முதலாளித்துவத்திற்கு கூஜா தூக்கும் சனநாயகம்!

>> Saturday, March 28, 2009

மக்கள் ஓசை 28/03/09 பக்கம் 1


மக்கள் ஓசை 28/03/09 பக்கம் 17 (தொடர்ச்சி)


ஒரு குறிப்பிட்ட இடத்தில் காலங்காலமாக வாழ்ந்து வரும் மக்களை விரட்டியடிப்பதற்கு சட்டங்களை வகுத்து வைத்திருக்கும் இந்த சனநாயக அரசாங்கம், தன் குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கும் விடயத்தில் ஏனோ கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது. அதற்கொரு நல்ல உதாரணம்தான் இந்த சுங்கை கித்தா 2 தோட்ட மக்களின் பிரச்சனை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகளற்று இருளில் வாழ்ந்து வர வேண்டிய ஒரு சூழ்நிலையில் தள்ளப்பட்ட இம்மக்களின் நிலையைப் பார்க்கும்பொழுது, இந்நாடு முதலாளித்துவத்திற்கு எந்தளவு அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்பது புலப்படுகிறது.

அனைத்திற்கும் பணம்! பணமிருந்தால் இந்த அரசாங்கம் அடிமை! தன் தோட்டத்து மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன் என ஒருவன் அராஜகம் செய்து கொண்டிருக்கிறான், அதனை அரசாங்கம் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது. கேள்வி கேட்டால், சட்ட சிக்கல் என்று காரணம் காட்டி இழுத்தடிக்கத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்ய ஒரு காரணம் கூடவா கிடைக்கவில்லை!

மேலே நீங்கள் படித்த நாளிதழ் செய்தி ஒரு வழக்கமான கண் துடைப்புதான். வழக்கம்போல் தேர்தல் வரும் சமயங்களில்தான் இம்மக்கள் இவர்களின் கண்களில் தெரிவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மாதிரியான ஆசை வார்த்தைகளைக் கேட்டு நம்பி மறுத்துபோன உணர்வுகளுடன் இருக்கும் அம்மக்களுக்கு இம்முறையும் ஆளுக்கொரு பொட்டலம் பிரியாணி வாங்கிகொடுத்து வாயை அடைத்துவிடுங்கள்! வாழ்க சனநாயகம்!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Tamilvanan March 30, 2009 at 1:48 PM  

50 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகளற்று இருளில் வாழ்ந்து வர வேண்டிய ஒரு சூழ்நிலை இப்பொழுதுதான் நமது தேசிய முண்ணனி தலைவர்கள் கண்களுக்கு தெரிகிறது. இன்னும் அது தீர்க்க முடியாத பிரச்சனையாக இருப்பது வேடிக்கை. வேண்டும் அதிகமான இடைத்தேர்தல்கள்......வெல்லட்டும் மக்களின் மனமாற்றம்.

கிருஷ்ணா April 1, 2009 at 11:55 PM  

அரசாங்கத்தினால் எதுவும் செய்ய இயலாதா?? வேடிக்கை! தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது முதலாளியின் கடமை இல்லையா? அதற்கு சட்டம் இல்லையா?

ஒரு அரசாங்கம் நினைத்தால், நாட்டின் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ள முடியுமே?

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP