மலேசியத் தமிழர்கள்

>> Sunday, September 30, 2007


மலேசியத் தமிழர்களின் சரித்திரம் பல சோகக் கதைகளைக் கொண்டது. இன்றளவில் அச்சரித்திரம் பலரால் மறக்கப்பட்டு விட்டாலும், அதனை மீண்டும் புரட்டிப் பார்க்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் சில காலங்களாகவே மலேசியத் தமிழர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் புதுவகை இன்னல்களும் நேரடி, மறைமுக தாக்கல்களுமேயாகும்.சோகமும் இன்னலும் தாக்கும்போதுதான் மனிதனுக்கு கடவுள் என்பவர் ஒருவர் இருப்பதாகவே நினைவுக்கு வரும். அதுவரையில் மனிதன் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருப்பான். ஆனால் "கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் செய்யமுடியுமா?

ஆனால், மலேசியத் தமிழர்களுக்கு இன்னும் கண் முற்றிலும் பாழாகி விடவில்லை, இருப்பினும் மெல்ல மெல்லப் பாழாகும் நிலைக்கு இட்டுச் செல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகள் நெருங்குகின்றன என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளத்தான் வேண்டும்.
நல்ல வேளை "சேற்றில் முளைத்த செந்தாமரைகள்" என பலர் நம் மலேசியத் தமிழர்களின் தன்மானத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு உதவிக்கரமாக செயல்பட நம் இருகரங்கள் ஏன் செயல்படாமல் மறுத்துப்போய் இருக்கின்றன என்று ஒவ்வொரு மலேசியத்தமிழர்களும் சிந்திக்க வேண்டும்!! செயல்பட வேண்டும்!!
மலையக தமிழர்களின் போராட்டங்களையும் சவால்களையும் வரும் காலங்களில் வெளியிடவுள்ளேன்.அன்பர்கள், இது தொடர்பாக தகவல்கள் பலவற்றை இவ்வலையகத்தில் பரிமாறிக் கொள்ளலாம்.


நன்றி.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP