பினாங்குத் தீவு மக்கள் சக்தியினரின் “மக்கள் சேவை” அலைவரிசை.
>> Monday, March 2, 2009
பினாங்குத் தீவு மக்கள் சக்தியினரின் முயற்சியில் இயங்கிவரும் சமூக சேவை மையமானது, பலதரப்பட்ட மக்களின் பிரச்சனைகளை குறிப்பாக அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம், உடல் அங்கவீனம், வருமானம் குறைந்தோர், வயது முதிர்ந்தோர், தனித்துவாழும் தாய்மார்கள் போன்ற பிரச்சனைகளை களைவதற்கு பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் அண்மையில் பினாங்குத் தைப்பூச தினத்தன்று மக்களிடமிருந்து கிடைத்த பல புகார்களின் அடிப்படையில், அவற்றிற்கான தீர்வுகளை காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் பிறப்புப் பத்திரம் இல்லாத ஐந்தாம் ஆண்டு பயிலும் ஒரு தமிழ்ப் பள்ளி மாணவியின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரைக் கண்டு எடுத்த பேட்டியின் காணொளி காட்சி கீழே..
கடந்த வாரம் பிறப்புப் பத்திரம் இல்லாத ஐந்தாம் ஆண்டு பயிலும் ஒரு தமிழ்ப் பள்ளி மாணவியின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரைக் கண்டு எடுத்த பேட்டியின் காணொளி காட்சி கீழே..
இதுபோன்று தீர்வுக் காணப்படும் பிரச்சனைகளை மக்களின் பார்வைக்கு கொண்டுவரும் ஒரு முயற்சியாக “மக்கள் சேவை” என்றொரு யூ டியூப் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
“யூ டியூப்” கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த அலைவரிசையோடு ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும்.
யூ டியூப் முகவரி : http://www.youtube.com/makkalsevai
“யூ டியூப்” கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த அலைவரிசையோடு ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும்.
யூ டியூப் முகவரி : http://www.youtube.com/makkalsevai
5 கருத்து ஓலை(கள்):
சூப்பருங்க!!! நானும் உங்க குழுவில் சேர்ந்துள்ளேன். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
பேச்சில் மட்டுமே வெட்டி முறிக்கும் ம.இ.கா 'ஆவி' தலைவரைப் போலவே அந்த கட்சியின் ஏனையத் தலைவர்களும். எல்லாம் சோற்று மாடுகள்..!!!
மக்கள் சக்தியினர் சொல்வதையே செய்வர்; செய்வதையே சொல்வர். காரணம், நமக்குத் தேவை அரசியல் ஆதாயம் இல்லை; மக்கள் சேவை மட்டுமே நம் குறிக்கோள்.
என்னால் முடிந்தவற்றை கிள்ளானிலிருந்து செய்யத் தொடங்கியிருக்கின்றேன். செய்திகளை அவ்வப்போது உங்களுக்கும் தெரியப்படுத்துகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துகளுக்கு நன்றி கலை..
கிள்ளானில் சமூக சேவை தொடங்கியிருக்கும் அன்பர் மாரிமுத்துவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்..
எமது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய தமிழ் நெஞ்சங்களே.....
எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி, பட்டவொர்த் டேவான் ஹாஜி அகமட் படாவி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தைப் பற்றிய விவரங்களை தங்களது வலைப்பதிவுகளில் பதிவிட்டு, இந்நிகழ்வை வெற்றிப் பெற செய்திட வேண்டுகிறோம்.
மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற எதிரணி தலைவர், மூத்த எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசவுள்ளனர். மலேசிய தமிழர் வரலாற்றில், இதுநாள் வரையிலும் இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட பொழுதிலும், இம்முறை நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தின் வழி மலேசிய மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.
இக்கூட்டமானது, வெறும் நிதி சேகரிப்பு கூட்டமாக மட்டும் முடிந்து விடாமல், இலங்கை அரசாங்கத்தின் இன்வெறி போரை வெளிப்படுத்தும் பிராச்சார கூட்டமாகவும் அமையும். இலங்கையில் நடக்கும் இன அழிப்பு போரை, தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் நடத்தும் இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போலி முகத்திரையையும் கிழிக்கும் கூட்டமாக இது அமையும். தமிழர் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு இலங்கையில் நடைபெறும் கொலைவெறி ஆட்டத்தை படம்பிடித்துக் காட்டி, மலேசிய மக்களிடத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு கோரப்படும்.
இந்நிகழ்வு சம்பந்தமான விவரங்களை தத்தம் வலிப்பதிவுகளில் வெளியிட்டு, ஈழத்தமிழர் இன்னல் துடைக்க நம்மால் இயன்றதை செய்வோம். நிகழ்வு சம்பந்தமான படங்களை இவ்வலைப்பதிவில் தங்கள் உபயோகத்திற்காக பதிவிடுகிறேன். மேல் விவரங்கள், கீழ்காணும் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்க.
நன்றியுடன்,
மு. சத்தீஸ்,
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி
நண்பர்களே.. இன்று காலையில் குமரனிடம் (மாடப்புறா) இருந்து வந்த ஒரு மின்மடலில், அண்ணன் YB மனோகரன் மலையாளம் அவர்களின் இல்லத்தரசி சோகத்தோடு எழுதியிருந்த மடலைப் படித்தேன்.. கண்கள் குளமாயின. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட நான் மட்டும் அல்ல.. அந்த கடிதத்தைப் படிக்கும் அனைத்து நல் உள்ளங்களும் தமிழ் நெஞ்சங்களும் முன் வருவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.. ஆனால், அந்த மடலில் அவரின் வங்கி எண்ணோ மற்ற தொடர்பு எண்களோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது போன்று இவருக்கு மட்டுமல்ல.. அந்த ஐவரின் குடும்பத்துக்கும் மலேசியத்தமிழர்கள் அனைவரும் கடமைப் பட்டுள்ளோம்.. ஆளுக்கு மாதம் 1 ரிங்கிட் அனுப்பினால் கூட.. அவர்கள் நல்ல நிலையில் வாழ முடியும். இங்கே 2 மில்லியன் இந்தியர்கள் இருக்கிறோம்.. இதற்காக நாமெல்லாம் கூட்டாக முயன்றால் என்ன?
Post a Comment