பினாங்கு இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் தைப்பூச பந்தல்

>> Sunday, January 31, 2010



Read more...

உரிமையா... சலுகையா... ? கூலிமில் கருத்தரங்கம்

>> Friday, January 22, 2010

உரிமையா, சலுகையா எனும் கருவைக் கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24/01/2010) பாயா பெசார் கூலிமில் அமைந்துள்ள அன்னை சிறீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைப்பெறவிருக்கும் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள சுற்று வட்டார மக்கள் அழைக்கப்படுகின்றனர். தவறாமல் கலந்துகொண்டு பயனடைவீர்களாக..

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்


போராட்டம் தொடரும்...

Read more...

மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நடைப்பெறாது - இண்ட்ராஃப்

>> Monday, January 11, 2010


சமய விடயங்களில் அம்னோ அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினைக் கண்டிக்கும்வகையிலும், கிருத்துவ நண்பர்களின் நம்பிக்கைகளை மதிக்காது அவர்கள்மீது இழைக்கப்பட்டிருக்கும் அரசியல் நோக்கங்கொண்ட வன்முறை தாக்குதல்களைக் நிறுத்தக் கோரியும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இருப்பினும், கிருத்துவ சமயத் தலைவர்களும் மற்றும் கிருத்துவ சமயத்தவர் சிலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க பெட்டாலிங் செயா அசம்சன்ஸ் கிருத்துவ தேவாலயத்தின் நுழைவாயிலில் எதிர்வரும் 13 சனவரியன்று நடைப்பெறவிருந்த அமைதி மறியல் கைவிடப்படுகிறது.

இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துவரும் மலேசிய கிருத்துவ சமயத்தவர்கள் மற்றும் அதன் தலைவர்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியலைக் கைவிடுகிறது என அறிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

பொ.வேதமூர்த்தி
இண்ட்ராஃப் தலைவர்

Read more...

பிரவாசி பாரதிய திவாசு மாநாட்டில் இண்ட்ராஃப்..

>> Sunday, January 10, 2010

இண்ட்ராஃப் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி தயாரித்த மலேசிய இந்திய சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை மீறல்கள் 2009 எனும் ஆய்வறிக்கையை புது தில்லியில் நடைப்பெறும் பிரவாசி மாநாட்டின்போது திரு.உதயகுமார் பலருக்கும் விநியோகித்து விளக்கமளித்தார். மலேசிய சிறுபான்மை இந்தியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை, அனைத்துலக கவன ஈர்ப்பு மூலம் அம்னோ அரசாங்கத்திற்கு பல்வகையில் அழுத்தம் கொடுக்கும் ஒரு முயற்சியாக இண்ட்ராஃப் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



மலேசிய சிறுபான்மை இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து இந்திய நிருபர்கள் திரு.உதயகுமாரின் விளக்கத்தை கேட்டறிதல்.


கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்ட பொறியியலாளர் திரு.என்.பி.ஆசார்யா, மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து அமெரிக்க வெளியுறவு செனட் குழுவின் பார்வைக்கு அங்குள்ள செனட்டர் மூலமாகக் கொண்டுச்செல்லவிருப்பதாக உறுதி கூறினார்.


ஃபிஜியின் முன்னால் பிரதமர் மகிந்த சௌத்ரியுடன்..


இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அனுமந்த ராவுடன்...


30 இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு திரு.உதயகுமார் விளக்கமளித்தல்..




முன்னாள் இந்திய எதிர்க்கட்சி தலைவர் சிறீ லால் கிருஷ்ணா அத்வானியுடனான தனிப்பட்ட சந்திப்பு..


போராட்டம் தொடரும்...

Read more...

தேவாலயங்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும்வகையில் இண்ட்ராஃப் ஏற்று நடத்தும் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணி

>> Saturday, January 9, 2010



ஊடக அறிக்கை 10/01/10

கரு : அதிகாரத்துவத் தூண்டுதலின் பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசி தாக்கியதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல்

அண்மையில் மலேசியாவில் அரசியல் நோக்கங்கொண்ட அம்னோ அரசின் தூண்டுதலின்பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் தீக்குண்டுகள் கொண்டு தாக்கப்பட்டதை இண்ட்ராஃப் வன்மையாகக் கண்டிக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அம்னோ அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சில தரப்பினரை தூண்டிவிட்டு தனது இருப்பினை அச்சுறுத்தலின் மூலம் மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக, பொதுமக்கள் மத்தியில் மதக்கலவரத்தை தூண்டிவிட எத்தனித்திருக்கிறது.

இத்தீக்குண்டு தாக்குதல்களைத் தவிர்த்து சென்ற வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப்பின் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மருட்டலாகவும், பகைமையைத் தூண்டும்வகையிலும் இருந்தன. தேசநிந்தனைக் குற்றச்சாட்டிற்காக இந்த் ஆர்ப்பாட்டக்காரர்களின்மீது அம்னோ அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இநநாட்டைப் பொறுத்தமட்டில், நம் அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கும் சமயச் சுதந்திரமானது இன்றுவரையில் கானல் நீராகவே இருந்துவருகிறது.

அம்னோ அரசாங்கத்தின் பக்கச் சார்புடைய நடைமுறைக்கொள்கைகளின் தொடர்பாதிப்புகளை எதிர்க்கொண்டுவரும் மலேசியச் சமுதாயம் முன்பைவிட பக்குவமடைந்திருப்பதை இன்றைய அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியிருக்கின்றது.

மலேசிய கிருத்துவ நண்பர்களுக்கெதிராக அவர்களின் தேவாலயங்களின்மீது நடத்தப்பெற்ற தீக்குண்டு தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையிலும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை ஏற்று நடத்தவுள்ளது. அனைத்து அமைதி விரும்பிகளையும், சனநாயகத்தின்மீது நம்பிக்கைக் கொண்டுள்ள சகோதர சகோதரிகளையும் எங்களோடு இவ்வமைதிப் பேரணியில் இணைந்து, மலிந்துவரும் சமய சுதந்திரமும், சிறுபான்மை உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்கான பலமிக்க குரலை எழுப்புவதற்கு அழைக்கிறோம். இந்நாட்டில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளையும் அநியாயங்களையும் அரசாங்கம் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைப்போமாக.

திகதி : 13 சனவரி 2010

நேரம் : 8.00 pm

இடம் : அசம்சன்ஸ் தேவாலய நுழைவாயில் , டெம்ப்லர் சாலை பெட்டாலிங் ஜெயா (அசுந்தா மருத்துவமனை அருகில்)

இம்மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள எண்ணங்கொண்டவர்கள் எங்களுடைய தகவல் ஒருங்கிணைப்பாளர் திரு.செயதாசு அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

அலைப்பேசி எண்கள் : 012-6362287

நன்றி

பொ.வேதமூர்த்தி

தலைவர்

இண்ட்ராஃப்

போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP