சிரம்பான் காவல்த்துறையினர் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் விடயத்தில் கெடுபிடி!
>> Monday, February 14, 2011
நேற்று மதியம் கைது செய்யப்பட்டு சிரம்பான் காவல்நிலைய தடுப்பு அறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 24 இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் புகைப்படக்கருவிகளை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாது, அவர்கள் அணிந்திருந்த ‘இண்ட்ராஃப்’ எனும் பெயர் பதித்த ஆரஞ்சு நிற சட்டையையும் பறிமுதல் செய்தபோது இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் தைரியமாக எதிர்த்து நின்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். எனினும், வலுக்கடாயமாக அவர்களின் உடைகள் பறிமுதல் செய்யப்பட்டு பின்பு தடுப்பிலுள்ளவர்கள் அணியும் உடையினை காவல்துறை அதிகாரிகள் கொடுத்திருக்கிறார்கள். அதே சமயம் சிரம்பான் இண்ட்ராஃப் ஆதரவாளர்களை காவல்துறையினர் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையெதிர்த்து இன்றுரவு 7.00 மணியளவில் ’இண்ட்ராஃப்’ மெழுவர்த்தி ஏந்திய போராட்டத்தினை சிரம்பான் மாவட்ட காவல்துறை கட்டிடத்திற்கு முன்புறம் நடத்தவிருப்பதாக திரு.ஜெயதாஸ் அறிவித்திருக்கிறார்.
அதே சமயம், சிரம்பான் இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் உடைகள் திரும்ப கொடுக்கப்படாதவரை அவர்கள் தடுப்பு அறையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று அவர்கள் உறுதியோடு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ’பாஸ்’ போன்ற கட்சியினர் பிடிபடும்போது அவர்களது தலைப்பாகை, சொங்கோக், கோபியா போன்றவை பறிமுதல் செய்யப்படுவதில்லை. ‘இண்ட்ராஃபிற்கு’ ஒரு நியாயம்! முசுலீம் மலாய்க்காரர்களுக்கு ஒரு நியாயம்!
சிரம்பான் மாவட்ட காவல்நிலைய துணை சுப்பரிண்டெண்டன் அலியாஸ் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் விடயத்தில் மிகவும் கெடுபிடியாக நடந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது.
@மதியம் 3.20 : நெகிரி செம்பிலான் மாநில இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர் திரு.சிவகுமார் தற்போது தனி இருட்டறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தடுப்புக் காவலில் இருக்கும் 24 போராட்டவாதிகளும் உண்ணாநோன்பு போராட்டத்தை கையிலெடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
@மதியம் 3.20 : நெகிரி செம்பிலான் மாநில இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர் திரு.சிவகுமார் தற்போது தனி இருட்டறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தடுப்புக் காவலில் இருக்கும் 24 போராட்டவாதிகளும் உண்ணாநோன்பு போராட்டத்தை கையிலெடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏ.எஸ்.பி அலியாசின் கைத்தொலைப்பேசி எண்கள் : 019-4121340.
சிரம்பான் மாவட்ட காவல்துறையின் அலைப்பேசி எண்கள் : 06-7619999
@மதியம் 5.30 : தற்சமயம் கிடைத்த தகவலின்படி, தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் விடுவிக்கப்பட்டுவித்தாக அறியப்படுகிறது.
போராட்டம் தொடரும்...
1 கருத்து ஓலை(கள்):
தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இன்னல்கள் தொடர்ந்து வந்துக்கொண்டுதான் இருக்கிறது. எதையும் போராடியே பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். போராடுவோம்! நமக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்!
Post a Comment