லிம் குவான் எங்குடன் நேரடி விவாதத்திற்குத் தயார்! - இண்ட்ராஃப் சவால்

>> Thursday, September 24, 2009


கடந்த 12-வது பொதுத் தேர்தலின்போது இண்ட்ராஃப்பின் ஆதரவைப் பெற்ற எதிர்கட்சிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கடமையாற்றவில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் புவா பாலா கிராம நில மோசடியாகும்.

இண்ட்ராஃப் எதிர்பார்ப்பது அரசியல் தீர்வல்ல, மாறாக அரசியல் விளையாட்டுகளில் சிக்கி சுபிட்சத்தை இழக்காததொரு மக்களுக்கான தீர்வினையே அது எதிர்பார்க்கிறது.

லிம் குவான் எங்கை பொறுத்தவரை, ஊடகம் மற்றும் அரசியல் பலம் அவருக்கு பக்கபலமாக இருக்கிறது, ஆனால் இண்ட்ராஃபை பொறுத்தமட்டில் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் உண்மைகள் துணை நிற்கின்றன.

52 வருட காலமாக அம்னோ அரசாங்கம் சிறுபான்மையினரின்மீதான திட்டமிட்ட அடக்குமுறை, ஒடுக்குமுறை கொள்கைகளை அமுல்படுத்தி வந்ததன் காரணத்தினாலும், ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பினாலும் கடந்த பொதுத்தேர்தலில் இண்ட்ராஃப் நாடெங்கிலும் உள்ள தனது ஆதரவாளர்களைக் கொண்டு எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. அதன் எதிரொலியாக 5 மாநிலங்கள் மக்கள் விரும்பி வாக்களித்த எதிர்கட்சிகளின் வசமுமானது.

புவா பாலா கிராம விவகாரத்தை பொறுத்தமட்டில், எதிர்கட்சிகள் கடைப்பிடிப்பதாகக் கூறிவரும் திறமையான நிர்வாகம், பொறுப்பான அரசாங்கம், வெளிப்படையான அணுகுமுறைகள் எனும் கொள்கைகள் நடைமுறைகளில் செயலாக்கம் காணவில்லை என்பதே உண்மை. தொடர்ந்து பழைய அரசாங்கத்தின்மீது பழியைப் போடுவதை விடுத்து, மாநில அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் உடனான சனநாயகத் தொடர்பினை விளக்குவதற்கு வெளிப்படையானதொரு நேரடி விவாதத்தில் லிம் குவான் எங் கலந்துகொள்ள வேண்டுமென இண்ட்ராஃப் அழைப்பு விடுக்கிறது.

ஓர் இயக்கமாகட்டும் நிர்வாகமாகட்டும், அதன் செயல்பாட்டில் உண்மை இருக்க வேண்டும். மாறாக போலி அரசியல்தனம் கொண்டு தங்களின் இருப்பை பலப்படுத்திக் கொள்வதில் மட்டுமே முனைப்பு காட்டி மக்களின் நலன்களை மறந்துவிடக் கூடாது. நம் நாட்டு அரசியலைப் பொறுத்தமட்டில் ஆளுங்கட்சியாகட்டும் எதிர்கட்சியாகட்டும், முதலில் கட்சியின் நலனையே முன்னிறுத்துகிறார்கள்.

இண்ட்ராஃபை பொறுத்தமட்டில் புவா பாலா கிராம நில மோசடி விவகாரம் இன்னும் முடியாத ஓர் அத்தியாயமாகும். உண்மை நிலவரம் பொதுமக்களுக்கு தெரிந்தாக வேண்டும். பொதுமக்கள் நீதிபதியாக இருக்க வேண்டுமேயொழிய அரசியல் இலாபத்திற்காக குழப்பங்களை விதைக்கும் ஊடகங்கள் அல்ல.

நாட்டை உலுக்கிவரும் பிரச்சனைகள் குறித்து பொறுப்பில் இருக்கும் தரப்புகள் பொது விவாதத்திற்கு அழைக்கப்பட வேண்டும். நாகரீகமடைந்த நாடுகளில் இம்முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. சனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுத்து லிம் குவான் எங் இண்ட்ராஃபின் அழைப்பை ஏற்று பொது விவாதத்திற்கு வர வேண்டும். மக்களை பிரதிநிதிக்கும் இண்ட்ராஃப் எழுப்பும் கேள்விகளுக்கு மக்கள் முன்பு பதில் கொடுக்க வேண்டும்.

மாற்றத்தை எதிர்பார்த்து ஓட்டு போட்ட மக்களுக்கு உண்மையைச் சொல்ல வருவாரா லிம் குவான் எங்?


(புவா பாலா நிலமோசடி குறித்து லிம் குவான் எங்குடன் தொலைக்காட்சியில் நேரடியாக விவாதிக்க இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.நரகன் தயாராக இருக்கிறார்.)

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

7 கருத்து ஓலை(கள்):

Tamilvanan September 26, 2009 at 12:05 PM  

முத‌லில் 25 ந‌வ‌ம்ப‌ர் 18 தீர்மான‌ங்க‌ள் என்ன‌ ஆன‌து என்று ச‌ற்று விள‌க்குங்க‌ள் ந‌ண்ப‌ரே? ம‌க்க‌ளின் ஜாப‌க‌ ம‌ற‌தி என்றும் தங்க‌ளின் ப‌ல‌ம் என்று எண்ணிவிடாதீர்க‌ள். பிரிட்டிஸ் அர‌சாங்க‌த்தின் மிதான‌ வ‌ழ‌க்கு என்ன‌ ஆன‌து?

இன்றைய‌ மானில‌ அர‌சு தவ‌றான‌து என்றால் அத‌ற்கு க‌ட‌ந்த‌ தேர்த‌லில் ஓட்ட‌ளிக்க‌ ம‌க்க‌ளிட‌ம் பிர‌ச்சார‌ம் செய்த‌ ஆத‌ரித்து அறிக்கை விட்ட‌ நீங்க‌ள் முத‌ல் குற்ற‌வாளி.
//லிம் குவான் எங்கை பொறுத்தவரை, ஊடகம் மற்றும் அரசியல் பலம் அவருக்கு பக்கபலமாக இருக்கிறது//

ஆமாம் எல்லா நாளித‌ல்க‌ளும் தொட‌ர்பு சாத‌ன‌ங்க‌ளும் லிம் குவான் எங் மானில‌ அர‌சுக்குத்தான் ப‌க்க‌ ப‌ல‌மாக‌ உள்ள‌ன‌.இண்ட்ராஃபின் 2009ம் ஆண்டின் மிக‌ச் சிற‌ந்த‌ ஆய்வுக் க‌ண்டுப் பிடிப்பு.

ஒற்றன் September 26, 2009 at 10:52 PM  

//முத‌லில் 25 ந‌வ‌ம்ப‌ர் 18 தீர்மான‌ங்க‌ள் என்ன‌ ஆன‌து என்று ச‌ற்று விள‌க்குங்க‌ள் ந‌ண்ப‌ரே?//

இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளையொட்டிதான் அனைத்து போராட்டமும். இதில் மாற்றமேதுமில்லை. ஆனால் அந்த 18 கோரிக்கைகளை எதிர்கட்சிகள்கூட தீர்த்து வைக்க இயலாது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

//ம‌க்க‌ளின் ஜாப‌க‌ ம‌ற‌தி என்றும் தங்க‌ளின் ப‌ல‌ம் என்று எண்ணிவிடாதீர்க‌ள். பிரிட்டிஸ் அர‌சாங்க‌த்தின் மிதான‌ வ‌ழ‌க்கு என்ன‌ ஆன‌து?//

மக்களை ஞாபக மறதி கொண்டவர்கள் என இண்ட்ராஃப் ஒருபோதும் சிறுமைப்படுத்தியது கிடையாது. புவா பாலா நிலமோசடியை நாளடைவில் மக்கள் மறந்துவிடுவார்கள் என கனவு கண்டுகொண்டிருக்கும் ஆளுங்கட்சி, மற்றும் எதிர்கட்சியைப்போல் அல்லாது எப்பொழுதும் மக்களுக்காதரவான போராட்டத்தினை அது முன்னேடுத்து வருகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு கணிசமான தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் நன்கொடையாக வழங்கிய பணம் காவல்த்துறையினரால் முடக்கம் செய்யப்பட்டுள்ளதால் இவ்வழக்கை மேற்கொண்டு தொடர இயலவில்லை. இருப்பினும், மீண்டும் இவ்வழக்கினை தொடர்வதற்கான ஆயுத்தப் பணிகள் நடந்து வருகின்றன.

//இன்றைய‌ மானில‌ அர‌சு தவ‌றான‌து என்றால் அத‌ற்கு க‌ட‌ந்த‌ தேர்த‌லில் ஓட்ட‌ளிக்க‌ ம‌க்க‌ளிட‌ம் பிர‌ச்சார‌ம் செய்த‌ ஆத‌ரித்து அறிக்கை விட்ட‌ நீங்க‌ள் முத‌ல் குற்ற‌வாளி.//

எதிர்கட்சிகளின் வெற்று வாக்குறுதிகளை நம்பி அதனை ஆதரித்தது இண்ட்ராஃபின் தவறுதான். ஆனால், ஏமாறியவன் தொடர்ந்து ஏமாற்றப்படுவான் என்று எதிர்கட்சிகள் கனவு காணக்கூடாது. உறக்கம் கண்ட சமுதாயம் நிச்சயம் எழும்.

//ஆமாம் எல்லா நாளித‌ல்க‌ளும் தொட‌ர்பு சாத‌ன‌ங்க‌ளும் லிம் குவான் எங் மானில‌ அர‌சுக்குத்தான் ப‌க்க‌ ப‌ல‌மாக‌ உள்ள‌ன‌.இண்ட்ராஃபின் 2009ம் ஆண்டின் மிக‌ச் சிற‌ந்த‌ ஆய்வுக் க‌ண்டுப் பிடிப்பு.//

கண்டுபிடிப்பு அல்ல. கண்கூடாக, அனுபவ ரீதியாக புவா பாலா நிலமோசடி குறித்த விவகாரத்தில் நாங்கள் கண்டுகொண்டது. அரசு ஊடகங்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதும், மாற்று ஊடகங்களான சில புகழ்பெற்ற இணைய இதழ்களும் அச்சு ஊடகங்களும் எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு உண்மைகளை மறைத்துவிட்டன. அதற்காகத்தான் வெளிப்படையானதொரு நேரடி பொது விவாதத்திற்கு லிம் குவான் எங்கை இண்ட்ராஃப் அழைக்கிறது.

உண்மை வெளிப்பட வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இச்சவாலை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்..

Unmai_Virumbi September 28, 2009 at 7:13 PM  

முத‌லில் இந்த‌ ந‌ரக‌ன் யார்? என்னென்ன‌ செய்தார் என்று சில‌ருக்கு தெரிய‌ வேண்டும்.
கட‌ந்த‌ மார்ச் 8, 2008 பொதுத்தேர்த‌லில் வென்ற‌ பிற‌கு, ஹின்ட்ராஃப் என்ப‌து ஒரு கொள்கைய‌மைப்பு, அர‌சிய‌ல் அமைப்பு அல்ல‌; என்று கூப்பாடு போட்ட‌வ‌ர்க‌ள், அர‌சிய‌ல் நிய‌ம‌ன‌ங்க‌ளுக்கு அலைந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளில் குறிப்பிட‌த்த‌க்க‌வ‌ர்க‌ள், முன்னாள் ஹின்டராஃப் ஒருங்கிணைப்பாள‌ர், உத‌ய‌க்குமார், வேத‌மூர்த்தி ஆகிய‌ பொன்னுசாமி ச‌காக்க‌ளின்(முன்னாள்)செல்ல‌ப்பிள்ளை த‌னேந்திர‌ன், ஈப்போ வேத‌மூர்த்தி, ம‌லேசியாக்கினி நிருப‌ர் ஆதி.வீர‌ங்க‌ன் (ச‌ங்க‌ர்), ம‌ற்றும் இந்த‌ ந‌ர‌க‌ன் ஆகியோர்.

த‌னேந்திர‌ன், த‌ன‌க்கு க‌வுன்சில‌ர் ப‌த‌வி த‌ர‌ வேண்டும் என்று த‌ன‌து ச‌காக்க‌ளை வைத்து த‌மிழ் ப‌த்திரிக்கைக‌ளில் அறிக்கை விட வைத்தார். பிற‌கு, அந்த‌ க‌வுன்சில‌ர் கோரிக்கை சென‌ட்ட‌ர் கோரிக்கையான‌து, அத‌ற்கு பிற‌கு புக்கிட் செலாம்பாவ் வேட்பாள‌ர் கோரிக்கையான‌து. இதெல்லாம் நாடே அறியும்.

ஈப்போ வேத‌மூர்த்தி, த‌ன‌க்கு க‌வுன்சில‌ர் ப‌த‌வி த‌ர‌ப்ப‌ட‌வில்ல‌யென்ற‌தும், (அப்போதைய‌) மாநில‌ ம‌ந்திரி புசார் நிசாரிட‌ம் ம‌க‌ஜ‌ரெல்லாம் கொடுத்தார். இப்பொழுது இவ‌ர்க‌ள் இருவ‌ருமே, மக்க‌ள் ச‌க்தி க‌ட்சி ஆர‌ம்பித்து, ந‌ஜீப்போடு உற‌வு கொண்டு, தங்க‌ள‌து பொருளாதார‌த்தை மேம்ப்ப‌டுத்திக் கொண்டுள்ள‌ன‌ர்.

அடுத்த‌து, ம‌லேசியாக்கினி நிருப‌ர், இந்த‌ ந‌ர‌க‌னையும் பார்ப்போம், இவ‌ர்க‌ள் இருவ‌ரும் பினாங்கு இந்து அற‌ப்ப‌ணி வாரிய‌த்தில் த‌ங்க‌ளுக்கு நியம‌ன‌ம் வேண்டும் என்று நேரடியாக‌வே கேட்ட‌ன‌ர். கிடைக்கவில்லை என்ற‌தும், கூட்ட‌மெல்லாம் கூட‌ கூட்டின‌ர். பினாங்கு மாநில‌ அர‌சாங்க‌த்தை எப்பொழுதும் குறை கூறுவ‌தில் இவ‌ர்க‌ளுக்கு நிக‌ர் இவ‌ர்க‌ளே. ஆதி.ச‌ங்க‌ரின் ம‌லேசியாக்கினி எழுத்துக‌ளை பார்த்தாலே இது புரியும். இப்பொழுது க‌ம்போங் புவா பாலா விவ‌காரத்தில் ச‌ட்ட‌ சிக்க‌ல்க‌ள் நிறைய‌ இருப்ப‌தாலும், சாம‌ன்ய‌ர்க‌ளுக்கு அசிக்க‌ல்க‌ள் புரியாததாலும் அத‌னை திசை திருப்பி அல்வா சாப்பிடுவ‌துப் போல், த‌ங்க‌ள‌து வ‌ஞ்ச‌த்தை தீர்த்துக்கொள்ள‌ நினைக்கின்ற‌ன‌ர்.

Unmai Virumbi September 28, 2009 at 7:14 PM  

குறிப்பாக‌ இந்த‌ க‌ம்போங் புவா பாலா விவ‌கார‌த்தில் மூக்கை நுழைத்து, அங்குள்ள‌ ம‌க்க‌ளை குழ‌ப்பி, த‌ங்க‌ளின் அர‌சிய‌ல் ஆசைக‌ளையும், ப‌த‌வி மோக‌த்தையும் சாதித்துக்கொள்ள‌ நினைத்த‌வ‌ர்க‌ளே அதிக‌ம்.சில‌ உதார‌ண‌ங்க‌ள் :

1. தி.மோக‌ன் (மஇகா இளைஞ‌ர‌ணி தேர்த‌லுக்காக‌ இந்த‌ புவா பாலா விவ‌கார‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்திண்டான்; மைக்கா ப‌ங்குக‌ளை திருப்பித்த‌ராத‌ சாத‌னைத்த‌லைவ‌ரோ, 3.2மில்லிய‌ன் கொடுத்து புவா பாலா கிராம‌த்தை மேம்பாட்டாள‌ரிட‌ம் வாங்க‌ப்போவ‌தாக‌ கூறினாரே, அது என்ன‌வென்று கேட்க‌ மாட்டீர்க‌ளோ?)

2.இல‌ண்ட‌ன் வேத‌மூர்த்தி (த‌னேந்திர‌னின் புதுக்க‌ட்சி தொட‌க்க‌த்தால், த‌ன்னுடைய‌ புக‌ழ், பிர‌ப‌ல்ய‌ம் பாதிக்க‌ப்ப‌டும் என்ப‌தால், திடிரென்று க‌ம்போங் புவா பாலா விச‌ய‌த்தில் அனைத்தும் தெரிந்த‌வ‌ர் போல் பேச‌த்தொட‌ங்கினார். இங்கே ம‌லேசியாவில் உள்ள‌ ப‌ல‌ருக்கே, புவா பாலா விவ‌கார‌த்தில் இருக்கும் குழ‌ப்ப‌ம் புரியாத‌ ப‌ட்ச‌த்தில், பிரிட்டிஷ் அர‌சுக்கு எதிராக‌ வ‌ழ‌க்குப்போடுவ‌த‌ற்கு சேர்க்க‌ப்ப‌ட்ட‌ மில்லிய‌ன் க‌ண‌க்கான‌ ரிங்கிட்டில், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் இல‌ண்ட‌னில் சுக‌,போக‌மாக‌ வாழ்ந்து வ‌ரும் இந்த‌ வேத‌மூர்த்திக்கு அனைத்தும் தெரியுமாம்.)

3. உத‌ய‌க்குமார் (த‌ன‌து ம‌னித‌ உரிமை க‌ட்சியை பிர‌ப‌ல‌ப்ப‌டுத்த‌ இந்த‌ புவா பாலா விவ‌கார‌த்தை உப‌யோகித்து, ம‌லிவான‌ விள‌ம்ப‌ர‌ம் தேடியவ‌ர், பி.கு : என‌க்கு ஒரு த‌லைய‌ணை, பாய் போதும், இங்கேயே த‌ங்கியிருந்து, புவா பாலா க‌ம்ப‌ம் உடைப‌டாம‌ல் காப்பாற்றுவேன் என்று வாக்குக்கொடுத்துவிட்டு, க‌ம்ப‌ம் உடைப்ப‌டும்போது எங்கே போனார் உங்க‌ள் உத‌ய‌க்குமார்?)

4.த‌னேந்திர‌ன் (த‌ன‌து புதிய‌ ம‌க்க‌ள் ச‌க்தி க‌ட்சியை பிர‌ப‌ல‌ம‌டைய‌ வைப்ப‌த‌ற்காக‌ இந்த‌ க‌ம்போங் புவா பாலா பிர‌ச்ச‌னையில் திடிரென்று எகிறி குதித்து, இன்னும் த‌ள்ளிப்போட்டிருக்க வேண்டிய‌ க‌ம்போங் புவா பாலா வீடுக‌ள் உடைப்பை, நீதிம‌ன்ற‌ அமீனாவோடு உட‌ன்படிக்கையில் கையெழுத்திட்ட‌த‌ன் மூல‌ம்; நில‌ மேம்பாட்டு நிறுவ‌ன‌த்துக்கு உத‌வி, டிவி3 செய்திக‌ளில் முக‌ம் காட்டி த‌ன‌து சுய‌ந‌ல‌னை சாதித்துக்கொண்டார்)

5.த‌ர்ம‌ராஜ், சுகுமாற‌ன் உள்ளிட்ட‌ க‌மிட்டியின‌ர் (க‌ம்போங் புவா பாலா விவ‌கார‌த்தினால், த‌ங்க‌ள் முக‌ம், அனைத்து ப‌த்திரிக்கை, தொலைக்காட்சிக‌ளில் ஒளிப‌ர‌ப்ப‌ப‌ட்டு விட்ட‌தால், திடிரென்று கிடைத்த‌ விள‌ம்ப‌ர‌த்தால் திக்கு முகாடி போன‌ சில‌ர், என்ன‌ பேசுகிறோம் என்றே தெரியாம‌ல், பேசின‌ர். இந்த‌ விவ‌கார‌த்தை பூத‌க‌ர‌மாக்கி விட்டு, திரைக்கு பின்னால், நில‌ மேம்பாட்டு நிறுவ‌ன‌த்தோடு இர‌க‌சிய‌ ச‌ந்திப்புக‌ள் ந‌ட‌த்தி; க‌மிட்டியை ம‌ட்டும் சிற‌ப்பாக‌ க‌வ‌னிக்க‌ சொன்ன‌தும் ப‌ல‌ருக்கு தெரியாத‌ல்ல‌வா?)


6.இன்னும் ப‌ல‌ர்....(கேட்டால் சொல்கிறேன்)

வாக்குறுதி, வாக்குறுதி என்று அல‌றுகிறீர்க‌ளே; பினாங்கு மாநில‌ அர‌சான‌து கூட்ட‌ர‌சு நீதிம‌ன்ற‌ம் வ‌ரை வ‌ழ‌க்கை க‌ம்போங் புவா பாலா குடியிருப்பாள‌ர்க‌ள் கொண்டு செல்லும் வ‌ரை ஆத‌ர‌வு த‌ர‌வில்லையா? நில‌த்தை மீட்க‌ க‌டைசிவ‌ரை ச‌ட்டப்போராட்ட‌த்தில் இந்த‌ ம‌க்க‌ளுக்கு பினாங்கு மாநில‌ அர‌சு உத‌வ‌வில்லையா? நில‌ம் உங்க‌ளுடைய‌து, நில‌த்தை திருட‌ன், திருடிக்கொண்ட‌ பிற‌கு, ச‌ட்ட‌ம் திருட‌னுக்கே நில‌ம் சொந்த‌ம் என்று கூறிவிட்ட‌ப்பிற‌கு, நீதித்த‌வ‌றிய‌ ச‌ட்ட‌த்தை யாரும் குறைக்கூற‌வில்லை! ச‌ட்ட‌த்தை ம‌தித்தே ஆக‌ வேண்டிய‌ மாநில‌ அர‌சை குறைக்கூறி ம‌லிவு விள‌ம்ப‌ர‌ம் தேடுகிறார்க‌ள். கூட்ட‌ர‌சு நிதிம‌ன்ற‌ தீர்ப்பை மீறும் ப‌ட்ச‌த்தில், மாநில‌ ஆட்சியே கலைக்க‌ப்ப‌டும்; அதெல்லாம் எங்க‌ளுக்கு தெரியாது, நாங்க‌ள் சொல்வ‌துதான் ச‌ரியென்று நிற்ப‌வ‌ர்க‌ளை என்ன‌வென்று கூறுவ‌து?

த‌ங்க‌ள‌து சுய‌ ந‌ல‌னுக்காக‌ அனைத்து விவ‌கார‌ங்க‌ளையும் திசை திருப்பும் சில‌ர், க‌ம்போங் புவா பாலா விவ‌கார‌த்தில் திடிர் பாச‌ம‌ழை பொழிவ‌துதான் ஏனோ? சொல்லித்தான் தெரிய‌ வேண்டுமோ?

இந்த‌ ந‌ர‌க‌ன் போன்ற‌ ச்ய‌,ம‌லிவு விள‌ம்ப‌ர‌ விரும்பிக‌ளை விட‌, உத‌ய‌க்குமார், அல்ல‌து வேத‌மூர்த்தி ஆகியோரில் ஒருவ‌ர், அந்த‌ இங்கிலாந்து வ‌ழ‌க்கு என்ன‌வான‌தென்று க‌ண‌ப‌தி ராவ் அல்ல‌து வ‌ச‌ந்த‌க்குமாரோடு நேர‌டி விவாத‌த்திற்கு தேதி குறித்தால் ந‌ன்றாக‌யிருக்கும்.

ஒற்றன் September 29, 2009 at 1:09 AM  

//முத‌லில் இந்த‌ ந‌ரக‌ன் யார்? என்னென்ன‌ செய்தார் என்று சில‌ருக்கு தெரிய‌ வேண்டும்.//

//அடுத்த‌து, ம‌லேசியாக்கினி நிருப‌ர், இந்த‌ ந‌ர‌க‌னையும் பார்ப்போம், இவ‌ர்க‌ள் இருவ‌ரும் பினாங்கு இந்து அற‌ப்ப‌ணி வாரிய‌த்தில் த‌ங்க‌ளுக்கு நியம‌ன‌ம் வேண்டும் என்று நேரடியாக‌வே கேட்ட‌ன‌ர். கிடைக்கவில்லை என்ற‌தும், கூட்ட‌மெல்லாம் கூட‌ கூட்டின‌ர். பினாங்கு மாநில‌ அர‌சாங்க‌த்தை எப்பொழுதும் குறை கூறுவ‌தில் இவ‌ர்க‌ளுக்கு நிக‌ர் இவ‌ர்க‌ளே.//

திரு.நரகனைப் பற்றி நீங்கள் கூறியிருப்பதிலிருந்தே நன்றாகத் தெரிகிறது, நீங்கள் ஒரு பொய் விரும்பி என்று. ஏற்கனவே மலேசியா கினி வலைத்தளத்தில் "Call me Jibby" என்ற பெயரில் அரைவேக்காட்டுத்தனமான பின்னூட்டங்களால் எங்களை சிரிக்க வைத்த நீங்கள் தற்போது “உண்மை விரும்பி” என்றப் பெயரில் ஆள்மாராட்டம் செய்வது மேலும் எங்களுக்கு நகைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் நான் உங்களுக்கு வழங்கிய மலேசியா கினி கணக்கை பெயர் மாற்றி ஆள்மாராட்டம் செய்ததையும் நான் மறக்கவில்லை. இதுவெல்லாம் ஒரு பிழைப்பு! பெயரை மாற்றினாலோ, புதிய வலைத்தளத்தின் மூலம் பிறரை தாக்க நினைத்தாலோ அதனை கண்டுபிடித்து விடமுடியாது என்று நினைக்க வேண்டாம். இதுபோன்ற இழிச்செயல் மேலும் உங்களையும், உங்கள் தலைவரையும், அவர் தண்டோரா போடும் கட்சியையும் நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

இண்ட்ராஃப் பெயரை பயன்படுத்தி வலைத்தளத்தை தொடங்கிய நீங்கள் தற்போது எதிர்க்கட்சிகளின் அடிவருடியாக மாறியிருப்பது வருத்தத்திற்குறியதாகும்.

இருப்பினும் நீங்கள் இங்கு அறிவாளித்தனமாக நினைத்துக் கொண்டு குறிப்பிட்டுள்ள சில பொய்களை விளக்க வேண்டியது எனது கடமையாகும்.

திரு.நரகன் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் பதவி கேட்டாரா...?

இக்கூற்றினை “joke of the year" என்று கூறலாமா?

நரகனைப் பற்றி ஒரு வெங்காயமும் தெரியாமல் எதற்கு அரைவேக்காட்டுத் தனமாக பொய்யுரைகளைப் பரப்ப வேண்டும்?

இண்ட்ராஃப் இயக்கத்தின் ஆலோசகரான திரு.நரகன் ஒரு சோசியலிச சித்தாந்தவாதி. பரம நாத்திகவாதியும் கூட.. அவர்போய் நேரடியாக இந்து அறப்பணிவாரியத்தில் நியமனம் கேட்டார் என்று கூறுவதிலிருந்தே உங்களின் அரைவேக்காட்டுத்தனம் வெளிப்படுகிறது. எதிர்க்கட்சி போட்ட ரொட்டித் துண்டிற்கு அளவுக்கதிகமாகவே பொய் சொல்வதில் வல்லவராய் இருக்கிறீர்கள். இதில் மலேசியாகினி நிருபரையும் இழுத்துக் கொண்டு பதவி கேட்டார் எனக் கூறுவது மேலும் எங்களை நகைக்கச் செய்கிறது. இப்பொழுது பதவியில் இருப்பவர்கள் அவ்விருவருமா இல்லை நீரா என்பதை சற்று நினைத்துப் பாரும்!

ஒற்றன் September 29, 2009 at 1:09 AM  

இண்ட்ராஃப் ஒரு மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக உருவெடுத்தபொழுது, அவ்வியக்கத்தில் பலதரப்பட்டவர்கள் ஆதரவாளர்களாக உருப்பெற்றனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், சாமான்யர்கள், போராட்டவாதிகள், அரசியல் ஆதாயம் தேட வந்தவர்கள், காவல்த்துறையின் சிறப்புப் படையினர், வெவ்வேறு கட்சிகளிலிருந்து வேவு பார்க்கும் கைக்கூலிகள் என ஒரு கலவையாக இருந்த அவ்வியக்கம் இருந்தது. அவரவர்கள் சாயம் காலம் வரும்பொழுது தானாக வெளுத்து வெவ்வேறு வழிகளில் தங்களின் பாதைகளை அமைத்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரான மக்கள் சக்தி கட்சியின் தலைவர் தனேந்திரனை இங்கு தாக்கி பேச வேண்டாம். அவருக்கும் இண்ட்ராஃப் இயக்கத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத பட்சத்தில், அவரைப் பற்றி இங்கு பேசுவதில் பயனேதுமில்லை!

உங்களின் அடுத்த குற்றச்சாட்டிற்கு வருகிறேன்..

//2.இல‌ண்ட‌ன் வேத‌மூர்த்தி (த‌னேந்திர‌னின் புதுக்க‌ட்சி தொட‌க்க‌த்தால், த‌ன்னுடைய‌ புக‌ழ், பிர‌ப‌ல்ய‌ம் பாதிக்க‌ப்ப‌டும் என்ப‌தால், திடிரென்று க‌ம்போங் புவா பாலா விச‌ய‌த்தில் அனைத்தும் தெரிந்த‌வ‌ர் போல் பேச‌த்தொட‌ங்கினார். இங்கே ம‌லேசியாவில் உள்ள‌ ப‌ல‌ருக்கே, புவா பாலா விவ‌கார‌த்தில் இருக்கும் குழ‌ப்ப‌ம் புரியாத‌ ப‌ட்ச‌த்தில், பிரிட்டிஷ் அர‌சுக்கு எதிராக‌ வ‌ழ‌க்குப்போடுவ‌த‌ற்கு சேர்க்க‌ப்ப‌ட்ட‌ மில்லிய‌ன் க‌ண‌க்கான‌ ரிங்கிட்டில், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் இல‌ண்ட‌னில் சுக‌,போக‌மாக‌ வாழ்ந்து வ‌ரும் இந்த‌ வேத‌மூர்த்திக்கு அனைத்தும் தெரியுமாம்.)//

முதலில் திரு.வேதமூர்த்தி ஒரு வழக்கறிஞர் என்பதனை மறந்துவிட வேண்டாம். தற்போது லண்டனில் தஞ்சம் இருந்தாலும், புவா பாலா போன்ற நில மோசடி விவகாரங்களை பல ஆண்டுகால அனுபவத்தில் அவர் பார்த்திருக்கிறார். சட்ட ரீதியில், அரசியல் ரீதியில் என்னென்ன தீர்வுகள் அம்மக்களுக்கு கிடைக்க முடியும் என்பதனை அவர் நன்கு அறிந்தே புவா பாலா மக்களுக்காக குரல் கொடுத்தார். சிலாங்கூர் மாநில அரசின் அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசகர் டேரேக் பெர்ணாண்டஸ் புவா பாலா கிராமத்தை டி.ஏ.பி அரசாங்கம் மீட்டுக் கொடுக்க முடியும் என்று கூறும்பொழுது எதற்கு வேதமூர்த்தியை தாக்குகிறீர்கள்.

திரு.வேதமூர்த்தி லண்டனில் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதாக கூறுகிறீர்களே.. ஏதேனும் ஆதாரம் காட்ட முடியுமா? நில மோசடி விவகாரத்தை திசை திருப்புவதற்கு உங்களுக்கு வேறு விடயம் கிடைக்கவில்லையோ..? பாரிசானைப்போலவே நல்ல அரசியல் செய்கிறார்கள் எதிர்கட்சியினர்! அதிலும் குறிப்பாக டி.ஏ.பி கட்சியின் மண்டோர்களான ராமசாமியும், சிவநேசனும் எந்த இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்களின் அரசியல் இருப்பை பலப்படுத்திக் கொண்டார்களோ இன்று அந்த இயக்கத்தின் தலைவரின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்கள். லிம் குவான் எங் தூக்கிப் போட்ட ரொட்டி துண்டிற்கு நன்றாகவே சேவகம் புரிகின்றனர். இண்ட்ராஃப் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது கடைசியாக இண்ட்ராஃப் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது, இப்பொழுது எவ்வளவு இருக்கிறது போன்ற தகவல்களை ஏற்கனவே வேதமூர்த்தியும், திரு.உதயகுமாரும் அறிவித்துவிட்டனர். நாளிதழ்கள் ஏற்கனவே இவ்விடயத்தை இருட்டடிப்பு செய்து மக்களை குழப்பிவிட்டனர். முறையாக ஒரு பட்டயக் கணக்கரைக் கொண்டு நிதி விவரங்களை அறிவிப்பதற்கான வேலைகள் நடைப்பெற்றும் வருகின்றன.

இண்ட்ராஃப் வங்கி கணக்கு அறிக்கை குறித்த வேதமூர்த்தியின், உதயாவின் அறிக்கைகளைப் பார்க்கவும் :

http://www.makkal.org/content/%5Btitle-raw%5D-13

http://www.humanrightspartymalaysia.com/wp-content/uploads/2009/08/new-scan-20090828153912-00001.jpg

http://www.humanrightspartymalaysia.com/2009/08/15/qa-why-i-filed-the-suit-against-the-british/

http://www.humanrightspartymalaysia.com/2009/08/31/waytha-is-one-and-only-hindraf-leader-malaysiakini/

ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் அறவழிப் போராட்டத்தினை நிதி மோசடி, அது இது என்று கூறி திசைத் திருப்பிவிடலாம் என்று கனவு காண வேண்டாம்!

ஒற்றன் September 29, 2009 at 1:10 AM  

//3. உத‌ய‌க்குமார் (த‌ன‌து ம‌னித‌ உரிமை க‌ட்சியை பிர‌ப‌ல‌ப்ப‌டுத்த‌ இந்த‌ புவா பாலா விவ‌கார‌த்தை உப‌யோகித்து, ம‌லிவான‌ விள‌ம்ப‌ர‌ம் தேடியவ‌ர், பி.கு : என‌க்கு ஒரு த‌லைய‌ணை, பாய் போதும், இங்கேயே த‌ங்கியிருந்து, புவா பாலா க‌ம்ப‌ம் உடைப‌டாம‌ல் காப்பாற்றுவேன் என்று வாக்குக்கொடுத்துவிட்டு, க‌ம்ப‌ம் உடைப்ப‌டும்போது எங்கே போனார் உங்க‌ள் உத‌ய‌க்குமார்?)//

திரு.உதயகுமார் சொன்னதுபோலவே புவா பாலா கிராமத்தில் இருந்து தங்கிய விடயம் உங்களுக்கு தெரியவில்லையோ..? கிராமத்தைக் காப்பாறுவேன் என அவர் கூறவில்லை, மாறாக கிராமத்தைக் காப்பாற்றக் கூடிய ஒரேயொருவர் லிம் குவான் எங்தான் என பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். கிராமம் உடைபடும்பொழுது தற்காத்து நின்ற உதயகுமார்கள் எத்தனை என்று உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான். ஆனால், சத்தியமாக டி.ஏ.பியிலிருந்து ஒருத்தன் கூட அச்சமயம் அங்கு இல்லை என்று ஆணித்தரமாகக் கூறலாம்.

//வாக்குறுதி, வாக்குறுதி என்று அல‌றுகிறீர்க‌ளே; பினாங்கு மாநில‌ அர‌சான‌து கூட்ட‌ர‌சு நீதிம‌ன்ற‌ம் வ‌ரை வ‌ழ‌க்கை க‌ம்போங் புவா பாலா குடியிருப்பாள‌ர்க‌ள் கொண்டு செல்லும் வ‌ரை ஆத‌ர‌வு த‌ர‌வில்லையா? நில‌த்தை மீட்க‌ க‌டைசிவ‌ரை ச‌ட்டப்போராட்ட‌த்தில் இந்த‌ ம‌க்க‌ளுக்கு பினாங்கு மாநில‌ அர‌சு உத‌வ‌வில்லையா? நில‌ம் உங்க‌ளுடைய‌து, நில‌த்தை திருட‌ன், திருடிக்கொண்ட‌ பிற‌கு, ச‌ட்ட‌ம் திருட‌னுக்கே நில‌ம் சொந்த‌ம் என்று கூறிவிட்ட‌ப்பிற‌கு, நீதித்த‌வ‌றிய‌ ச‌ட்ட‌த்தை யாரும் குறைக்கூற‌வில்லை! ச‌ட்ட‌த்தை ம‌தித்தே ஆக‌ வேண்டிய‌ மாநில‌ அர‌சை குறைக்கூறி ம‌லிவு விள‌ம்ப‌ர‌ம் தேடுகிறார்க‌ள். கூட்ட‌ர‌சு நிதிம‌ன்ற‌ தீர்ப்பை மீறும் ப‌ட்ச‌த்தில், மாநில‌ ஆட்சியே கலைக்க‌ப்ப‌டும்; அதெல்லாம் எங்க‌ளுக்கு தெரியாது, நாங்க‌ள் சொல்வ‌துதான் ச‌ரியென்று நிற்ப‌வ‌ர்க‌ளை என்ன‌வென்று கூறுவ‌து?//

பினாங்கு மாநில அரசு ஆதரவு தந்ததா? நல்ல வேடிக்கை! கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு நிலம் கூட்டுறவுக் கழகத்திற்குச் சொந்தம் என்பதே.. ஆனால், அந்நிலத்தில் ஆடம்பர அடுக்குமாடி கட்டிடம் எழுவதை மாநில அரசாங்கம் தடுத்திருக்க முடியுமே? அதைத்தானே உங்கள் தலைவர் லிம் குவான் எங் ஊடகங்களில் அறிக்கை விட்டார். மேம்பாட்டாளர்கள் கிராமத்திலிருந்து ஒரு செங்கல்லைக் கூட நகர்த்த முடியாது, உடனே மேம்பாட்டுத் திட்டத்தை நிறுத்த நீதிமன்றத்தை நாடுகிறோம் என நாடகம் ஆடியவர்தானே லிம் குவான் எங். காத்திருந்து காத்திருந்து அவர்கள் சொன்னதை செய்யவே இல்லை.

//5.த‌ர்ம‌ராஜ், சுகுமாற‌ன் உள்ளிட்ட‌ க‌மிட்டியின‌ர் (க‌ம்போங் புவா பாலா விவ‌கார‌த்தினால், த‌ங்க‌ள் முக‌ம், அனைத்து ப‌த்திரிக்கை, தொலைக்காட்சிக‌ளில் ஒளிப‌ர‌ப்ப‌ப‌ட்டு விட்ட‌தால், திடிரென்று கிடைத்த‌ விள‌ம்ப‌ர‌த்தால் திக்கு முகாடி போன‌ சில‌ர், என்ன‌ பேசுகிறோம் என்றே தெரியாம‌ல், பேசின‌ர். இந்த‌ விவ‌கார‌த்தை பூத‌க‌ர‌மாக்கி விட்டு, திரைக்கு பின்னால், நில‌ மேம்பாட்டு நிறுவ‌ன‌த்தோடு இர‌க‌சிய‌ ச‌ந்திப்புக‌ள் ந‌ட‌த்தி; க‌மிட்டியை ம‌ட்டும் சிற‌ப்பாக‌ க‌வ‌னிக்க‌ சொன்ன‌தும் ப‌ல‌ருக்கு தெரியாத‌ல்ல‌வா?)//

அந்த கமிட்டிதான் இன்று நடுத்தெருவில் நிற்கிறது. லாபம் அடைய நினைத்திருப்பவர்கள் எப்பொழுதோ கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஓடியிருப்பார்கள். புவா பாலாவில் வசிக்கும் ஒரு டி.ஏ.பி கட்சிக்காரர், மற்றும் சில சுயநலவாதிகள் லிம் குவான் எங் போட்ட ரொட்டித் துண்டுகளை வாங்கிக் கொண்டதற்காக ஒட்டு மொத்த புவா பாலா கிராமவாசிகளின் மீது பழிகளைத் தூவ வேண்டாம்.

//இந்த‌ ந‌ர‌க‌ன் போன்ற‌ ச்ய‌,ம‌லிவு விள‌ம்ப‌ர‌ விரும்பிக‌ளை விட‌, உத‌ய‌க்குமார், அல்ல‌து வேத‌மூர்த்தி ஆகியோரில் ஒருவ‌ர், அந்த‌ இங்கிலாந்து வ‌ழ‌க்கு என்ன‌வான‌தென்று க‌ண‌ப‌தி ராவ் அல்ல‌து வ‌ச‌ந்த‌க்குமாரோடு நேர‌டி விவாத‌த்திற்கு தேதி குறித்தால் ந‌ன்றாக‌யிருக்கும்.//

புவா பாலா நில மோசடி குறித்த விடயத்திலிருந்து நன்கு திசைத்திருப்ப முயற்சிக்கிறீர்கள். இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவை நன்கு பயன்படுத்தி டி.ஏ.பியின் தில்லுமுல்லை மறைக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி மேலும் என்னை நகைப்பிற்குள்ளாக்குகிறது.
இண்ட்ராஃப்பின் சிவில் வழக்கு மீண்டும் தொடர்வதற்கான ஆயுத்தப் பணிகள் நடக்கின்றன. எனவே, சுகமாக டி.ஏ.பி கட்சி கொடுத்த பதவியில் சுகம் காணும் நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்!

இனியும் அரைவேக்காட்டுத்தனமான பின்னூட்டங்களை இட்டு என் நேரத்தை வீணடிக்க வேண்டாம். லிம் குவான் எங் போட்ட ரொட்டித் துண்டிற்கு வேறு வேலை இருந்தால் பார்க்கவும்!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP