய பகுதிகளில் பெரும்பகுதிகளை ஆண்டு வந்தது. சிறீ விஜயத்தின் சாம்ராஜ்யம் அக்ஷய முனையிலிருந்து ( வடக்கு சுமத்திரா ) மயூரடிங்கம், மாப்பாலம், மேவிலிம்பங்கம், மாடமாலிங்கம் ( அனைத்தும் சுவர்ணபூமி தீபகற்பத்தில் வடப்பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்), யவத்வீபம் (ஜாவா தீவு ) வரை பரவியிருந்தது. இருப்பினும் 11-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் சோழ சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த முதலாம் இராஜேந்திர சோழன் அவரின் தலைமையில் (ஆண்டு 1025) மிகப் பெரிய கடற்படை ஒன்று சிறீ விஜயதின் மீது போர் தொடுத்தது. அப்போதைய கடாரத்தின் அரசனாக விளங்கிய சங்கம விஜயோத்துங்க வர்மன் (ஜாவா சைலேந்திர பரம்பரையைச் சேர்ந்த மன்னன்) சோழர்களிடம் அடி பணிந்தான். இருப்பினும், சிறீ விஜயம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை சுதாகரித்துக் கொண்டு மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியது. இழந்த பல ஊர்களை மீண்டும் கைப்பற்றியது (அவற்றில் கடாரமும் ஒன்று). இவ்விஷயம் அப்போதைய சோழ மன்னனான வீர இராஜேந்திர சோழனுக்கு தெரிய வந்ததும் மீண்டும் 1068-ஆம் ஆண்டில் கடராத்தின் அரசு சம்பத்தப்பட்ட உட்பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு (அப்போதைய கடாரத்தின் அரசன் சிறீ விஜயத்திடமிருந்து விடுதலை வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க) வீர இராஜேந்திரன் தலைமையில் மிகப் பெரிய கடற்படை ஒன்று கடாரத்தின் மீது படையெடுத்தது. முடிவில் சிறீ விஜயம் பின்வாங்கி அடிபணிந்தது, மீண்டும் கடாரம் சோழ நாட்டு இராஜ்ஜியத்தின் கீழ் வசமானது..

குறிப்பு : கடாரத்தின் மீது படையெடுத்த சோழ சாம்ராஜ்யத்திடம், 3 வகையான மரக்கலங்கள் (மரத்தினாலான கப்பல்கள்) இருந்துள்ளதாக வரலாறு கூறுகின்றன. 1. நெருங்கிய போகுவரத்துத் தொடர்பிற்கு சிறு ரக மரக்கலங்கள். 2. வணிக நிமித்தம் பண்டங்களையும், இதர பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்கு பெரிய மரக்கலங்கள். 3. கடல் கடந்து போர்ப் புரியக்கூடிய அதி நவீன வசதிகள் கொண்ட மிகப் பெரிய மரக்கலங்கள். மரக்கலங்களுக்கு பொறுப்பேற்றிருப்பவர்களை கலபதி என அழைப்பர்.



தமிழ் நாட்டினருக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. கெடாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று முதலாம் குலோத்துங்கச் சோழனால் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சமஸ்கிருத மொழியில் சோழ நாட்டிற்கும் கடாரத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பை விளக்கிக் காட்டியுள்ளது. அதுப்போக புக்கிட் மெரியாம், மூடா ஆற்றின் படுகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : கடாரத்திற்கு மேலும் சிலப் பெயர்கள் உள்ளன, அவை கடகா, கிடாரம், ரக்தாம்ருதிகா (சிவப்பு மண்)

சோழ சாம்ராஜ்ஜியத்தில் கடாரம் மிகவும் செழிப்பாகவும், வணிக ரீதியில் அவ்வட்டாரத்திலேயெ மிக முக்கியமான ஒரு நகரமாகவும் திகழ்ந்துள்ளது. தமிழ் வணிகர்களும் தங்கள் வணிகங்களை கடாரம், சிறீ விஜயம், ஃபூனான், சம்பா போன்ற அரசுகளில் செய்திருக்கிறார்கள். இதன் வழியே இந்து மதமும் தென் கிழக்காசிய வட்டாரத்தில் வெகு வேகமாகப் பரவலாயிற்று. இந்து மதம் வணிகர்களாலேயெ பரவியது எனவும், போர் முறைகளினால் அல்ல எனவும் வரலாற்றுக் கூறுகள் பறைச்சாற்றுகின்றன.

மூலம் :

Keay, John, India A History, Harper Collins Publishers, New Delhi, 2000.
Cholas: http://www.lotussculpture.com/bronze_sculpture_chola_empire.htm
Extent of Chola territories : http://www.india-history.com/medival-india/chola-empire.html
Tamil Nadu History: http://www.1upindia.com/states/tamilnadu/history.html
Architecture of the Chola Empire : http://tamilnation.org/culture/architecture/thanjavur.htm
Chola Bronze sculptures: http://tamilnation.org/culture/cholabronze.htm.
UNESCO World Heritage sites constructed by the Chola Empire: http://whc.unesco.org/pg.cfm?cid=31&id_site=250
Southeast Asian conquests: http://www.sabrizain.demon.co.uk/malaya/hindu1.htm
Thanjavur Temple: http://www.tamilnation.org/culture/architecture/thanjavur.htm

தமிழர் ஆட்சி தொடரும்...

Read more...

இவ்வாண்டு மலேசிய சமுதாயத்தால் எதிர்நோக்கப்பட்ட 10 முக்கிய போராட்டங்கள்...

>> Saturday, December 29, 2007

2007-ஆம் ஆண்டு மலேசிய இந்தியர்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டாகும். இந்தியர்கள் விழிப்புணர்வு பெற்ற ஆண்டாகும். அதேப் போல் மனித உரிமைகளுக்கும், மத சுதந்திரங்களுக்கும் சவாலாக அமைந்த ஆண்டு எனவும் குறிப்பிடலாம். ஆண்டு இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், சற்றே இவ்வாண்டின் போராட்டங்களை நினைவுக் கூர்ந்து பார்ப்போம். மலேசியாக்கினி 2007-ஆம் ஆண்டுக்கான 10 முக்கியமான உள்நாட்டின் போராட்ட நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக பட்டியலிட்டுள்ளது. இதோ அதுத் தொடர்பான படக்காட்சி கீழே :




2008-ஆம் ஆண்டு நம் சமுதாயத்திற்கு ஒரு மறுமலர்ச்சி ஆண்டாக மாறிட உரிய செயல்களில் இறங்குவோமாக.. அதற்கு இறைவனின் துணை என்றும் இருக்க அவரைப் பிரார்த்திப்போமாக...

போராட்டம் தொடரும்...

Read more...

மலேசிய இந்தியர்களுக்கு ஒரு சிறு படக்காட்சி..



நன்றி : திரு.யுகா சக்ரவர்த்தி

நாம் இங்கு வந்தோம் எனக் கூறும்பொழுது கடாரத்தை வென்றெடுத்தக் காலத்தைக் காட்டியிருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். மலையகத்தைப் பொருத்தமட்டில் நம்முடைய உறவானது மிக பழமையானது, ஆனால் சில அரசியல் தந்திரவாதிகள் இவ்விஷயத்தைப் பற்றி அதிகம் பேசவிடாமல், நாம் கூட்டம் கூட்டமாக 1800 களில் மலாயாவிற்கு வந்ததைச் சுட்டிக் காட்டி நம் சரித்திரத்தை சுருக்கி விட்டார்கள். இந்த மண் நம்முடையது, நம்முடைய பங்களிப்பு இந்த நாட்டிற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்திருக்கின்றது. எனவே இந்த மண்ணில் தனி மனித சுதந்திரத்திற்கு போராடுவதில் நமக்குதான் அதிகம் உரிமையும் கடப்பாடும் உள்ளது என அறிக.. நம் உரிமையை எந்த ஒரு காலக்கட்டத்திலும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வோம்..

போராட்டம் தொடரும்....

Read more...

ஒன்பது வயது சிறுவன் வாக்காளர் பட்டியலில் சேர்ந்தது எப்படி?

>> Friday, December 28, 2007


மலேசியாவின் சாதனைகளுக்கு பஞ்சமே இல்லை.. உலகத்திலேயே ஒன்பது வயதுச் சிறுவன் தேர்தல் வாக்காளராக பதிவாகியிருக்கின்றான்.. http://daftarj.spr.gov.my/daftar.asp எனும் அகப்பக்கத்திற்குச் சென்று 981231081137 எனும் அடையாள அட்டை எண்களை பதிவுச் செய்து சுட்டிப் பாருங்கள்.

நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைத்தான் அந்த அகப்பக்கத்தில் காண்பீர்கள்...

SURUHANJAYA PILIHAN RAYA MALAYSIA
SEMAKAN DAFTAR PEMILIH SEHINGGA SUKU KETIGA TAHUN 2007

MEDAN KETERANGAN
Kad Pengenalan : 981231081137 / 1207648
Nama : HJ ABD WAHAB B MD SAMAN
Jantina : LELAKI
Lokaliti : 092 / 02 / 11 / 008 - PARIT 8 TIMOR
Daerah Mengundi : 092 / 02 / 11 - TEBUK KENCHONG
DUN : 092 / 02 - SABAK
Parlimen : 092 - SABAK BERNAM
Negeri : SELANGOR
Status Rekod : DATA INI UNTUK SEMAKAN DAFTAR PEMILIH
Sebarang pertanyaan : info@spr.gov.my

இதுப்போல் இன்னும் எத்தனை சாதனை வாக்காளர்கள் இருக்கிறார்களோ?

தேர்தல் ஆணையத்திற்கும், நடப்பு அரசாங்கத்திற்கும் ஒரு சபாஷ் கூறிக் கொள்வோம்..

Read more...

பெனாசிர் பூட்டோ மறைந்தார்.. ஜனநாயகம் இருண்டது...


வியாழக்கிழமை அன்று பெனாசிர் பூட்டோ ரவால்பிண்டியில் பொதுத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுவிட்டு தமது காரில் ஏறும்பொழுது ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்திருக்கிறார். அவ்வேளை அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபரால் கழுத்தில் சுடப்பட்டார். சுட்டதும் அந்த மர்ம நபர் உடலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். குண்டு வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சுடப்பட்ட பெனாசீரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைப் பலனளிக்காமல் மாலை மணி 6.16க்கு (பாகிஸ்தான் நேரப்படி) உயிர் நீத்தார். மருத்துவ அறிக்கையில் பெனாசிரின் உயிர் பிரிந்த காரணம் தலையில் சுடப்பட்டதனால்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.



இவரின் உயிர்ப் பிரிவுக்கு உலக நாடுகள் அனுதாபமும் கண்டனமும் தெரிவித்துள்ளன. நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சி பூத்துக் குலுங்க வேண்டும் என அரும்பாடுபட்டவர்களில் பெனாசிர் பூட்டோவும் அடங்குவார். இவரை இரும்புப் பெண்மணி என அவருடைய ஆதரவாளர்கள் அழைப்பர். இவருடைய தந்தை முன்னால் பாகிஸ்தான் பிரதமர் சூல்பிகார் அலி பூட்டோ ஆவார். இவர் இங்கிலாந்து 'OXFORD' பல்கலைக்கழகத்திலும் அமெரிக்கா 'HARVARD' பல்கலைக்கழகத்திலும் பட்டப் படிப்பை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்து பின்பு நாடுகடத்தப்பட்டு அண்மையில்தான் பாகிஸ்தான் திரும்பினார். இவருடைய உயிரிழப்பு பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் இழப்பாகும். இனியும் ஜனநாயகம் என்ற பேச்சுக்கு அங்கு இடம் இருக்கிறதா? முடிவு மக்கள் கையில்...

இன்னும் சில நாட்களில் உள்நாட்டுக் கலகம் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளதாக பல இயக்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. அதிபர் முஷாராப் மீண்டும் அதிபர் பதவியில் அமர்ந்து இராணுவ ஆட்சி செலுத்தி வருகிறார். இத்தகு ஆட்சி பாகிஸ்தான் மக்களுக்கு பல வகையில் கெடுதிகளைக் கொண்டு வருவதோடு, பல பொதுமக்களின் உயிர்கள் இன்னும் எத்தனை பலியாகவுள்ளதோ எனும் அச்சம் நிலவி வருகின்றது. இப்படுகொலைக்கு அல்-கயிடா பொறுப்பு என சில தரப்புக்கள் தெரிவிக்கின்றன, மறுபுறம் அதிபர் முஷாராபின் கையாட்கள் இப்படுகொலையைப் புரிந்திருக்கக் கூடும் என சில தரப்புக்கள் தெரிவிக்கின்றன... ஐக்கிய நாட்டுச் சபை இந்தப் பிரச்சனையில் தலையிட்டு சுமூகமானத் தீர்வை எடுக்க வேண்டியது அதன் கடமையாகும்.

அல்-ஜஸீரா செய்திகள்





Benazir Bhutto assassination



AAJ TV coverage in the BBC’s translation on the assassination of Benazir Bhutto. (This was the moment before she was shot in the car.)
Location : Rawalpindi, Pakistan
Target(s) : Benazir Bhutto
Date : December 27, 2007
Attack type : Suicide attack, Gun shooting, Bombing
Deaths : 21 - 22 (No official number released yet)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக...

Read more...

இந்து உரிமைப் பணிப்படையின் அகப்பக்கத்தை திறக்க ஒரு வழி...

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கீழே கொடுக்கப்பட்டுள்ள அகப்பக்கத்தைச் சொடுக்கி, அங்கு கொடுக்கப்பட்டுள்ள காலியான இடத்தில் http://www.policewatchmalaysia.com/ என டைப் செய்யுங்கள். பின்பு 'Browse'ஐ சொடுக்குங்கள். உடனடியாக நீங்கள் இந்து உரிமைப் பணிப்படையின் அகப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.




நீங்கள் சொடுக்க வேண்டிய அகப்பக்கத்தின் முகவரி இதுதான் : http://www.freeproxyserver.ca/

குறிப்பு: மேற்குறிப்பிட்ட முறை தற்போது தடங்களில் உள்ளது. எனவே இந்த நேரடி முகவரியைச் சொடுக்குங்கள் :
http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.policewatchmalaysia.com

முடிந்த மட்டும் இந்த தகவலை நம் சகோதரர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...
தேவைப்படாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்...

*தற்போது மேலே கொடுக்கப்பட்டுள்ள இரு இணைய முகவரிகளும் செயல்படவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வேறு தகவ்லகள் கிடைப்பின் அதனை உங்களுக்கு கொடுக்கின்றேன்.. 31/12/07

*தற்போது இன்னொரு புதிய இணைய இணைப்பு உங்களை இந்து உரிமைப் பணிப்படையின் அகப்பக்கத்திற்குக் கொண்டுச் செல்லும். ஆனால் இந்த இணைப்பில் சில நீலப் பட விளம்பரங்கள் சில வேளைகளில் காணப்படும். அதனை கண்டுக்கொள்ள வேண்டாம். இதோ இங்கே சுட்டுங்கள் :

இந்து உரிமைப் பணிப்படை / 02/01/2008



போராட்டம் தொடரும்....

Read more...

25 இந்தியர்களின் மீதான தண்டனை தீர்ப்பு ஒத்திவைப்பு...

>> Thursday, December 27, 2007

இன்று ஷா ஆலாம் செக்ஷன் நீதிமன்றம் இந்து உரிமைப் பணிப்படை நடத்திய அமைதிப் பேரணியில் கலந்துக் கொண்ட 25 இந்தியர்களின் மீது தொடுக்கப்பட்டக் குற்றச்சாட்டு தொடர்பான தண்டனைத் தீர்ப்பை வருகின்ற பிப்ரவரி 1-ஆம் திகதி தள்ளி வைத்துள்ளது.

ஆரம்பத்தில், இவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பின்பு அக்குற்றச்சாட்டு தலைமை வழக்கறிஞர் தான் சிறீ அப்துல் கனி பதாயில் அவர்களால் மாற்றி அமைக்கப்பட்டது.

25 இந்தியர்களின் தண்டனை தொடர்பான தீர்ப்பு, வழக்கறிஞர் முகமது யூசுப் சைனால் அபிடின் கேட்டுக்கொன்டதற்கு இணங்க தள்ளிவைக்கப்பட்டது. செலாயாங் நீதிமன்றத்தில் ஒரே விதமான குற்றசாட்டில் கைதான இந்தியர்களையும் ஷா ஆலாம் நீடிமன்றத்தில் நிறுத்தி தண்டனைக் கொடுக்க நீதிமன்றம் முடிவெடுத்தது.

இச்செய்தி தொடர்பான மலேசியாக்கினி படச்சுருள் கீழே...


Read more...

பினாங்கில் மக்கள் சக்தி ஏற்பாட்டில் பால் அபிஷேக பூஜை மற்றும் அமைதிப் பிரார்த்தனை


சகோதரர்களே, எதிர்வரும் 1-1-2008 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி தொடங்கி பினாங்கு, தண்ணீர்மலை சிறீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் சிறப்புப் பூஜையும் பாலாபிஷேக கூட்டுப் பிரார்த்தனை, அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைப்பெறும்.

குறிப்பு : தயவு செய்து பால் குடம் ஏந்தும் அன்பர்கள் அன்றைய தினம் சைவமாக இருந்து முருகப் பெருமானுக்கு பால் குடம் எடுத்து வந்து நம் 5 தியாகிகளையும் நல்ல முறையில் விடுவிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்..

மேலும் தகவல்களுக்கு, அழைப்பிதழைப் பாருங்கள்.

அழைப்பிதழ் பதிவிறக்கம்

போராட்டம் தொடரும்...

Read more...

இந்து மதத்தைக் கேலி செய்பவர்களின் வாயை மூடுவது எப்படி?


காலங்காலமாக நம் இந்து மதம் எந்த ஒரு மதத்தினரையும் தாக்கி பேசியது இல்லை, பிற மதத்தினரை நம் மதத்தில் சேர வற்புறுத்தியதில்லை, சண்டைக்குச் சென்றதில்லை. யார் தூற்றினாலும் இந்து மதம் எனும் ஆல மரம் இன்னும் பல கோடி மக்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது, இருக்கும்...

இப்படி ஒரு அகிம்சைக் கொள்கையைத் தன்னுள் அடக்கிக் கொண்டதால்தான் இன்றளவிலும் இந்து மதம் இருந்து பலரை வாழ வைக்கிறது. இப்படிப்பட்ட இந்து மதத்தை கேலி செய்தவர்கள் ஏராளம், ஆனால் இந்தக் கேலிக் கிண்டல்களுக்கு பதில் கூற முடியாமல் தவித்த இந்துக்கள் மிக மிக ஏராளம். காரணம் இந்து மதத்தின் உட்சாரங்களை அறியாமல் இருப்பதுதான், அதோடு ஒவ்வொரு குடும்பத்திலும் சமயத்தின் உட்கருத்துக்களை பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறாததால்தான்..

இங்கு எனக்குக் கிடைத்த மின்னஞ்சல் மடலை உங்களுக்கு மலாய் ஆங்கில மொழிகளில் கொடுக்கிறேன். இதில் இந்து மதம் கேலிக்குள்ளாகும் போது நாம் எப்படி விவேகமான முறையில், கேள்வி கேட்பவரின் வாயடைத்துப் போகும்படி பதில் அளிக்க வேண்டும் என சில சம்பவங்களை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் மடல் :

"The same thing happend to me when i was in my secondary school. During moral class, my malay teacher asked us (only 3 indian students in our class) "why indians can drink cow's milk but not the meat" and laughed and she said "tak masuk akal kan?, peliklah kaum india".

My 2 friends were kept quite but i answered her "cikgu, saya tanyak cikgu satu soalan boleh jawab tak? cikgu minum susu emak cikgukan? lepas dah besar ada sembelih mak cikgu dan makan ke?" all my classmates including chinese clapped.

She looked at me and told me that "kamu ini seorang!!! saya gurau
tadi. you ini bolek jadi lawyer lah. pandai cakap"

and guess what? i met her in my malay friends wedding on 30/11/07 and proudly told her that i am doing LLB. she was surprised and kept silence. she never even turn and see my face.

on the other ocassion, my malay friend teased me by saying that "kenapa india sembah patung? kenapa ada banyak tuhan. satu tuhan tak cukupke you orang? sembah batu?"lauged".

i told her "itu sama macam malay buat sembahyang ke arah batu hitam "batu Hajar Aswad" di mecca. malay percaya cium batu hitam ini akan buang segala dosa kan? sama lah orang india percaya sembahyang jelamaan tuhan akan buang dosa mereka.

the speciality of hinduism is kita tak pernah kutuk religion lain atau pun tak pernah halang/paksa penganut agama lain untuk belajar pasal hinduism"

So guys, if anyone attcked our religion or believe, attack them back
with good answers."

அடுத்தமுறை உங்களிடம் இப்படிப்பட்ட கேள்விகள் வந்தால், விவேகமாக சிந்தித்துப் பதில் கூறுங்கள்.

Read more...

தமிழ் இணையத்தளங்களின் பட்டியல்

இங்கு 700க்கும் மேற்பட்ட தமிழ் வலைத்தளங்களின் முகவரிகள் உள்ளன. பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள் : தமிழ் இணையத்தளங்கள்

Read more...

மலேசிய இந்தியர்களின் நிலை...

உண்மையான போராட்டம் என்பது திடீரென்று வந்துச் செல்லும் புயற்காற்று அல்ல. அது வாழ்க்கையின் ஒவ்வொரு அடிநாதத்தையும் பதம் பார்த்து உயிரோடு கலந்திருக்கும் ஒரு உணர்ச்சியின் கொந்தளிப்பு. அதுப்போல்தான் நம்முடைய போராட்டமும். நம்முடைய போராட்டம் பொறுமையாக இருந்து இருந்து இறுதியில் வெடித்த எரிமலைக்கு ஒப்பாகும். இந்த எரிமலை வெடிக்கக் காரணமாக இருந்ததே அரசாங்கம்தான். ஆனால், ஒன்றுமே அறியாததுப்போல் அரசாங்கம் நடிப்பது வேதனைக்குரியது. பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவதுப்போல் இந்தியர்களுக்கு பலத் திட்டங்கள் கொண்டுவரப் போவதாக தினசரி அறிவிப்புக்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இவைகளைப் பார்த்து நம் சமுதாயம் இனியும் ஏமாறாது என்பது திண்ணம்.



ஏன் 25-ஆம் திகதி நவம்பர் நாம் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினோம்? அதன் பின்னனி என்ன? கீழே உள்ள படத்தொகுப்புகள் உங்களுக்கு பதில் கூறும். ஆர்ப்பாட்டத்தில் இறங்குவதற்கு முன் எத்தனை தடவை முறையாக மகஜர்கள் பல வழங்கப்பட்டன.. அவைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்தனவா? நீங்களே பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



பகுதி 5



பகுதி 6



போராட்டம் தொடரும்...

Read more...

இன்றைய பதிவிறக்கம்...

>> Tuesday, December 25, 2007

சுபாவின் தமிழ் நாவல் "காத்திருக்கிறேன்" மென்புத்தகம் : பதிவிறக்கம்

Read more...

நெஞ்சம் விம்முகிறது...

>> Saturday, December 22, 2007


நித்தியாவரி த/பெ முருகன் , 11 வயதே ஆன சிறுமிக்கு சிறுநீரகப் பையில் கடுமையான நோய் (Lypomonogycial Terterd Cord, Uregynic bowel bladder lower limb weakness Neurogynic bladder)ஏற்பட்டுள்ளது. அதோடு சஞ்ஜீவ் ராவ் த/பெ சரவணன் 1 வயது 4 மாதமே ஆன குழந்தைக்கு குண்டிக்காய் ஒன்று செயலிழந்து (posterior urethral valve with non functioning left kidney) கடும் நோயால் அவதியுருகிறார். இவ்விரு ஜீவன்களும் ஓடியாடி விளையாடுவதை நாம் காணவேண்டாமா? சகோதரர்களே தயவு செய்து இந்த பிஞ்சுகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

இந்த பிஞ்சுகளுக்கு உதவும் வகையில் கல்லூரி இந்திய அமைப்பும் மற்றும் அஸ்ட்ரோ, தி.எச்.ஆர், தமிழ் நேசன் உதவியுடன் ஒரு கலை இரவு நடைபெறவுள்ளது.

திகதி : 13 Januari 2008 ( ஞாயிறு )

நேரம் : 7.31 மாலை -11.45 இரவு

இடம்: DECTAR, Universiti Kebangsaan Malaysia

மேலும் தகவல்களுக்கு இங்கே சுட்டுங்கள் : நித்தியாவரி, சஞ்ஜீவ் ராவ்






கலைநிகழ்ச்சிகளிலேயே சிறந்த கலைநிகழ்ச்சி துன்பப்படுபவர்களுக்கு உதவும் கலைநிகழ்ச்சிதான்.. எனவே இக்கலைநிகழ்ச்சி தன் நோக்கத்தில் வெற்றிப்பெற நாம் உதவிடுவோம்.. நிச்சயம் இக்குழந்தைகள் குணமடைவார்கள்.. இவர்கள் நலமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்...

Mr.Robert(Chief Director) - 017-6329045
Mr.Thuresh 017-4233460

Read more...

இன்றைய பதிவிறக்கம்...

அரசாங்க வேலைகள் தொடர்பாக பாரங்கள் வெளிவந்துள்ளன.. பெரும்பாலும் மலாய் நாளிதழ்களில் மட்டுமே அரசாங்க உத்தியோகம் தொடர்பான தகவகள் வெளிவருகின்றன, தமிழ் நாளிதழ்களில் வருவது குறைவு, எனவே தமிழ் நாளிதழ்களை புரட்டுபவர்களுக்கு வேலை வாய்ப்புத் தொடர்பான தகவல்கள் தெரியாமல் போய் விடுகிறது. இதனை சரி செய்வதற்கு மலேசிய தமிழ் நாளேடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரங்களைப் பூர்த்திச் செய்து அனுப்பிச் சேர வேண்டிய இறுதி நாள் 28 டிசம்பர் ஆகும்.

மனு பாரம் : பதிவிறக்கம்

உத்தியோகப் பட்டியல் : பதிவிறக்கம்

Read more...

ஈப்போவில் இயங்குகிறது வேத பாட சாலை


ஈப்போவில் திரு இராஜசேகரன் ஐயா அவர்கள் வேத பாடங்களும் சாஸ்திர வகுப்புகளும் மற்றும் விக்கிரக அபிஷேக ஆராதனையோடு பஜனை போன்ற சமய அனுஷ்டானங்கள் நடைப்பெற்று வருகின்றன. ஐயா திரு இராஜசேகரன் அவர்களின் புதிய சிந்தனைகள் என்னை பலமுறை அவர்பால் ஈர்த்துள்ளது. அவரின் தொண்டுகள் தொடர வேண்டும், நம் சமயம் தழைக்க வேண்டும். அவர் தொடங்கியிருக்கின்ற சிறீ மடம் திவ்யஸ்தானம் எனும் அமைப்பு தொடர்பாக இங்கே சில தகவல்கள், மற்றும் அதன் வலையகம்.

சிறீ மடம் திவ்யஸ்தானம் : நோக்கம்

சிறீ மடம் வலையகம் : http://srimatam.ning.com/

Read more...

இ.சா சட்டத்தை ஒழிப்போம், இன்றிரவு அமைதிப் பேரணி தள்ளிவைக்கப்பட்டது..



உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் சர்வசாதாரணமாக பொது மக்கள் மீது பாயும் நிலைமை இன்று மலேசியாவில் இருந்து வருகிறது. Gerakan Mansuhkan ISA (GMI)எனும் ஓர் இயக்கம் இன்றிரவு சரித்திர புகழ் வாய்ந்த டதாரான் மேர்டேக்கா சதுக்கத்தில் அமைதிப் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இவ்வமைதிப்பேரணி வரும் ஜனவரி 5 ஆம் திகதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவ்வியக்கத்தின்(GMI)செயலாளரான நளினி அவர்கள் அமைதிப் பேரணி தொடர்பாக கருத்துரைக்கும்பொழுது இ.சா சட்டம் மக்களின் உரிமைகளைக் காக்கத் தவறிவிட்டதாகவும், இந்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.இவ்வமைதிப் பேரணி கமுந்திங்கில் உள்ள இ.சா கைதிகளுக்காவும், இப்பேரணிக்கு அனுமதி யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை எனவும் தெரிவித்தார். அமைதியான முறையில் கூடுவது என்பது மக்களின் உரிமை. இவ்வமைதி பேரணியில் அனல் பறக்கும் பேச்சுக்கள் இருக்காது, அமைதியே எங்களது பாஷை என அவர் கூறினார். இதற்கிடையில் காவல் துறையினர் இவ்வமைதிப் பேரணியில் பொது மக்கள் யாரும் கலந்துக் கொள்ளக் கூடாது, மீறி கலந்துக் கொண்டால் கைதாவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரின் இந்த அறிக்கையானது மனித உரிமைக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்நாட்டில் மனித உரிமை கேள்விக்குறியாகும் நிலை தொடராமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் அமைதியான முறையில் பேரணியில் கலந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே 5-ஆம் திகதி ஜனவரியில் மலேசிய வரலாற்றில் புது சரித்திரம் எழுதப்படட்டும்...

இதற்கிடையில் சிங்கப்பூர் ஜனநாயக கட்சி மலேசிய அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மனித உரிமைகளை மலேசிய அரசாங்கம் மதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் படக்காட்சி கீழே :



போராட்டம் தொடரும்...

Read more...

இன்றைய மென்புத்தகங்கள்

>> Friday, December 21, 2007

உங்களுக்காக சில மென் புத்தகங்கள் பதிவிறக்கம் இங்கே :

குரு பெயர்ச்சிப் பலன்கள் : பதிவிறக்கம்

மழலையர்களுக்கான கதைகள் : பதிவிறக்கம்

தந்தை பெரியார் சொந்தமாக எழுதிய சுயசரிதை : பதிவிறக்கம்

படித்துப் பயன்பெறுங்கள்...

இந்து உரிமைப் பணிப்படையின் ஊழியனாக இருந்துக் கொண்டு ஏன் நான் பெரியாரின் சுயசரிதத்தை வெளியிட வேண்டும்? எப்பொழுதுமே நாம் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதோ, அல்லது கண்டனத்திற்கு ஆட்படுத்த முயலும்போது, அது தொடர்பான தகவல்கள் நமக்கு அக்கு வேரு ஆணி வேரு எனத் தெரிந்திருப்பது மிகவும் அவசியமானது. முறையான தகவல்கள் நம் விரல் நுனியில் இருப்பின் நாம் எந்த ஒரு சித்தாந்தத்தையும் ஒட்டியோ அல்லது வெட்டியோ பேசலாம். இந்து மதத்தையும், கடவுள் மறுப்புக் கொள்கைப் பற்றியும் நாம் பேசும்பொழுது நமக்கு அதன் கருத்துக்கள் முதலில் தெரிந்தாக வேண்டும். ஒரு அரசியல்வாதி இன்னொரு எதிர்க்கட்ட்சியினரைப் பற்றி குறைக் கூறும்பொழுது, முதலில் அக்கட்சித் தொடர்பாக இவருக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரால் எதிர்க்கட்சியினரின் சித்தாந்தங்களை மறுத்து பேசக் கூடிய தகுதி அடைகிறார். எனவே, நாம் வெறுக்கும் சில சித்தாந்தங்களையும் படித்துக் கொள்வது நம்முடைய எண்ணங்களை மாற்றுவதற்கு அல்ல, எண்ணங்களை வளுப்படுதுவதற்கு. இருப்பினும் பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவராக இருந்தாலும், சமுதாயத்தில் சில ஆக்கப்பூர்வமான செயல்களையும் செய்திருக்கிறார். விதவைத் திருமணம், ஜாதி ஒழிப்பு என இன்னும் பல. நாம் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம். நமக்கு ஒவ்வாததை புறந்தலாமல் வெட்டி பேசுவதற்கு நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என அவற்றை நாம் சேகரித்துக் கொள்வோம். அடுத்த முறை எனக்கு 'கணிக வாக்கியம்'அல்லது Machiavelli-யின் 'The Prince' மென் புத்தகங்கள் கிடைத்தால் அதையும் படியுங்கள். அடுத்தவரை அழிப்பது எப்படி என்கிற புத்தகம் அது... அரசியல்வாதிகளுக்கு பிடித்த புத்தகம்... அதற்காக அடுத்தவரை அழிக்க நினைப்பது நம் நோக்கம் அல்ல. அழிவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு...

Read more...

பதவி விலக மாட்டேன்! அடம் பிடிக்கிறார் சாமிவேலு...



இப்போதைய சூழ்நிலையில் பதவி விலக மாட்டேன், இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் நிறைய உள்ளன. எல்லா கடமைகளையும் நிறைவேற்றிய பின்னரே பதவி விலகுவேன் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ சிறீ ச.சாமிவேலு அறிவித்தார். புதன்கிழமை ஆர்.டி.எம் 1-இல் அமைச்சருடன் 60 நிமிடங்கள்' எனும் நேர்க்காணல் நிகழ்வில் இதனை அவர் தெரிவித்தார். எல்லா விவகாரங்களையும் நிறைவேற்றிய பின்னரே ( சுருட்ட வேண்டியதையெல்லாம் சுருட்டிய பிறகே ) பதவியில் இருந்து விலகுவேன். அதன்பின்னரே தகுதியான ஒருவர் என் பதவிக்கு வருவார் என்றார் அவர். நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட அந்தப் பேட்டியில் ம்.இ.கா தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி விட்டீர்களா? என்று தொலைக்காட்சி நிருபர் சபாருடின் அகமட் சப்ரி கேட்ட போது, ம.இ.கா தலைவராக 30 ஆண்டுகளாக (யாருக்கும் வாய்ப்புக் கொடுக்காமல்) இருந்து வருகிறேன். பதவி விலகும் முன் எனது 30 ஆண்டு கால அர்ப்பணிப்பை ( ஊழலை, அராஜகத்தை) கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நேரம் வரும்போதே (மண்டையைப் போடும் போது) பதவி விலகுவேன் என்றார் அவர். மலேசிய இந்தியர்கள் தேசிய முன்னனி சின்னத்திற்குத்தான் வாக்களிக்கின்றனர். ம.இ.கா சின்னத்திற்கு அல்ல என்று சாமிவேலு கூறினார்.(இனியும் அதுபோன்ற தவறு நடக்காது, கவலை வேண்டாம்.) பிரச்சனைகள் தலையெடுக்கும்போது ஓரிரு மாதங்கள் சஞ்சலத்தில் இருப்பர். பின்னர் மறந்துவிடுவர் என்று அவர் சொன்னார். (இதிலிருந்து தெரிகிறது, இவர் எப்படி இந்தப் பதவியில் பல ஊழல்களையும் அராஜகங்களையும் செய்தப் பின்னரும் இன்னும் பதவியில் நீடித்திருக்கிரார் என்று. இந்திய மக்களின் மனோபாவத்தை படித்து வைத்திருக்கிறார். ஆனால் வரும் காலங்களில், இந்தியர்களின் மனோபாவமே வேறு மாதிரி இருக்கப் போகிறது. இது நிச்சயம்...!! இனியும் ஏமாற்றுபவர்களுக்கு பதிலடி கொடுக்கப் போகிறார்கள் மலேசிய இந்திய மக்கள்...

போராட்டம் தொடரும்...

Read more...

ஐவரின் விடுதலைக்காக பத்துமலையில் சிறப்புப் பிரார்த்தனை! -பலர் தலைமுடி காணிக்கை

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் கைது செய்யப்பட்ட இந்து உரிமைப் பணிப்படை குழுவின் () தலைவர்கள் ஐவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதற்காக நேற்று பத்துமலையில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. காலையில் பத்துமலை திருத்தலத் தில் கூடியவர்கள் அமைதியான முறையில் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இசா சட்டத்தின் கீழ் பி.உதயகுமார், மனோகரன் மலையாளம், கணபதிராவ், கங்காதரன், வசந்தகுமார் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தைப்பிங், கமுண்டிங் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோரும் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்கள் அனைவரும் விடுதலை பெற வேண்டி பத்துமலையில் சிறப்புப் பிரார்த்தனை நேற்று நடத்தப்பட்டது. அதே சமயம் இந்து உரிமைப் பணிப்படை பேரணி தொடர்பில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளோருக்கு எதிரான வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படு வதற்கும் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இசாவின் கீழ் கைதான ஐவர் விரைவில் விடுதலைப் பெறுவதற்கு சிலர் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர். சிறுபிள்ளைகளும் முடி இறக்கியதைக் காண முடிந்தது. சிறப்புப் பிரார்த்தனை முடிந்ததும் அதில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனர். இதற்கிடையே இதுபோன்ற சிறப்புப் பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிகிறது. பத்துமலையில் நேற்று நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் சுமார் 300 பேர் பங்கேற்றனர் என்று கெஅடிலான் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம் தெரிவித்தார். குமரேசன் என்பவர் இதற்கு ஏற்பாடு செய்திருந்ததாக அவர் கூறினார். சுமார் 16பேர், தங்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார். இவர்கள் பத்துமலை தைப்பூச விழாவில் முருகப் பெருமானுக்கு தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்த விருந்தவர்கள். ஆனால், இசா கீழ் கைதான ஐவர், விரைந்து விடுதலையாக வேண்டும் என வேண்டி இவர்கள் முன்கூட்டியே தலைமுடியை காணிக்கையைச் செலுத்தியதாக அவர் கூறினார். கெஅடிலான் உதவித்தலைவர் சிவராசாவும் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

மலேசியாக்கினி படக்காட்சி




போராட்டம் தொடரும்...

Read more...

ஒட்டாவா, கனடாவில் தமிழர் அமைப்புகள் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவு..!

>> Tuesday, December 18, 2007

ஒட்டாவா, கனடாவில் தமிழர் அமைப்புகள் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக மலேசியத் தூதரகத்தின் முன் அமைதிப் பேரணியில் ஈடுப்பட்டனர். அதன் படக்காட்சிகள் கீழே...









போராட்டம் தொடரும்...

Read more...

31 இந்தியர்கள் விடுதலை..!!

பத்துமலை சுப்பிரமணியர் ஆலய திருத்தலத்தின் முன் கூடி போலீசாரை கொலை செய்ய முற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 31 இந்தியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நேற்று அரசு தரப்பு வாபஸ் பெற்றுக் கொண்டதால் அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இரு வாரங்களாக சுங்கை பூலோ மற்றும் காஜாங் சிறைச்சாலையில் இருந்து வந்த அவர்கள் அனைவரும் நேற்று விடுதலையான தீர்ப்பைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். நீதிமன்றத்தில் குழுமி இருந்த 31 பேரின் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த விடுதலையில் 6 கல்லூரி மாணவர்கள் முழு விடுதலையும் மற்ற 25 பேர்களுக்கு டிசம்பர் 27-இல் மீண்டும் விசாரணை நடைபெறும் எனத் தெரிய வந்துள்ளது. கல்லூரி மாணவர்களான எஸ்.முகிலன் (வயது 20), கே.தினகரன் (வயது 23), எல்.தியாகராஜன் (வயது 31), ஏ.வசந்தராவ் (வயது 19), எஸ்.ரமேஸ்குமார் (வயது 22) மற்றும் ஜி.சுமன் (வயது 20) ஆகியோருக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளும் மீட்டுக் கொள்ளப்பட்டன. இதனால் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், நேற்று 25 இந்தியர்களை தலா ரி.ம 500 வெள்ளி செலுத்தி ஜாமீனில் மீட்டார் கிள்ளான் சமூக சேவையாளர் கே.பி சாமி. அவர் தமக்குச் சொந்தமான 4 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி நிலப் பட்டாவை நீதிமன்றத்தில் அடமானம் வைத்தார்.

இவரின் இந்த உயரிய சேவைக்கு இவரை 'தன்மானத் தமிழன்' என வாழ்த்தி நன்றிகள் பலக் கூறிக்கொள்வோமாக...



மற்றுமொரு நிலவரத்தில் மலேசிய அரசாங்கம் இந்து உரிமைப் பணிப்படையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அனைத்துலக போலீஸ் (INTERPOL) உதவியை நாடியுள்ளது. அதோடு தற்போது லண்டனில் இருக்கும் திரு.வேதமூர்த்தியின் நடவடிக்கைகள INTERPOL கண்காணிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

யார் நம்மைக் கண்காணித்தாலும் நமக்குக் கவலை இல்லை, ஏன், நம்மை தீவிரவாதிகள் எனக் கூறினாலும் கவலை இல்லை. நாங்கள் காந்தீயவாதிகள் என இந்த குருட்டு அரசாங்கத்திற்குத் தெரியும் வரை எங்களது.....

போராட்டம் தொடரும்...

Read more...

கமுந்திங்கில் சிறப்பு வழிபாடு.. 3000 ஆதரவாளர்கள் திரண்டனர்..!

இந்து உரிமைப் பணிப்படை வீரர்களான நம்முடைய ஐந்து வழக்கறிஞர்களின் கைது தொடர்பாக, அவர்கள் விரைவில் விடுதலையடைய கமுந்திங்கில் மகா மாரியம்மன் ஆலயத்தில் சுமார் 3000 ஆதரவாளர்கள் சிறப்புப் பூஜையில் கலந்துக் கொண்டனர். இவர்களோடு வழக்கறிஞர்களின் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டனர். இவ்வாலயம் கமுந்திங் சிறைச்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.







நன்றி : ராஜா (படங்கள்)

போராட்டம் தொடரும்...

Read more...

வழக்கறிஞர்கள் - குடும்பத்தினர் சந்திப்பு

>> Saturday, December 15, 2007


வழக்கறிஞர்களின் கைது தொடர்பாக, அவர்கள் கைது செய்யப்பட நாளன்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புக்கிட் அமானில் சந்தித்தனர். அங்குள்ள அதிகாரிகள் ஒரு அறையில் இரு மேசைகளை வைத்து ஒவ்வொரு சந்திப்புக்கு இரு வழக்கறிஞர்களை உள்ளே அனுமதித்து, ஒவ்வொருவருக்கும் 6 குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதன் முதலாக திரு மனோகரன் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அறையினுள் சென்றார்கள். வெளியே வந்த அவர்கள், வழக்கறிஞர் நல்ல உடல் நிலையோடு உள்ளதாகக் கூறினர். அதனையடுத்து வழக்கறிஞர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வழக்கறிஞர் சுரேந்திரன் அவர்கள் திரு உதயகுமார் மற்றும் திரு கணபதி ராவ் குடும்ப உறுப்பினர்களோடு அறைக்குள் சென்று வழக்கறிஞர்களை சந்தித்தார். திரு சுரேந்திரன் அவர்களை தொடர்புக் கொண்ட போது, வழக்கறிஞர்கள் அனைவரும் சற்றும் உற்சாகம் குன்றாதவர்களாகக் காணப்பட்டனர் எனத் தெரிவித்தார்.

சந்திப்புக் கூட்டத்திற்கு அடுத்து 5 வழக்கறிஞர்களையும் கமுந்திங் தைப்பிங் சிறைக்கு கொண்டுச் செல்ல நள்ளிரவு ஆகிவிட்டது எனவும், அவ்வேளையில் அனைவரும் உடல் நல ரீதியில் எந்த ஒரு குறையும் இல்லாமல் இருந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் சிறைக்கு வந்துச் சேரும் வேளையில், சிறையின் வெளியே பொதுமக்கள் நிறையப் பேர் காத்துக் கொண்டிருந்தாக தெரிய வருகிறது. வழக்கறிஞர்கள் கைதுத் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் சிறப்பு வழிபாடுகள் நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 2 மாதக் காலங்கள் யாரும் வழக்கறிஞர்களை சந்திக்க இயலாது. 60 நாட்கள் கழித்தே அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

தமிழ் நாட்டின் பிரபல நாளேடுகளில் ஒன்றான குமுதம் இதழில் வெளிவந்துள்ள கேலிச் சித்திரம்



போராட்டம் தொடரும்...

Read more...

வழக்கறிஞர் உதயகுமார் நமக்கு கூறும் அறிவுரை...



பகுதி 1




பகுதி 2




உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நம்முடைய வழக்கறிஞர்களின் நிலையைத் தெரிந்துக் கொள்ள நம்முடைய சகோதரர்கள் புக்கிட் ஆமான் வெளியே திரண்டிருக்கும் காட்சி.




Al-Jazeera செய்தி





நீங்கள் எங்கள் அருகில் இருந்து போராடமுடியவில்லை என்று கவலை உங்களுக்கு வேண்டாம்.. நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்காக, நம் இந்திய சகோதரர்களுக்காக.. நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் வீற்றிருந்து போராட்டத்தை தொடர்வீர்கள்.. எங்கள் கண்களைத் திறந்த உங்களுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவோம்..

குறிப்பு : பணி அலுவல்கள் காரணமாக சில நாட்களாக வலைத்தளத்தை புதுப்பிக்க இயலவில்லை. இயலாமைக்காக வருந்துகிறேன். சகோதரர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் இயன்றவரை வலைத்தளத்தை சூடான செய்திகளுடன் புதுப்பிக்க முயற்சிக்கிறேன்.

போராட்டம் தொடரும்...

Read more...

முக்கிய அறிவிப்பு !!! நம்முடைய 5 வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது !!! நமது அடுத்த நடவடிக்கை என்ன?

>> Thursday, December 13, 2007


சகோதரர்களே, தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி நம்முடைய 5 வழக்கறிஞர்கள் ( உதயக்குமார், கங்காதரன், மனோகரன், கணபதி ராவ் மற்றும் வசந்தன் ) ஆகியோர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் 8(1) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


தற்போதைய நிலவரம் குறித்து நமக்கு சில வேண்டுகோள்கள் விடப்பட்டுள்ளன. அதாவது, நம்முடைய வழக்கறிஞர்கள் சிறையில் இருக்கும் பட்சத்தில் அவர்களையும், மற்ற 31 சகோதரர்களையும் வெளியெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், யாரும் பயப்பட வேண்டாம். அதுமட்டுமல்லாமல், நம் பலத்தைக் குன்றச் செய்யும் எந்த ஒரு வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


இன்று மதியம் 12.30 மணிக்குமேல் வழக்கறிஞர் கங்காதரன் அவர்களை பெட்டாலிங் ஜெயாவில் அவரது அலுவலகத்தில் புக்கிட் அமான் போலிசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திரு.கணபகி ராவ் அவர்களை புக்கிட் ஆமான் சிறப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 2 மணியளவில் திரு.வசந்தகுமார் அவர்களை பிரிக்பீல்ட்ஸ்சில் போலிசார் கைது செய்தனர். திரு மனோகரன் அவர்கள் திரு கங்காதரனை புக்கிட் ஆமானில் சந்திக்கச் சென்றபோது போலிசார் கைது செய்தனர். திரு உதயகுமார் அவர்களோ, பங்சாரில் கைது செய்யப்பட்டார். வழக்கறிஞர் வேதமூர்த்தி தற்போது இங்கிலாந்தில் இருப்பதாக தெரியவருகிறது. உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதான நம்முடைய வழக்கறிஞர்கள் 2 ஆண்டுகளுக்கு கமுந்திங், தைப்பிங் சிறைச்சாலையில் வைக்கப்படுவர். எனினும் இவர்களை விரைவில் வெளிக்கொண்டுவர முயற்சிகள் கொண்டுவரப்படும். முதல் கட்டமாக 60 நாட்கள் காவலில் அவர்கள் வைக்கப்பட்டு, தேவைக்கருதி 2 ஆண்டுகள் காவல் நீட்டிக்கப்படும் எனத் தெரியவருகிறது. இவ்விரண்டு வருட காலத்தில் வழக்கறிஞர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை சந்திக்கலாம்.

எனவே சகோதரர்களே, நமது உரிமைகளுக்காக போராடும் அவர்களின் விரைவான விடுதலைக்காக அனைவரும் நாடு தழுவிய நிலையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தவேண்டும். முடிந்த மட்டும் நாட்டில் உள்ள உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு குறுந்தகவல்களின் வழி செய்திகளைச் சேர்ப்பிக்கவும்...

போராட்டம் தொடரும்...

Read more...

வழக்கறிஞர் உதயகுமார் மீது குற்றச்சாட்டு, சிறையில் அடைப்பு !!!!


கடந்த 11-ஆம் திகதி வழக்கறிஞர் உதயகுமார் காலையில் கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாலான் டூத்தா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டப் பின்னர் ரி.ம 50,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவரை மீண்டும் கைது செய்து புடு சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளனர். இது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதற்காக உதயகுமார் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. நவம்பர் 15-ஆம் திகதிக்கும் டிசம்பர் 8-ஆம் திகதிக்கும் இடையில் எழுதப்பட்டு " போலிஸ் வாட்ச் " என்னும் இணைய பக்கத்தில் இடம்பெற வைக்கப்பட்ட ஒரு கடிதத்தில் தேச நிந்தனைக்குரிய விஷயங்களை வெளியிட்டதாக அவர்மீது ஜாலான் டூத்தா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.









குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரினார். 15.11.2007-ஆம் திகதி இடப்பட்ட இந்து உரிமைப் பணிப்படையின் அக்கடிதம் எண் : 135, 3- ஜாலான் தோமான் 7, கெமாயான் ஸ்குவேர், சிரம்பான் நெகிரி செம்பிலான் எனும் முகவரியிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. எண் 10, டவுனிங் ஸ்தீரிட் லண்டன் எனும் முகவரியிலுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு அது விலாசமிடப்பட்டுள்ளது.

மலேசியாக்கினி படச்சுருள்


Read more...

31 பேரின் விடுதலைக்காக பினாங்கில் பிரார்த்தனை


கடந்த 10-ம் திகதி பினாங்கு பட்டவேர்த் மகாமாரியம்மன் ஆலயத்தில் இந்து உரிமைப் பணிப்படை சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் சுமார் 3000 பொது மக்கள் கூடினர். இக்கூட்டத்தில் வழக்கறிஞர் உதயக்குமார் " நாங்கள் விடுதலைப்புலி இயக்கத்தோடு தொடர்புக்கொண்டுள்ளதை 24 மணி நேரத்திற்குள் அரசாங்கம் நிரூபிக்க வேண்டும். அதற்குள் நிரூபிக்காவிட்டால் எங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டக் குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டாகக் கருதப்படும் என்று அவர் கூறினார். இங்கு அமைதியாக பிரார்த்தனை நடைப்பெற்றது. பொது மக்களுக்கோ, பொது இடத்திற்கோ எந்தச் சேதமும் எந்தத் தொல்லையும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார். கடந்த 50 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளைக் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பல மகஜர்கள் வழங்கப்பட்டன. ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். இதற்கிடையே ஓர் அரசியல் கட்சி திட்டமிட்டு இந்து உரிமைப் பணிப்படைக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை செய்து வருகிறது. இதற்குக் காரணம் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைப்பெறலாம். ஆகவே, இந்தப் பிரச்சனையை பெரிதுப்படுத்தி பொதுத் தேர்தலின் பிரச்சாரத்தில் இந்தக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்று அவர் கூறினார். இந்த நாட்டு மலாய் சமூகத்தினர் மிகவும் நல்லவர்கள். நாம் யாரையும் வம்புக்கு இழுக்கவில்லை. நமது சட்டப்பூர்வ உரிமைகளைத்தான் கேட்கிறோம். இந்த பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்படுவது சிறையில் உள்ள 31 பேர்கள் விரைவில் விடுவிக்கப் பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் பிரார்த்தனை ஆகும். மேலும் நான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவேன், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நமது நோக்கம் நமது உரிமையை பெறுவதுதான். நாடு முழுவதும் தற்போது இந்தியர்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமக்குள் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி பிளவு பட்டு கிடந்தால் அதனால் நம் சமுதாயத்திற்குத்தான் பெரும் இழப்பு. இந்த விழிப்புணர்வு தொடரட்டும். நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல. நாம் தீவிரவாதிகளும் அல்ல. இப்போது மட்டும் அல்ல, மலேசிய இந்தியர்கள் தீவிரவாதத்தில் ஈடுபட மாட்டார்கள். அதில் நம்பிக்கையும் இல்லை" என்று வழக்கறிஞர் உதயக்குமார் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் பயிலும் மாணவர்களும் அடங்குவர். இந்நிகழ்வில் 31 பேரின் நீதிமன்றச் செலவிற்காக ரி.ம 14,565 வெள்ளி திரட்டப்பட்டது. அவர்கள் விரைவில் விடுதலை ஆக வேண்டும் என்பதற்காக 31 புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

Read more...

குற்றமற்றவர்களின் மீது கொலைக்குற்றமா?

>> Saturday, December 8, 2007


இந்து உரிமைப் பணிப்படையின் அமைதிப் பேரணியில் கலந்துக் கொண்டவர்களில் 31 இந்திய சகோதரர்கள் வியாழக்கிழமையன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டு சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டனர்.






நெஞ்சம் குமுறுகிறது இவர்களுக்கு நேர்ந்த கதியை நினைத்தால்...

உண்மையில் கொலை முயற்சிக்காக கலகத் தடுப்புக்காரர்கள்தான் சிறையில் இருக்க வேண்டும். பொது மக்கள் மீது வீசிய கண்ணீர் புகைக் குண்டுகளை மிக அருகாமையில் வீசி பலருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள் இந்தக் கலகத் தடுப்புக்காரர்கள். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதற்குக் கூட சில விதிமுறைகள் உள்ளன.

விதிமுறைகளை மீறி மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்த இவர்களுக்கு அரசாங்கம் என்ன தண்டனைக் கொடுத்தது??!!





போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP