மனித உரிமைக் கல்வி - தனி மனிதருக்கு உரிய உரிமைகள்
>> Friday, September 13, 2013
குடிமை உரிமைகள் (Civil Rights)
- உயிர் வாழ்வதற்கான உரிமை
- சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
- தேசிய இனத்திற்கான உரிமை
- நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை
- வெளிப்படையான விசாரணைக்கான உரிமை
- குற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை
- (இலவச) சட்ட உதவிக்கான உரிமை
- குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை
- உறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.
- ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை
- மேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை
- மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை
- தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை
- தன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை
- நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை
- நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை
- தன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை
- ஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை
- ஒரு நாட்டைவிட்டு வெளியேறுய்வதற்கான உரிமை
அரசியல் உரிமைகள்
- கருத்துகளை வெளியிட உரிமை
- கூட்டம் கூடுவதற்கான உரிமை
- சங்கமாகச் சேருவதற்கான உரிமை
- வாக்களிப்பதற்கான உரிமை
- அரசியல் பங்கேற்புகான உரிமை
- பொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை
பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்
- வேலைக்கான உரிமை
- வேலையைத் தெரிவு செய்யும் உரிமை
- சொத்து வைத்திருப்பதற்கான உரிமை
- போதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை
- கல்வி பெறுவதற்கான உரிமை
- சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
- ஆயுள் காப்பீட்டுக்கான உரிமை
- சமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை
- அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை
- சுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமை
குழுக்களின் உரிமைகள்
- சமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)
- கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை
- தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை
- போராட்ட உரிமை
- பணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை
- பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமை
- வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமை
- சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை
- நியாயமான ஊதியத்திற்கான உரிமை
- வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)
பெண்களுக்கான உரிமைகள்
- சம ஊதியம் பெறுவதற்கான உரிமை
- பாலியல் சமத்துவத்திற்கான உரிமை
- தம்பதியருக்கிடையில் சமத்துவ உரிமை
- சுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை
- கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை
குழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள்
- கல்விப் பெறுவதற்கான உரிமை
- தொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை
- கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமை
- மரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை
- சித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை
- வேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை
- விளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமை
- சமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை
சிறைக்கைதிகளின் உரிமைகள்
- சிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமை
- சிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை
- சிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமை
- போதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமை
- துணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை
- பயிற்சி, விளையாட்டுக்கான உரிமை
- கொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை
- அதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கான உரிமை
- குடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத் தொடர்பு, நேர்காணல் மூலம்)
- வெளியுலகச் செய்திகளை தொடர்ந்து பெறுவதற்கான உரிமை
- சிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை
- மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை
- சொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமை
- பெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment