திசம்பர் 4ஆம் திகதி இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் இரண்டாம் தேசிய பேராளர் மாநாடு
>> Friday, November 25, 2011
மலேசிய இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் இரண்டாவது தேசிய பேராளர் மாநாடு எதிர்வரும் திசம்பர் மாதம் 4ஆம் திகதி நடைபெற உள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட சுமார் 350 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.காலை மணி 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை கோலாலம்பூர் சீன அசம்பெளி மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறும்.
லன்டனிலிருந்து இண்ட்ராஃப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி அவர்களின் இணையம் மூலமான நேரடி உரையுடன் துவங்கும் இம்மாநாட்டில் கடந்த வருட இண்ட்ராஃப் நடவடிக்கைகளின் கண்ணோட்டம், எதிர்கால நடவடிக்கைகளின் அணுகுமுறைகள், 13வது பொது தேர்தலில் இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் நிலைபாடு போன்ற தலைப்புகளில் ஆக்ககரமான பேராளர்களின் உரைகளும் விவாதங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டிற்கான நிதி அறிக்கையும் முன் மொழியப்பட்டு விவாதங்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்படும்.
கடந்த ஆண்டு மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடிய ஐந்து சிறந்த போராட்ட வாதிகளை இண்ட்ராஃப் உச்சமன்ற தேர்வுகுழுவின் பரிந்துறையின் பேரில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இவ்வாண்டிற்க்கான இண்ட்ராஃப் மனித உரிமை காவலன் ( HINDRAF HUMAN RIGHTS DEFENDER ) என்ற அங்கீகாரமும் இம்மாநாட்டில் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள்.
வி.சம்புலிங்கம்
மலேசிய இண்ட்ராஃப் தேசிய ஒறுங்கிணைப்பாளர்
010 277 4096
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment