மனித உரிமைகள் கட்சியின் அன்பு கலை விழா

>> Tuesday, February 23, 2010

எதிர்வரும் 6-ஆம் திகதி மார்ச்சு மாதம் கிள்ளான் ஒக்கியன் மண்டபத்தில், மனித உரிமைகள் கட்சியின் நிதி திரட்டும் அன்பு கலை விழா நடைப்பெறவிருக்கின்றது. மனித உரிமைகள் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்நிதி திரட்டும் நிகழ்வு நாடு தழுவிய நிலையில் நடைப்பெறவுள்ளது. முற்றிலும் ஒரு புதிய முயற்சியாக தெருவில் நின்று போராளிகள் கூத்துக்கட்டுவதைப் போலவே, மேடையில்மலேசிய இந்தியர்களின் உரிமைப் போரட்டமும், அரசியல் தன்னாளுமை வியூகமும்எனும் கருப்பொருளில் ஆடல், பாடல்களுடன் கலைஞர்கள் கூத்துக்கட்டவிருக்கின்றனர்.

இந்நிகழ்வில் இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் சட்ட ஆலோசகர், மனித உரிமைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.உதயகுமார் கலந்துகொண்டுமலேசிய இந்தியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம்குறித்து உரையாற்றவிருக்கிறார். மேலும்மலேசிய இந்தியர்களின் அரசியல் நிலைமைகுறித்த கண்காட்சியும் இடம்பெறவிருக்கின்றது.

இந்நிகழ்வின் நுழைவுச்சீட்டின் விலை குறித்த விவரங்கள் :

பத்துபேர் அமர்ந்து விருந்துண்ணும் வட்டமேசை ரிம.500 வெள்ளி மற்றும் ரிம1000 வெள்ளி மட்டுமே.

தனியாள் நுழைவுச் சீட்டு ரிம.50 மற்றும் ரிம100 மட்டுமே.

இந்நிகழ்வு வெற்றிப்பெற நுழைவுச் சீட்டை வாங்கி ஆதரவு கொடுக்க நினைக்கும் அன்பர்கள் கீழ்கண்ட தொலைப்பேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும்.

திரு.செயதாசு : 03-2282 5241 அல்லது 012-6362 287
திரு.கலைசெல்வம் : 012-5637614

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP