இந்திய சமூகத்தின் காலக் கண்ணாடி
>> Saturday, December 18, 2010
திரு.உதயகுமாரின் ’இண்ட்ராஃப் 25 நவம்பர் பேரணி’ நூல் குறித்து திரு.கணேசன் வர்ணிப்பு
அரசியல் வானில் மாற்றங்கள் நிகழும்போது அதற்கு முன்பாகவே அரசியல் சூழலில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அது நிகழும் பொழுது ஒரு சமூகத்தின் அரசியல் செயல்பாட்டை பழைய அச்சில் பார்ப்பது கடினமாகும். இந்த பழைய அச்சு சமூகத்தில் வேரூன்றி விட்டது.
பழைய அரசியலை தொடர்ந்து பேணி வர முயற்சித்த வண்ணம் இருப்பர். இருப்பினும் புதிய அரசியல் சக்திகள் இந்த பழைமைவாதத்தை எதிர்த்து போராடி வருவர். இந்தப் புதிய அரசியலைக் கொண்டு வரும் நபர்கள் மிகப் புதிய தகவல்களையும் அதைக் கொண்டு செல்லும் தகவல் சாதனங்களையும் தங்கள் வசம் வைத்திருப்பர். வரலாறு குறித்த புதிய கண்ணோட்டத்தை இவர்கள் கொண்டிருப்பர். ஒழுக்கத்தின் புதிய பரிணாமம் இவர்கள் வசம் இருக்கும். இவற்றைக் கொண்டு இவர்கள் மாபெரும் மாற்றத்திற்கு வித்திடுவர்.
ஒழுக்கத்தின் புதிய பரிணாமம் சமூகத்தின் ஓரங்களில் உணரப்படும், இது வலுமையான எதிர்ப்புக்கும் உட்படும். மெதுவாக இந்த புதிய பரிணாமம் சமூகத்தின் மையத்திற்கு ஊடுருவும். இந்த பரிணாமத்தில் உதயகுமார் கூறிச் செல்லும் சமயமே அதற்குள் இன்னொரு ஊடுருவல் நடப்பதை நாம் உணர முடிகிறது. ஒரு காலத்தில் செய்ய முடியாது, விவாதிக்க முடியாது, செயல்பட முடியாது என்று நமக்குள் நாம் விதித்திருந்த விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இந்த ஊடுருவலுக்குள் வரும் இன்னொரு ஊடுருவலில் மீறப்பட்டது குறித்தும் உதயகுமார் இங்கு விவரித்துள்ளார்.
சதையும் இரத்தமுமாக இருந்த ஊடுருவலை உதயகுமார் இப்புத்தகத்தில் வர்ணித்துள்ளார். பல விடயங்கள் பொதுவில் விவாதிக்கப்பட முடியாது என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றை மீறி அந்தக் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து இருப்பது அரசியல் சூழலில் மாற்றங்களுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.
25-11-2007 அன்று நடைப்பெற்ற மாபெரும் இண்ட்ராஃப் பேரணியில் அதிகமானோர் கலந்து கொண்டனர். இது எப்படி சாத்தியப்பட்டது. இந்தப் பேரணிக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வுகளின் கோர்வைகளையும் எழுத்தாளர் ஆராய்ந்துள்ளார். இந்தப் பேரணி எப்படி உருவாகியது. அது எங்கே வளர்ந்தது. அதன் வித்து எங்கே தூவப்பட்டது. பெட்ரோனாசு இரட்டைக் கோபுரத்தின் வாயிலில் இந்தப் பேரணி எப்படி உச்சக் கட்டத்தை அடைந்தது என்றும் உதயகுமார் உணர்ச்சிப் பூர்வமாக இப்புத்தகத்தில் விவரித்துள்ளார். இந்த நூல் முகத்தின் காலக் கண்ணாடியாகும் என்று மனித உரிமைக் கட்சியின் ஆலோசகர் திரு.கணேசன் வர்ணித்துள்ளார். பி.உதயகுமாரின் இந்த நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு பத்து கேவ்ஸ் எஸ்டிசி உணவகத்தின் விருந்தினர் அரங்கில் நடைப்பெறுகிறது.
செய்தி : தமிழ் நேசன் 18-12-2010
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment