தேவாலயங்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும்வகையில் இண்ட்ராஃப் ஏற்று நடத்தும் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணி

>> Saturday, January 9, 2010ஊடக அறிக்கை 10/01/10

கரு : அதிகாரத்துவத் தூண்டுதலின் பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசி தாக்கியதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல்

அண்மையில் மலேசியாவில் அரசியல் நோக்கங்கொண்ட அம்னோ அரசின் தூண்டுதலின்பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் தீக்குண்டுகள் கொண்டு தாக்கப்பட்டதை இண்ட்ராஃப் வன்மையாகக் கண்டிக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அம்னோ அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சில தரப்பினரை தூண்டிவிட்டு தனது இருப்பினை அச்சுறுத்தலின் மூலம் மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக, பொதுமக்கள் மத்தியில் மதக்கலவரத்தை தூண்டிவிட எத்தனித்திருக்கிறது.

இத்தீக்குண்டு தாக்குதல்களைத் தவிர்த்து சென்ற வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப்பின் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மருட்டலாகவும், பகைமையைத் தூண்டும்வகையிலும் இருந்தன. தேசநிந்தனைக் குற்றச்சாட்டிற்காக இந்த் ஆர்ப்பாட்டக்காரர்களின்மீது அம்னோ அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இநநாட்டைப் பொறுத்தமட்டில், நம் அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கும் சமயச் சுதந்திரமானது இன்றுவரையில் கானல் நீராகவே இருந்துவருகிறது.

அம்னோ அரசாங்கத்தின் பக்கச் சார்புடைய நடைமுறைக்கொள்கைகளின் தொடர்பாதிப்புகளை எதிர்க்கொண்டுவரும் மலேசியச் சமுதாயம் முன்பைவிட பக்குவமடைந்திருப்பதை இன்றைய அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியிருக்கின்றது.

மலேசிய கிருத்துவ நண்பர்களுக்கெதிராக அவர்களின் தேவாலயங்களின்மீது நடத்தப்பெற்ற தீக்குண்டு தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையிலும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை ஏற்று நடத்தவுள்ளது. அனைத்து அமைதி விரும்பிகளையும், சனநாயகத்தின்மீது நம்பிக்கைக் கொண்டுள்ள சகோதர சகோதரிகளையும் எங்களோடு இவ்வமைதிப் பேரணியில் இணைந்து, மலிந்துவரும் சமய சுதந்திரமும், சிறுபான்மை உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்கான பலமிக்க குரலை எழுப்புவதற்கு அழைக்கிறோம். இந்நாட்டில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளையும் அநியாயங்களையும் அரசாங்கம் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைப்போமாக.

திகதி : 13 சனவரி 2010

நேரம் : 8.00 pm

இடம் : அசம்சன்ஸ் தேவாலய நுழைவாயில் , டெம்ப்லர் சாலை பெட்டாலிங் ஜெயா (அசுந்தா மருத்துவமனை அருகில்)

இம்மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள எண்ணங்கொண்டவர்கள் எங்களுடைய தகவல் ஒருங்கிணைப்பாளர் திரு.செயதாசு அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

அலைப்பேசி எண்கள் : 012-6362287

நன்றி

பொ.வேதமூர்த்தி

தலைவர்

இண்ட்ராஃப்

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP