அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்ட பத்து பூத்தே கிராமத்தினர்!
>> Monday, October 26, 2009
கீழ்காணும் நாளிகைச் செய்தியானது, இந்நாட்டில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதற்கான மற்றுமொரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. புக்கிட் செலாம்பாவில் சுங்கை கித்தா 2 தோட்டத்தை நினைவிருக்கிறதா? 50 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் இல்லாது கிணற்று நீரையும், மெழுகுவர்த்தியையும் பயன்படுத்தி காலத்தை ஓட்டிய அம்மக்களைப் போலவே, கம்பார் பேராக்கில் அமைந்துள்ள பத்து பூத்தே எனும் கிராமத்தில் மக்கள் குடிக்க நீரின்றி அவதியுறும் அவலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ”ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை ஓட்டு பொறுக்கவரும் அம்னோ அரசாங்கம் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அள்ளிவீசிவிட்டு எங்களை ஏமாற்றிச் செல்கிறார்கள்! அடிப்படை பிரச்சனைகளை களைய அவர்கள் முயற்சிக்கவில்லை” என அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற தொடர் ஒடுக்குமுறைகளிலிருந்து மக்கள் வெளிப்பட ஒவ்வொருவருக்கும் நல்ல அரசியல் தெளிவு இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு மக்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது கடமையாகிறது. காரணம், இந்நாட்டில் அதுமட்டுமே நம்முடைய குறைந்தபட்ச உரிமையாகிறது!
பத்து பூத்தே கிராமம் தொடர்பான மேலும் செய்திகள் பின்தொடரும்..

மலேசிய நண்பன் (26 அத்தோபர் 2009, பக்கம் 16)
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment