7'ஏ'க்கள் பெற்ற தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு எம்.ஆர்.எசு.எம் அறிவியல் கல்விக்கூடத்தில் இடம் தரவேண்டும்!

>> Wednesday, December 30, 2009


டத்தோ நஜிப் ரசாக்

மலேசிய பிரதமர்

Perdana Menteri Malaysia

Blok Utama Bangunan Perdana Putra,

Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

E-mail:najib@pmo.gov.my.

டான் ஸ்ரீ முயிடின் யாசின்

மலேசிய துணைப் பிரதமர்

Perdana Menteri Malaysia

Blok Utama Bangunan Perdana Putra,

Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya E-Mail : najib@pmo.gov.my.அனைத்து 817 தமிழ்ப்பள்ளி 7 ‘மாணவர்களுக்கும் எம்.ஆர்.எஸ்.எம் அறிவியல் கல்லூரியில் ஒன்றாம் படிவம் (2010) பயில நுழைவு தரப்பட வேண்டும்.

மேலே குறிப்பிட்டது போல, நாடு முழுவதிலும் உள்ள 817 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் சோதனையில் 7 ஏக்கள் பெற்ற சாதனை மலேசிய நண்பன், தமிழ் நேசன் மற்றும் மக்கள் ஓசை போன்ற நாளிதழ்களில் 20/11/09 முதல் சில தினங்களுக்கு தலைப்புச் செய்திகளாக வெளியாகின.

உத்துசான் மலேசியா 29/11/09 பக்கம் 8 மற்றும் நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பக்கம் 20 ஆகிய இரண்டு நாளேடுகளில் மாரா கல்லூரிகளுக்கான நுழைவு கடிதங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் 7 ‘க்கள் பெற்ற 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட மாரா அறிவியல் பயிற்சி கல்லூரியிடமிருந்து நுழைவு கடிதம் கிடைக்கவில்லை என்ற கருத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

அதோடு மட்டுமின்றி மலேசிய கல்வித்திட்டத்தில்ஒரு மலேசியாதிட்டத்திற்கு ஏற்ப மலாய் இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்று 7 ‘க்கள் பெற்ற இந்த 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

தேசிய பள்ளி மாணவர்கள் மொத்தம் 5 ஏக்கள் மட்டுமே பெற முடியும். ஆனால் சிறந்த தேர்ச்சியான 7 ‘க்கள் பெற்ற தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இந்த 817 மாணவர்கள் தகுந்த வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால் அவர்கள் எங்குச் செல்வார்கள் மற்றும் தங்களுடைய திறமையையும் அறிவு வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கும் அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வாறு பங்காற்றுவார்கள்?

ஆகவே, 7 ஏக்கள் பெற்ற 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் மற்றும் தேசிய பள்ளியில் 5 ஏக்கள் பெற்ற அனைத்து இந்திய மாணவர்களுக்கும் 21/11/09ஆம் நாளன்று பெரித்தா ஹாரியான் பக்கம் 7இல் வெளியிடப்பட்ட நாடு முழுவதிலுமுள்ள 42 மாரா அறிவியல் கல்லூரியில் இருக்கும் மொத்தம் 12,440 இடங்களில் உள்ள முழு தங்கும் வசதி பெற்ற கல்லூரிகள் மற்றும் என்.எஸ்.டி 5/4/08ஆம் நாள் பக்கம் 7இல் வெளியான படிவம் ஒன்றுக்கான 2010 ஆம் ஆண்டில் தொடங்கவிருக்கும் மாரா கல்லூரியில் இடம் கொடுக்கப்பட வேண்டும். எனவேதான் நம் மலேசிய பிரதமரால் முழங்கப்படும் ஒரு மலேசியா வாசகம் உண்மையானதாக இருக்கும்.

அதோடு மட்டுமின்றி அவர்கள் மாரா அறிவியல் கல்லூரிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்களுக்கு மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசாங்கத்தால் உத்தரவாதம் தரப்பட வேண்டும். இந்திய மாணவர்கள் தலையில் முக்காடு அணிவது (tudung), கட்டாய இஸ்லாம் மத வகுப்புகளுக்குச் செல்லவோ, இஸ்லாம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவதோ இருத்தல் கூடாது. அரசியல் சாசனப் பிரிவு 11 (மத சுதந்திரம்) மற்றும் 12-இன் படி யாரும் மற்றவர்களை அவர்களின் சொந்த மதம் தவிர்த்து பிற மத நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது.

போலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகள் படிக்க போலீஸ் (எம்.ஆர்.எஸ்.எம்), இராணுவ வீரரின் பிள்ளைகள் பயில இராணுவ (எம்.ஆர்.எஸ்.எம்), மற்றும் ஃபெல்டா துறையில் உள்ளவர்களின் பிள்ளைகள் படிக்க ஃபெல்டா (எம்.ஆர்.எஸ்.எம்) இருக்கிறது. தமிழ் (எம்.ஆர்.எஸ்.எம்) மாரா அறிவியல் கல்லூரி எழுப்பப்பட்டால் அது இந்த 817 7 ஏக்கள் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில் உள்ள 110,000 மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இவ்வாறு செய்வதால் அவர்களும் நாட்டின் மேம்பாட்டிற்கான தங்களின் பங்களிப்பை ஆற்ற உறுதுணையாக அமையும்.

உங்களின் உடனடி பதில் மற்றும் நடவடிக்கையை பெரிதும் மதிக்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,

________________

பி. உதயகுமார்

(பொது செயலாளர்)

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

சுப.நற்குணன் December 30, 2009 at 6:39 PM  

எம்.ஆர்.எசு.எம் அறிவியல் கல்விக்கூடத்தில் நமது மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படையில் நியாயமானதுதான்.

அதேவேளையில், அங்கு தமிழை ஒரு பாடமாகப் படிப்பதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

நம்முடைய மிகச் சிறந்த 7ஏ பெற்ற மாணவர்கள் அங்கு சென்று தமிழைக் கோட்டைவிடும் நிலைமை பரிதாபத்திற்கு உரியது அல்லவா?

இதனையும் கருத்தில்கொண்டு நமது கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

அறிவியல் படிப்பவர்களுக்கு தமிழ்மொழி எதற்கு? என்ற விதண்டாவாதங்கள் இங்கு எழவே கூடாது.

அறிவியலாளன், மருத்துவன், பொறியியலாளன், வழக்கறிஞன் ஆகியோர் மொழியை அதுவும் தாய்மொழியைப் படிக்க வேண்டிய அவசியமில்லை என்ற வறட்டுச் சிந்தனைகள் கூடவே கூடாது.

எம்.ஆர்.எசு.எம் அறிவியல் கல்விக்கூடத்தில் தாய்மொழியைப் படிப்பதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்த நமது அமைப்புகள் முயன்றால் நல்லது.

ஒற்றன் December 30, 2009 at 9:00 PM  

அன்பின் திருத்தமிழ் ஐயா சுப.நற்குணன்,

தங்களின் பரிந்துரை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயம். எம்.ஆர்.எசு.எம் அறிவியல் கல்விக்கூடத்தில் தமிழும் இடம்பெற ஆவண செய்தல் வேண்டும்.

கருத்திற்கு நன்றி.

மீண்டும் வருக..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP