பினாங்கு பிறையில் தேய்பிறையாகும் கம்போங் மானீசு இந்தியர்களின் எதிர்காலம்!

>> Wednesday, December 30, 2009

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்பட்ட கம்போங் மானீசு இந்திய கிராமவாசிகளின் சோகக் கதையிது. தகுதியிருந்தும் உதவிகள் கிடைக்காது ஏழ்மையில் வாடும் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக தொக்கி நிற்கிறது. புவா பாலா கிராமத்தைப்போலவே இக்கிராமமும் எதிர்காலத்தில் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அரசியல் பலமில்லாத இம்மக்களுக்கு அதிகாரத்துவத்திடமிருந்து உரிய உரிமைகளைப் பெற்றுத் தர முடியுமா?

Read more...

7'ஏ'க்கள் பெற்ற தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு எம்.ஆர்.எசு.எம் அறிவியல் கல்விக்கூடத்தில் இடம் தரவேண்டும்!


டத்தோ நஜிப் ரசாக்

மலேசிய பிரதமர்

Perdana Menteri Malaysia

Blok Utama Bangunan Perdana Putra,

Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

E-mail:najib@pmo.gov.my.

டான் ஸ்ரீ முயிடின் யாசின்

மலேசிய துணைப் பிரதமர்

Perdana Menteri Malaysia

Blok Utama Bangunan Perdana Putra,

Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya E-Mail : najib@pmo.gov.my.



அனைத்து 817 தமிழ்ப்பள்ளி 7 ‘ஏ’ மாணவர்களுக்கும் எம்.ஆர்.எஸ்.எம் அறிவியல் கல்லூரியில் ஒன்றாம் படிவம் (2010) பயில நுழைவு தரப்பட வேண்டும்.

மேலே குறிப்பிட்டது போல, நாடு முழுவதிலும் உள்ள 817 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் சோதனையில் 7 ஏக்கள் பெற்ற சாதனை மலேசிய நண்பன், தமிழ் நேசன் மற்றும் மக்கள் ஓசை போன்ற நாளிதழ்களில் 20/11/09 முதல் சில தினங்களுக்கு தலைப்புச் செய்திகளாக வெளியாகின.

உத்துசான் மலேசியா 29/11/09 பக்கம் 8 மற்றும் நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பக்கம் 20 ஆகிய இரண்டு நாளேடுகளில் மாரா கல்லூரிகளுக்கான நுழைவு கடிதங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் 7 ‘ஏ’க்கள் பெற்ற 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட மாரா அறிவியல் பயிற்சி கல்லூரியிடமிருந்து நுழைவு கடிதம் கிடைக்கவில்லை என்ற கருத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

அதோடு மட்டுமின்றி மலேசிய கல்வித்திட்டத்தில் ‘ஒரு மலேசியா’ திட்டத்திற்கு ஏற்ப மலாய் இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்று 7 ‘ஏ’க்கள் பெற்ற இந்த 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

தேசிய பள்ளி மாணவர்கள் மொத்தம் 5 ஏக்கள் மட்டுமே பெற முடியும். ஆனால் சிறந்த தேர்ச்சியான 7 ‘ஏ’க்கள் பெற்ற தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இந்த 817 மாணவர்கள் தகுந்த வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால் அவர்கள் எங்குச் செல்வார்கள் மற்றும் தங்களுடைய திறமையையும் அறிவு வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கும் அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வாறு பங்காற்றுவார்கள்?

ஆகவே, 7 ஏக்கள் பெற்ற 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் மற்றும் தேசிய பள்ளியில் 5 ஏக்கள் பெற்ற அனைத்து இந்திய மாணவர்களுக்கும் 21/11/09ஆம் நாளன்று பெரித்தா ஹாரியான் பக்கம் 7இல் வெளியிடப்பட்ட நாடு முழுவதிலுமுள்ள 42 மாரா அறிவியல் கல்லூரியில் இருக்கும் மொத்தம் 12,440 இடங்களில் உள்ள முழு தங்கும் வசதி பெற்ற கல்லூரிகள் மற்றும் என்.எஸ்.டி 5/4/08ஆம் நாள் பக்கம் 7இல் வெளியான படிவம் ஒன்றுக்கான 2010 ஆம் ஆண்டில் தொடங்கவிருக்கும் மாரா கல்லூரியில் இடம் கொடுக்கப்பட வேண்டும். எனவேதான் நம் மலேசிய பிரதமரால் முழங்கப்படும் ஒரு மலேசியா வாசகம் உண்மையானதாக இருக்கும்.

அதோடு மட்டுமின்றி அவர்கள் மாரா அறிவியல் கல்லூரிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்களுக்கு மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசாங்கத்தால் உத்தரவாதம் தரப்பட வேண்டும். இந்திய மாணவர்கள் தலையில் முக்காடு அணிவது (tudung), கட்டாய இஸ்லாம் மத வகுப்புகளுக்குச் செல்லவோ, இஸ்லாம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவதோ இருத்தல் கூடாது. அரசியல் சாசனப் பிரிவு 11 (மத சுதந்திரம்) மற்றும் 12-இன் படி யாரும் மற்றவர்களை அவர்களின் சொந்த மதம் தவிர்த்து பிற மத நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது.

போலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகள் படிக்க போலீஸ் (எம்.ஆர்.எஸ்.எம்), இராணுவ வீரரின் பிள்ளைகள் பயில இராணுவ (எம்.ஆர்.எஸ்.எம்), மற்றும் ஃபெல்டா துறையில் உள்ளவர்களின் பிள்ளைகள் படிக்க ஃபெல்டா (எம்.ஆர்.எஸ்.எம்) இருக்கிறது. தமிழ் (எம்.ஆர்.எஸ்.எம்) மாரா அறிவியல் கல்லூரி எழுப்பப்பட்டால் அது இந்த 817 7 ஏக்கள் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில் உள்ள 110,000 மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இவ்வாறு செய்வதால் அவர்களும் நாட்டின் மேம்பாட்டிற்கான தங்களின் பங்களிப்பை ஆற்ற உறுதுணையாக அமையும்.

உங்களின் உடனடி பதில் மற்றும் நடவடிக்கையை பெரிதும் மதிக்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,

________________

பி. உதயகுமார்

(பொது செயலாளர்)

Read more...

புவா பாலா ஓவியக் கண்காட்சி

>> Monday, December 21, 2009



முத்தியாரா ஓவியக் கண்காட்சியகத்தின் ஏற்பாட்டில் நேற்று ’புவா பாலா நினைவலைகள்’ எனும் கருப்பொருளை தாங்கிய ஓவியக் கண்காட்சி தொடங்கியது. 20-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதிவரை நடைப்பெறவுள்ள இக்கண்காட்சியைக் காண பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். பினாங்கு இந்தியர்களின் பாரம்பரிய கிராமமான புவா பாலாவை கடந்த செப்தெம்பர் மாதமன்று மாநில அரசாங்கம் மற்றும் மேம்பாட்டாளர்கள் இணைந்து தரைமட்டமாக்கி அங்குள்ள மக்களை விரட்டியடித்தனர். இதன்வழி அங்கு பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ஆடம்பர அடுக்குமாடி கட்டிட பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன.

200 ஆண்டுகளாய் பிரவுன் தோட்டத்தில் வியர்வையையும் உதிரத்தையும் உதிர்த்து வாழ்ந்த இந்திய மக்களுக்காக கொடுக்கப்பட்ட 6.2 ஏக்கர் நிலமும் அங்கு படர்ந்திருந்த பசுமையும், இயற்கையாய் தேங்கியிருந்த நிலத்தடி நீரும் முற்றிலும் அழிக்கப்பட்டதன் வழி ஒரு சரித்திரம் நம் புறக்கண்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. அச்சரித்திர சான்றுகள் இன்று ஓவியங்களின் வடிவில் உயிர்தெழுந்து நம் உணர்வலைகளை தட்டியெழுப்பப் புறப்பட்டிருக்கின்றன.

அப்பாரம்பரிய கிராமம் உடைபடுவதற்கு ஒருவாரம் முன்பாக, 13 ஓவியக் கலைஞர்கள் அக்கிராமத்தின் உயிரோட்டத்தை தூரிகையியால் வார்த்தெடுத்த ஓவியங்கள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கண்காட்சியினை முனைவர் டத்தோ அன்வார் ஃபசால் அதிகாரப்பூர்வமாக நேற்று திறந்து வைத்தார். அந்நிகழ்வின் காணொளி காட்சி கீழே :



முத்தியாரா ஓவியக்கண்காட்சியகத்தின் முகவரி :


118, Lebuh Armenian,
10200 Pulau Pinang, Malaysia.

அலைப்பேசி எண்கள் : 604-262 0167

Read more...

இசா சட்டத்தை துடைத்தொழிப்போம் - இண்ட்ராஃபின் அமைதி மறியல்

>> Monday, December 14, 2009

இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு, நேற்று பங்சாரில் இண்ட்ராஃபினர் அமைதி மறியலில் ஈடுபட்டனர். இம்மறியலில் திரு.செயதாசு கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

பங்சார் சிறீ நாகேசுவரி ஆலயத்தை நோக்கி அமைதி ஊர்வலம்




அமைதி மறியல் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல - பொ.உதயகுமார் விளக்கம்



போராட்டம் தொடரும்...

Read more...

மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுப்போம்

>> Thursday, December 10, 2009

இன்று அகில உலக மனித உரிமைப் பிரகடன நினைவு நாள். 1948-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10-ஆம் நாள் ஐக்கிய நாட்டவையின் பொதுக் குழு கூட்டத்தில் அகில உலக மனித உரிமைப் பிரகடனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்தப் பதிவையும் காண்க : மனித உரிமைகள் என்றால் என்ன?

மனித உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரலாற்றோடு பிண்ணிப் பிணைந்த அதன் பரிணாமத்தை 10 நிமிடங்களில் தெளிவாக விளக்கிக் காட்டும் ஐ.நா மனித உரிமை ஆணையம் தயாரித்த ஆவணப்படம் இதோ :



ஐக்கிய நாட்டவையின் மனித உரிமை ஆணையம் வரையறுத்துள்ள 30 விதமான மனித உரிமைகள் குறித்த சுருக்கமான விளங்கங்களோடு தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இதோ :



இன்றைய தினத்தில் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் போன்றவர்களோடு மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்துக் கொள்ளலாமே..

போராட்டம் தொடரும்..

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP