வீர முனீசுவரர் ஆலயம் உடைப்பு!

>> Sunday, June 28, 2009


27 சூன் 2009

ஊடக அறிக்கை

ஆலய உடைப்பு - வீர முனீசுவரர் ஆலயம், யாப் குவான் செங் சாலை, அம்பாங் சாலை, கோலாலம்பூர்

கடந்த 27/06/2009 காலை 10 மணியளவில், ..காவைச் சேர்ந்த குண்டர்கள் என நம்பப்படும் சுமார் 35 பேர் 20 ஆண்டுகால இந்து ஆலயமொன்றை உடைத்து தள்ளியிருக்கின்றனர். அம்னோவின் கைப்பாவையாக விளங்கிவரும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், காவல்த்துறையினர், ..கா குண்டர்கள் போன்றோர்போல்டன் செண்டிரியான் பெர்காட்எனும் மேம்பாட்டு நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு இச்செயலைப் புரிந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

அனுமதியின்றி உட்பிரவேசிப்பவர்களிடமிருந்து ஆலயத்தை பாதுகாக்குமாறு ஆலய நிர்வாகத்தினர் பலமுறைடாங் வாங்கிகாவல் நிலையத்தில் புகார்கள் செய்துள்ளனர். (டாங் வாங்கி/022122/09). ஆலயத்தை உடைக்க அத்துமீறி நுழைந்தவர்கள் நீதிமன்ற ஆணைக் கடிதத்தை ஏதும் தன்னிடம் காட்டவில்லை என ஆலய நிர்வாக உறுப்பினர் திரு.சிவனேசுவரன் தலைமை இன்சுபெக்டர் ஆனந்த் அவர்களிடம் கூறியுள்ளார். அவர்களாகவே வந்து ஆலயத்தை உடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். ஆலயத்தை பாதுகாக்க வேண்டிய காவல்த்துறையினரே குண்டர்களுக்கு பாதுகாப்பாக இருந்து செயல்பட்டது மிகவும் அதிருப்தியை அளிக்கிறது. அப்பாவிகளான ஆலய நிர்வாகத்தினரை அங்கிருந்து களைந்துபோகுமாறு காவல்த்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். காவல்த்துறையினரின் கடமையோ ஆலயத்தை பாதுக்காப்பது. பீனல் கோட் சட்டப்பிரிவு 295-இன் படி, வழிப்பாட்டுத் தளங்களை உடைத்துத் தள்ளுவது சட்டப்படி குற்றம் எனவும், இக்குற்றத்திற்கு தண்டனையாக மூன்றாண்டுகள் சிறைவாசத்தினையும் வழங்குகிறது. ஆலயத்தை தரைமட்டமாக்கிய குண்டர்களையும் மேம்பாட்டு நிறுவனத்தினரையும் காவல்த்துறையினர் கைது செய்து பீனல் கோட் சட்டப்பிரிவு 295-இன் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கவேண்டும்.

இந்நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள்மீது ஏழு நாட்களுக்குள் நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இதுநாள்வரை உடைப்பட்ட பல ஆலயங்களுக்காக திரு.உதயாவும் திரு.வேதாவும் பல முறையீட்டு மனுக்களை சமர்ப்பித்திருந்தாலும், ஒரு தடவைகூட நீதிமன்றத்தில் வழக்குகள் நடவாதது கண்டு மிகவும் அதிருப்தி கொள்கிறோம். குற்றமிழைப்பவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக் கொடுப்பதில் அட்டர்ணி செனரல் முனைப்பு காட்டினாலேயொழிய, ஆலய உடைப்பு விவகாரங்களுக்கு ஒரு தீர்வே கிடைக்காது. பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு கூட்டரசு பிரதேசங்களுக்கான துணை அமைச்சர் தமது அதிகாரப்பூர்வ அறிக்கையினூடாக , இனி எதிர்வருங்காலங்களில் எந்தவொரு வழிபாட்டுத் தளமும் உடைபடாது என வாக்குறுதி கொடுத்திருந்தார். என்ன ஓர் அப்பட்டமான பொய்? சனநாயகத்தின்மீதும், மக்களின்மீதும், நாடாளுமன்றத்தின்மீது அம்னோவிற்கு மதிப்பு கிடையாது. மலேசிய வரலாற்றிலேயே இரண்டில் மூன்று பெரும்பான்மையை அம்னோ இழந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஆலய உடைப்பு. புதிய அம்னோ தலைமைத்துவத்திலும் எந்தவொரு மாற்றமும் கிடையாது, ஆகையால் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்ற நாம் அடுத்த பொதுத்தேர்தலில் (2012-2013) அம்னோவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இதைத் தவிர்த்து வேறு வழியேயில்லை.

வாழ்க மக்கள்!

திரு.செயதாசு
இண்ட்ராஃப் மக்கள் சக்தி

ஆலய உடைப்பு தொடர்பான நிழற்படங்கள் கீழே..












போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

5 கருத்து ஓலை(கள்):

sivanes June 30, 2009 at 9:06 AM  

மனதை வருத்தும் இச்செயல்களுக்கு நம் இனமே துணைபோவது கொடுமையிலும் கொடுமை, ஆளுங்கட்சி அடாது செய்கின்றது, என்பதால் எதிர்க்கட்சியை ஆதரித்தால், அவர்களாலும் நன்மை ஏற்பட்டதாகத் தெரியவில்லை!

கிருஷ்ணா June 30, 2009 at 11:24 AM  

நண்பரே.. நீண்ட நாட்களாக என் மனதை வருடிக்கொண்டிருக்கும் ஒரு கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. இந்த பதிவைப் பார்த்த பின்பு.. இந்த கருத்து இந்த பதிவுக்கு ஒவ்வாத ஒன்று என்று நீங்கள் நினைத்தால், மட்டறுத்து விடுங்கள்.. ஆனால், எனக்கு மின்மடல் அனுப்புங்கள்..

இப்பொழுதுதான், http://tamilpoongga.blogspot.com/ வில் வள்ளலார் பதிவுக்கு பின்னூட்டம் இட்டேன்.

சனாதனதர்மம் என்பது, மிகவும் நேர்த்தியான, ஆழமான, அறிவுப்பூர்வமான, அறிவியல்பூர்வமான தெய்வீக சமயம். ஆனால், நம்மவர்கள் அதை துளியும் புரிந்து கொள்ளாமல், இப்படி கண்ட கண்ட இடங்களிலெல்லாம் 'அலயம்' என்னும் பெயரில் சில கொட்டகைகளை அமைத்து, அசிங்கப் படுத்துகின்றனர் என்றே நான் கருதுகின்றேன். சிறு தெய்வ வழிபாடுகள் மட்டுமல்ல.. உருவ வழிவாடே கூடாதென்கிறார் வள்ளலார்! இது போன்ற 'கோயில்கள்' எல்லாம் நம் சமயத்தை களங்கப் படுத்தும் சின்னங்களாக இருப்பதால், நாம் இது போன்ற சமயங்களில் உணர்ச்சிவயப் படாமல் இருப்பது நலம். மற்றவர்கள் உடைப்பதற்கு முன், நாமே இது போன்ற 'கோயில்'களை உடைத்துவிட்டு, ஆன்மீக முறையில் நிறுவப்பட்ட கோயில்களை நல்ல முறையில் பராமரித்து, தெய்வ தரிசனம் காண வரும் பக்தர்களிடம் நிதி வசூலிக்காமலும், தட்சனை வாங்காமலும்.. எந்த கட்டணமும் இல்லாமலும் இருந்தால்.. பெரும் நன்மை உண்டாகும் என நான் கருதுகின்றேன்..

Sathis Kumar July 1, 2009 at 12:59 AM  

அன்பின் கிருஷ்ணா,

நீங்கள் கூறுகின்ற கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது இவ்விடயங்களைப் பற்றி விரிவாகப் பேசலாம்.

Sathis Kumar July 1, 2009 at 1:01 AM  

அன்பின் சிவனேசு,

பாரிசானாகட்டும் பக்காதானாகட்டும், இரண்டுமே முதலாளி வர்கத்தினரின் கைப்பாவைகளாக விளங்கி வருகின்றன. அதனை நேற்று கண்கூடாகவே பார்த்து வேதனையடைந்தேன்..

கிருஷ்ணா July 2, 2009 at 9:43 PM  

நண்பா.. நிச்சயமாக அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன்!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP