இண்ட்ராஃப் ஆதரவாளர்களின்மீது வன்முறை!

>> Sunday, March 1, 2009

வழக்கறிஞர் உதயகுமாருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாதது குறித்து அதிருப்தியடைந்த இண்ட்ராஃப் ஆதரவாளார்கள், நேற்று (சனிக்கிழமை 28/02/2009) காலை 10 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தில் தனிப்பட்ட முறையில் புகார் அளிக்கச் சென்றபொழுது, காவல்த்துறையினர் மிகவும் கடுமையாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல், வன்முறையைக் கட்டவிழ்க்கும் வகையில் அமில நீரைப் பீய்ச்சியடித்து ஆதரவாளர்களை கலைந்துபோகச் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காவல்த்துறையின் இவ்வராஜகச் செயலை தற்சமயம் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் திரு.வேதமூர்த்தி கண்டித்துள்ளார். காவல்த்துறையினரிடம் ஒருதலைபட்சப்போக்கு ஒருபோதும் இருத்தல் கூடாது எனவும், இச்சம்பவம் காவல்த்துறையினரின் நன்மதிப்பை பொதுமக்கள் மத்தியில் மேலும் கெடச் செய்கிறது எனவும் அவர் கூறினார்.

பொதுமக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இவ்வன்முறைக்கு பொறுப்பானவர்களை சுஹாகாம் மனித உரிமைக் கழகம் முறையான விசாரணைக்குட்படுத்த வேண்டும் என இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தில் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கவாசகம் உட்பட பதினெட்டு பேர் கைது செய்யப்பட்டனர். "ராட்டினம்” வலைப்பதிவர் திரு.மதுவும் , தமிழ் இண்ட்ராஃப்” வலைப்பதிவர் திரு.தமிழ்ச்செல்வனும் இப்பேரணியின் போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அந்நிகழ்வின் காணொளிக்காட்சி கீழே..

மலேசியா கினி படச்சுருள்


பாகுதி 1பகுதி 2பகுதி 3பகுதி 4பகுதி 5
பகுதி 6


போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

ஆய்தன் March 1, 2009 at 4:33 PM  

அதிகார இனத்தின் ஊதுகுழலாக காவல்துறை செயல்படுவதைத் தமிழர்கள் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

ஒரு புகார் கொடுக்க வந்தவர்கள் மீது இப்படி அநியாயத்தையும் அராசகத்தையும் அவிழ்த்து விட்டிருக்கும் காவல்துறையின் போக்குக் காட்டுமிராண்டித் தனமானது.

இவர்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக போகலாம்.. கூப்பாடு போடலாம்.. மறியல் பண்ணலாம்.. எடுத்ததெற்கெல்லாம் இனவாதத்தைக் கையிலெடுக்கலாம்.. காவல் துறையைக் கையில் போட்டுக்கொண்டு.. காட்டு தர்பார் பண்ணலாம்..!!!!

எதை நோக்கி இந்த நாட்டைக் கொண்டு போகிறார்கள்...??????

என்ன நடக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்...?????

குமார் March 2, 2009 at 3:33 PM  

இண்ட்ராப் மீது காவல்துறை நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. புகார் செய்ய வந்ததில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களில் நாட்டில் பல பகுதிகளில் பேரணிகளும் அமைதி ஊர்வலமும் நடந்து வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அங்கு எங்கும் அமில நீரைப் பயன்படுத்தாமல் இண்ட்ராப் ஆதரவாளர்கள் மீது மட்டும் பயன்படுத்துவது ஏன் என்று புரியவில்லை. அரசாங்கத்திடம் நமது குறைகளை எடுத்து சொல்ல அணி திரண்ட நம்மை இன்னமும் திட்டம் போட்டு பழிவாங்கும் படலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. விழித்திருப்போம், விடியலுக்கு வெகுதூரமில்லை.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP