கோரப்படாத இறந்த உடல்களுக்கு இறுதிக் காரியம் - பினாங்கு இந்து சங்கத்தின் அளப்பரிய தொண்டு
>> Monday, October 29, 2012
கடந்த 27 ஆண்டுகளாக பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களில் கோரப்படாத இறந்த உடல்களை எடுத்து அடக்கம் மற்றும் எரிக்கும் சேவையை மேற்கொண்டு வருகின்றனர் பினாங்கு இந்து சங்கத்தினர். அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்காத பட்சத்தில், பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டே இச்சேவையை அவர்கள் செய்துவருகின்றனர். இதுவரையில் 500 இறந்த உடல்களுக்கு இறுதிக் காரியங்களைச் செய்துள்ளனர். கோரப்படாத உடல்களைத் தவிர்த்து, இறுதிக் காரியங்களைச் செய்விக்க இயலாத ஏழைக் குடும்பங்களுக்கும் இவர்களின் உதவி கிட்டியுள்ளது. அண்மையில் இவர்களின் சேவையைக் கண்டு பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன். அதன் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு. இதுபோன்ற தன்னலமில்லாத சமூகச் சேவைகளைக்கு பொதுமக்களாகிய நாம்தான் உதவிக் கரம் நீட்ட வேண்டும். பினாங்கு இந்து சங்க செயல்பாடுகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி புரிய எண்ணம் கொண்டால், அவ்வியக்கத்தின் துணைத் தலைவரை அலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம். திரு.முருகையா 016-4449246
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment