பாட்டாளி மக்களின் பிரதிநிதியை கம்யூனிசவாதி என முத்திரைக் குத்தும் அம்னோ அரசாங்கம்!
>> Monday, June 27, 2011
”போதும் ஓய்வெடுங்கள்” என பாரிசான் அரசாங்கத்தை கோரும் வகையிலான கருப்பொருளில் நாடு தழுவிய நிலையில் மலேசிய சோசலிச கட்சி நிகழ்த்திய பிரச்சாரத்தின் போது, வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்துவந்த குழுவை காவல்த்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்ததோடு, சின் பெங், ரசீட் மைடின் ஆகியோரது முகங்கள் பதித்த சட்டைகள் அணிந்திருந்தமைக்காக 30 சோசலிச போராளிகளின்மீது தேச நிந்தனைச் சட்டம் கொண்டு வழக்கும் பதிவு செய்திருக்கின்றது மலேசிய அம்னோ அரசாங்கம்! அதுமட்டுமல்லாது, துண்டு அறிக்கைகளை விநியோகம் செய்ததற்காக அச்சு ஊடக மற்றும் பிரசுரிப்புச் சட்டத்திலும் , மாமன்னருக்கு எதிராக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி சட்டப்பிரிவு 122-இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இண்ட்ராஃப் மக்கள் சக்தி / மனித உரிமைக் கட்சியின் தேசிய ஆலோசகர் திரு.நா.கணேசன் கருத்துரைக்கையில், அம்னோ அரசாங்கத்தின் சட்டவிரோதக் கைதானது சனநாயகத்திற்கு இழைத்த கொடுமை எனவும், ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்படவுள்ள 30 சோசலிச போராளிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
1 கருத்து ஓலை(கள்):
தகவலுக்கு நன்றிங்க
Post a Comment