சிறீ பேராக் மலாய் பள்ளிக்கு 20 மில்லியன் மானியம், 523 தமிழ்ப்பள்ளிகளுக்கு??

>> Saturday, February 13, 2010செந்தூலில் அமைந்துள்ள ஒரு மலாய்ப் பள்ளியின் துணைக் கட்டிட நிர்மாணிப்பிற்காக 20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் / கல்வி அமைச்சர் தான் சிறீ முகிதீன் யாசின் அறிவித்திருக்கிறார்.

”20 மில்லியன் மானியத் தொகையும், கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கிய நிலமும் தயாராக இருக்கிறது. இனி நிர்மாணிப்பு வேலைகளை விரைவில் தொடங்கலாம்என்று கூறுகிறார் துணைப்பிரதமர். இன்னும் சில மாதங்களில் இப்பள்ளியின் துணைக்கட்டிட நிர்மாணிப்புப் பணி பூர்த்தியாகிவிடும். இதேப்போன்று 99 சதவிகிதம் மலாய் முசுலீம் மாணவர்களுக்காக, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள துரோலாக் எனுமிடத்தில் மாரா அறிவியல் தொடக்கக் கல்லூரியைக் கட்டுவதற்கு மத்திய அரசாங்கம் 120 மில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளது.

ஆனால், 52 ஆண்டுகள் ஆகியும் 80 சதவிகித தமிழ்ப்பள்ளிகளும் அரசின் முழு மானியம் பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இப்பள்ளிகள் பாழடைந்த நிலையில் மாட்டுத் தொழுவம் மற்றும் வைப்பறையைப் போன்று காட்சியளிக்கின்றன.

2009-ஆம் ஆண்டின் நாட்டு வரவுசெலவு கணக்கில் முதலாவது மற்றும் இரண்டாவது பொருளாதார ஊக்கமளிப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பள்ளிகளுக்கென்று ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 100 மில்லியன் ரிங்கிட் 523 தமிழ்ப்பள்ளிகளைச் சென்றடையவில்லை. “ பொருட்களின் விலையேற்றத்தின் பாதிப்பின் காரணமாக” ( தி ஸ்டார் 30/09/09, மற்றும் 13/10/09 எனும் திகதியிடப்பட்ட பிரதமருக்கான எங்களுடைய கடிதம் )

தமிழ்ப் பள்ளிகளை அரசின் முழு மானியம் பெற்றப் பள்ளிகளாக மாற்றாதிருப்பதற்கு இதுபோன்ற காரணங்களைத்தான் கூறுகிறார்கள். கீழே காண்பிக்கப்பட்டுள்ள கொள்கலனில் அமைந்துள்ள தமிழ்ப் பள்ளியின் படத்தைக் காண்க.

இதுதான் ஒரு மலாய்-சியா??
மூலம் : மனித உரிமைகள் கட்சி

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Tamilvanan February 15, 2010 at 5:50 PM  

த‌மிழ்ப் ப‌ள்ளீக‌ளுக்கு நிதியுத‌வி எல்லாம் வெறும் அறிக்கைக‌ளிலும் ஆளும் க‌ட்சிக‌ளின் மேடை வ‌ச‌ன‌த்தில் ம‌ட்டும்தான் உள்ள‌து.ஒவ்வொரு த‌ட‌வையும் த‌வ‌றாம‌ல் கிடைப்ப‌து "அல்வா" ம‌ட்டும்தான்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP