பினாங்கு தண்ணீர்மலையில் திரு.உதயகுமார் சிறப்புப் பிரார்த்தனை
>> Thursday, June 4, 2009
எதிர்வரும் 13-ஆம் திகதி (சனிக்கிழமை) இரவு 7.00 மணியளவில், பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு சிறீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் திரு.உதயகுமார் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளவிருக்கிறார்.
பினாங்கு மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் இச்சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். 2007-ஆம் ஆண்டில் பினாங்கு இண்ட்ராஃப் கருத்தரங்கிற்கு வருகைப் புரிந்த திரு.உதயகுமார், இ.சா விடுதலைக்கு பின்பு முதன்முறையாக பினாங்கிற்கு வருகை புரிவது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகவலை குறுந்தகவல்வழி தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கவும்
போராட்டம் தொடரும்...
19 கருத்து ஓலை(கள்):
பிரார்த்தனை சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்..! மீண்டும் தமிழினம் ஒன்று பட வேண்டும்.. நம்மை நாமே தூற்றும் நிலை மாறி, தேற்றும் நிலை காண வேண்டும்.. நம்மை நாமே தாக்கும் நிலை மாறி.. தாங்கும் நிலை காண வேண்டும்..! வாழ்க மக்கள் சக்தி!
வாங்க கிருஷ்ணா, சூலை மாதம் 19-ஆம் திகதி கிள்ளான் ஒக்கியன் மண்டபத்தில் உதயாவின் நிகழ்வு ஒன்று நடைப்பெறவிருக்கிறது. நானும் கலந்துகொள்ள வருகிறேன். அங்கு உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என நம்புகிறேன்.
என்ன நோக்கத்துக்கு இந்த சிறப்பு பிரார்த்தனை?
எல்லாம் நல்ல நோக்கத்துக்குதான்...
சிறப்பு பிரார்த்தனைகள் என்று சொல்லி பல நடத்தி விட்டோமே? என்ன நல்ல நோக்கம் அது? அதை தெளிவாக அறிவிக்க வேண்டியது உங்கள் கடமையாகிறது...
நிகழ்வில் கலந்து கொண்டு நோக்கத்தை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது உங்கள் கடமையாகிறது..
நிகழ்வு பற்றி அறிந்தால் தானே கலந்துக் கொள்ள முடியும். கரு என்ன அதையல்லவா நீங்கள் தெளிவுடன் சொல்ல வேண்டும். பயனுள்ள நிகழ்வு என்றால் எல்லாரும் தாராளமாக கலந்துக் கொள்ளலாம்.
//நிகழ்வு பற்றி அறிந்தால் தானே கலந்துக் கொள்ள முடியும்.//
சிறப்புப் பிராத்தனை என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
//கரு என்ன அதையல்லவா நீங்கள் தெளிவுடன் சொல்ல வேண்டும்.//
கரு சொன்னாதான் துரை வருவீயலோ..?
//பயனுள்ள நிகழ்வு என்றால் எல்லாரும் தாராளமாக கலந்துக் கொள்ளலாம்.//
பயனில்லாத நிகழ்வு ஏதும் நடத்திவருகிறோம் என்று கூறினோமா?
கேள்வி கேக்குற நீங்க உண்மை அடையாளத்த மறச்சிக்கிட்டு பின்னூட்டம் போடற நோக்கம் என்னான்னு மொத சொல்லும்...!
எது எப்படி இருப்பினும், இந்த நிகழ்வு முடிந்தவுடன் அதனால் ஏற்பட்ட பயன்களை தாங்கள் கண்டிப்பாக பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன். நிகழ்வு, அதன் ஏற்பாட்டாளர்களை விட நம்பி வருவோருக்கு பெரும் பலன் கொடுப்பதாக இருந்தால் நல்லது. உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்! ஒற்றுமை ரொம்ப முக்கியம், சார். பேசுவது ஒன்று நடைமுறை ஒன்றாக இருக்க கூடாது. வாழ்த்துக்கள்!
//எது எப்படி இருப்பினும், இந்த நிகழ்வு முடிந்தவுடன் அதனால் ஏற்பட்ட பயன்களை தாங்கள் கண்டிப்பாக பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.//
ஆக மொத்தத்தில் நீங்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என நான் நினைக்கிறேன்!
//நிகழ்வு, அதன் ஏற்பாட்டாளர்களை விட நம்பி வருவோருக்கு பெரும் பலன் கொடுப்பதாக இருந்தால் நல்லது.//
இது தெரியாமதான் நிகழ்ச்சி நடத்திகிட்டு இருக்காங்களோ?
//ஒற்றுமை ரொம்ப முக்கியம், சார். பேசுவது ஒன்று நடைமுறை ஒன்றாக இருக்க கூடாது.//
அப்படீங்களா? அப்படின்னா நிகழ்வுல கலந்து ஆதரவு கொடுத்து ஒற்றுமைய புலப்படுத்தலாமே? அத விட்டுபுட்டு எதுக்கு ஆயிரத்தெட்டு கேள்வி? கரு தெரிஞ்சாதான் வருவேன், நோக்கம் தெரிஞ்சாதான் வருவேன்னா, அப்ப நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் என்ன முட்டாள்களா?
நோக்கம் தெரியுனும்னா நிகழ்வுல கலந்துகொண்டு தெரிஞ்சுகுங்க! வெறும் கேள்விகள் கேக்குறதுனால ஒற்றுமைய காட்டிற முடியாது!
மத்தவங்களுக்கு அறிவுரை சொல்லனும்ணா உண்மை அடையாளத்தோட வாங்க!
//ஆக மொத்தத்தில் நீங்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என நான் நினைக்கிறேன்!//
கண்டிப்பாக வரப்போவதில்லைதான்...
எத்தனை நாளைக்கு இப்படி பிரார்த்தனை என்று சொல்லிக்கொண்டிருக்க போகிறீர்கள்...
பொறுத்திருந்து பார்ப்போம்!
//கண்டிப்பாக வரப்போவதில்லைதான்...
எத்தனை நாளைக்கு இப்படி பிரார்த்தனை என்று சொல்லிக்கொண்டிருக்க போகிறீர்கள்...
பொறுத்திருந்து பார்ப்போம்!//
வரப்போவதில்லையென்றால் எதற்கு கரு, நோக்கம்னு கேட்டுகிட்டு.. வேற வேலை வெட்டிய பாக்க வேண்டியதானே..! ஒருவேளை நாள் முழுக்க கணினி முன்னுக்கு உக்காந்துகிட்டு ஒற்றுமைய பரப்பிகிட்டு இருக்கீங்கலோ..?
விடுங்க தோழரே.. பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள், இப்படி திரைக்குப் பின்னால் மறைந்து குற்றம் கண்டுபிடித்து ஒற்றுமையை குலைக்கும் ஒற்றர்களும் இருக்கவே செய்வார்கள்.. நம்மினத்தை நாமே எள்ளி நகைப்பதும், காட்டிக்கொடுப்பதும், இதெல்லாம் எட்டப்பன் காலத்திலிருந்து கருணா வரை தொடர்கிறது.. இதுபோன்ற ஒருசிலரால் இன்னமும் தொடரும்..
வைரமுத்துவின் கவிதை வரிகள் சில:
குரைப்பவை
குறை சொல்லும்..
குறைகள் நுரைகள்..
கரை கிழிக்கும்
வெள்ளத்தில்
நுரை வந்தே தீரும்!
அடுத்த மாதம் நானும் நிச்சயம் கலந்து கொள்கிறேன்..!
பி.கு: உதயாவால், ஒட்டு மொத்த சமுதாயமே ஒன்றினைந்தது என்பதை யாரும் மறுக்க முடியுமா..? அரசியல்வாதிகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட குண்டர் கும்பல்களின் அட்டகாசங்கள், சண்டைகள், மற்ற பிரச்சனைகள் எல்லாம் உதயாவால், மறைந்து கொஞ்ச காலம் தமிழர்கள் தலை நிமிர்ந்து நடந்தனரே.. அதை இவர்களால் மறுக்க முடியுமா? அந்த பொற்காலம் மீண்டும் மலர இந்த பிரார்த்தனை என்று வைத்துக் கொள்வோம்..
இந்நிகழ்வு உதயா ஒருவர் மட்டும்தான் நடத்துகிறாரா? " திரு உதயகுமார் சிறப்பு பிரார்த்தனை” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஏன் மற்ற நால்வரும் இதில் கலந்துக் கொள்ள வில்லையா?
நன்றி!
உதயகுமார் மட்டும்தான் வருகிறார்.
மற்ற நால்வரும் எந்தவொரு கூட்டங்களிலும் கலந்துகொள்ள மாட்டோம் என கையொப்பமிட்டிருக்கிறார்களே.. வெளிமாநிலங்களுக்கு செல்வதென்றால், காவல்நிலையத்திற்கு சென்று அனுமதி பெற வேண்டும்..
உங்களுக்கு இது தெரியாதோ...?
நன்றி!
இது போன்ற 'குட்டை குழப்பி'களால்தான், தமிழ் சமுதாயமே ஒற்றுமையின்றிக் கிடக்கிறது! பக்கத்து வீடுதானே எறிகிறது என்று வாளாவிருந்தால், அத்தீ.. நம் வீட்டுக்கும் பரவும் என்பது கூடவா தெரியாமல் போய்விட்டது இந்த முகம் தெரியா அறிஞருக்கு?! கேள்விகள் கேட்கும் தோரணையைப் பார்த்தால்.. ஏதோ ஒரு கட்சியின் இளைஞர் பகுதி போல் தெரிகிறது! மூழ்கும் கப்பலில் நின்று கொண்டும் குறை கூறுகிறார்களே! வாழ்க நம் ஒற்றுமை!
நன்கு கூறினீர்கள் கிருஷ்ணா.. எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் சிலருக்கு விளங்குவதில்லை. நம்முடைய நோக்கம் என்ன? பறிக்கப்பட்ட மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு எவ்வளவோ வேலைகளை நாம் ஒன்றுபட்டு செய்தாக வேண்டியுள்ளது! ஆனால், நமக்குள்ளேயே பிளவு ஏற்படுத்த சிலர் முனைவதைக் கண்டு மனம் வேதனை கொள்கிறது. நம்மிடம் வம்புக்கு வருபவர்கள், அம்னோவை திராணியுடன் எதிர்க்க துணிவார்களா? அதற்கு இவர்களுக்கு வக்கில்லை..!
ஐயா, ஒற்றுமை என்பது தலைவர்களுக்குள் முதலில் வர வேண்டும். அப்பொழுதுதான் உடன் நம்பி வரும் மக்களுக்கு நழ்வழி காட்ட முடியும். மக்கள் இன்னும் ஏமாற கூடாது. அதுதான் என் நோக்கம். முதலில் இண்டராஃ வழி அஹிம்ஸை வழி என்பதை மறந்து விட்டீற்களா? அப்படி இருக்கையில் அம்னோவை எப்படி நாம் எதிற்க முடியும்? அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள் அதை மறந்து விடாதீர்கள். நமக்கு என்ன வேண்டுமோ அதை கேட்பதில் தவறில்லை ஆனால் யாரையும் எதிற்கனும் என்பது அனாவசியம். முதலில் நம் தலவர்களிடத்தில் ஒற்றுமை பலம் வேண்டும். மறந்து விடாதீர்கள் அவர்கள் ஐவரும் வெளியே வருவதற்கு ஒட்டு மொத்த இந்திய சமுதாயமே பிரார்த்தனை போராட்டம் என்று உழைதார்கள் ஓடினார்கள் இன்று கடவுளின் ஆசியால் ஐவரும் வெளியே வந்தார்கள் ஆனால் ஓடி உழைத்தவர்கள் யாரோ என்றாகி விட்டது எந்த எதிற்பார்ப்பும் இல்லாமல் உழைக்கனும் அதை நினைவில் வைக்கனும். சில விஷயங்களை உங்கள் பதிவில் comment பகுதியில் கேட்டதற்கே இந்த கேலி கிண்டல் செய்கிறீர்கள். நானும் ஒரு இந்தியந்தான்...இங்கே எங்க சார் போச்சி உங்க ஒத்துமை? பேசும் உரிமை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று நீங்களே பல முறை உங்கள் பதிவுகளில் வலியுறுத்தி உள்ளீர்களே. அப்படி இருக்கையில் ஒரு வாசகர் என்ற முறையில் உன்கள் பதிவு தொடர்பாக மட்டுமே சில விஷயங்கள் கேட்டேன். அதற்குள் எட்டப்பன், குட்டை குழப்பி என பல விமர்சனங்கள்...முன்னோக்கி யோசிப்போம் ஐயா! தமிழனுக்குட் தமிழன் கிண்டல் செய்வதை தவிர்ப்போம் ஐயா!
//ஐயா, ஒற்றுமை என்பது தலைவர்களுக்குள் முதலில் வர வேண்டும்.//
இப்பொழுது யார் இங்கு அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்?
//முதலில் இண்டராஃ வழி அஹிம்ஸை வழி என்பதை மறந்து விட்டீற்களா? அப்படி இருக்கையில் அம்னோவை எப்படி நாம் எதிற்க முடியும்? அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள் அதை மறந்து விடாதீர்கள். நமக்கு என்ன வேண்டுமோ அதை கேட்பதில் தவறில்லை ஆனால் யாரையும் எதிற்கனும் என்பது அனாவசியம்.//
இதற்குப் பெயர்தான் அரைவேக்காட்டுத்தனம் என்பது! காந்தி வெள்ளையர்களை எதிர்த்தாரே, அவர்களும் மனிதர்கள்தானே?
//சில விஷயங்களை உங்கள் பதிவில் comment பகுதியில் கேட்டதற்கே இந்த கேலி கிண்டல் செய்கிறீர்கள். நானும் ஒரு இந்தியந்தான்...இங்கே எங்க சார் போச்சி உங்க ஒத்துமை?//
கண்டிப்பாக, முகமூடியோடு வருபவர்களை கிண்டல் செய்யாமல்? உண்மை அடையாளத்தோடு வராத நீங்கள் எதற்கு ஒற்றுமையைப் பற்றி எனக்கு பாடம் புகட்டுகிறீர்கள்?
//தமிழனுக்குட் தமிழன் கிண்டல் செய்வதை தவிர்ப்போம் ஐயா!//
வாய்கிழிய பேசுவதையும் தவிர்த்தால் நல்லது!
இனி அனானி கேள்விகளுக்கு இங்கு விடை கிடையாது! உங்கள் கேள்விகள் இனி மட்டறுக்கப்படும்..
Post a Comment