பினாங்கில் இடைநிலைத் தமிழ்ப் பள்ளி அமைக்கக்கோரி கையெழுத்து வேட்டை
>> Tuesday, January 29, 2013
பினாங்கு இந்து சங்கத்தின் அறிக்கை
தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து இடைநிலைப்பள்ளிகளுக்குப் போகும் தமிழ் மாணவர்கள் தமிழைத் தொடர்ந்து படிப்பதற்குப் பலவகையில் தடைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை :-
1. எல்லா இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ் வகுப்புகள் நடைப்பெறுவதில்லை.
2. ஒரு சில பள்ளிகளில் தான் வகுப்பு நேரத்திலேயே தமிழ் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.
3. அப்படியே நடைப்பெற்றாலும் ஏனோ தானோ என்றுதான் நடைபெறுகிறது.
4. POL வகுப்புகள் மார்ச் மாதத்திற்குப் பிறகுதான் நடத்தப்படுகின்றன. மூன்று மாத காலம் நேர விரையம் செய்யப்படுகிறது.
5. ஒரு சில இடைநிலைப்பள்ளிகள் தமிழ் மாணவர்கள் தமிழ் மொழிப் பாடம் PMR/SPM தேர்வில் எடுப்பதை ஆதரிப்பதில்லை.
6. SPM இலக்கிய பாடம் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படுவதில்லை. அதனால் இலக்கிய பாடம் எடுக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
7. SPM தேர்வில் 10 + 2 தமிழ் இலக்கணம் மற்றும் தமிழ் இலக்கியம் சேர்ந்து 12 பாடம் எடுத்தாலும் JPA உபகாரக் கல்வி நிதிக்கு தமிழ் பாடத்திற்கு அங்கீகாரம் தரப்படுவதில்லை.
இவை யாவையும் கருத்தில் கொண்டு தமிழை மேம்படுத்தும் பொருட்டும் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமையுமானால் ஆர்வமுள்ள மாணவர்கள் இதைப் பயன்படுத்தி இடைநிலைத் தமிழ்க் கல்வியைத் தொடர பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே மத்திய அரசு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டுமாய் பொதுமக்களும் அரசு சாரா இயக்கங்களும் கேட்டுக் கொள்கிறோம். இதை பினாங்கு இந்து சங்க முழுமனதோடு முன்மொழிகிறது.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment