தமிழர்களின் பாரம்பரிய குடியிருப்பை சட்டவிரோதமாக கைப்பற்றி விற்ற அரசாங்கம்!

>> Tuesday, June 30, 2009

சில காலமாகவே, புவா பாலா கிராம விவகாரம் தொடர்பாக பதிவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. இருப்பினும் முழுத் தகவல்களையும் சேகரிப்பதற்குள் நாட்களாகிவிட்டன. முதலாளித்துவமும் அதிகார வர்க்கமும் பினாங்கில் இந்தியர்களுக்கென இருந்துவந்த ஒரே பாரம்பரிய கிராம நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்த விதத்தைக் கேட்டால் நமக்கே கோபம் வரும். அம்னோ அரசாங்கத்தின் ஆட்சியில் கம்போங் புவா பாலா கிராமம் சட்டவிரோதமாக மூன்றாம் தரப்பினருக்கு கைமாற்றப்பட்டு இறுதியில் நில மேம்பாட்டாளர்களின் கையில் சிக்குண்டு இன்று அம்மக்களின் வாழ்வும், அவர்கள் காலங்காலமாக வளர்த்துவந்த ஆடு, மாடுகளின் கதியும் கேள்விக்குறியாக தொக்கி நிற்கின்றது.

வருகின்ற 2-ஆம் திகதி சூலை மாதம் வீடுகள் உடைப்படுவதற்கான காலக்கெடு. இனி அங்குள்ள மக்களும், இம்முறைக்கேட்டை தினமும் நாளிதழ், இணையங்களின்வழி படித்து, கண்டு அறிந்துகொள்பவர்களும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?

இனி இதுபோன்று நடவாது நம்மையும் நம் நிலங்களையும் பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம்?

இதற்கிடையில் இன்று காலை 10 மணியளவில் பினாங்கு கொம்தாருக்கு இண்ட்ராஃபினரும் வேதமூர்த்தியின் மகள் வைசுணவியும், மற்றும் புவா பாலா குழந்தைகளும் முதியோர்களும் மனு சமர்ப்பிக்க சென்றிருந்தனர். அம்மனுவை பினாங்கு முதல்வரின் அந்தரங்கச் செயலாளர் பெற்றுக் கொண்டுள்ளார். அதுபோக, இன்று மாலை 4 மணியளவில் கொம்தார் கட்டிடத்திற்கு கீழ் இண்ட்ராஃபினருடன் இணைந்து புவா பாலா கிராமவாசிகள் ஒன்று கூடவிருக்கின்றனர். சிலாங்கூர், கெடா, பேராக் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆதரவாளர்கள் ஒன்றுதிரளவிருக்கின்றனர். பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என இண்ட்ராஃபினர் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.

புவா பாலா கிராமவாசிகளிடம் பினாங்கு இண்ட்ராஃப் கண்டெடுத்த நேர்க்காணல் உங்கள் பார்வைக்கு..பாகம் 1


பாகம் 2பாகம் 3பாகம் 4போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

கிருஷ்ணா July 2, 2009 at 9:46 PM  

"கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா.. அங்க ரெண்டு கொடுமை அம்மணமா ஆடுச்சான்!" இது என் தாயார் உயிரோடு இருந்தவரை அடிக்கடி பயன்படுத்திய பழமொழிகளில் ஒன்று! பாரிசான்தான் முதலாளி வர்கத்தின் கைப்பாவை என்று நினைத்தால்.. பாக்காத்தான் இன்னும் மோசமாக நடந்து கொள்கிறதே!

சதீசு குமார் July 3, 2009 at 9:58 PM  

அன்பின் கிருஷ்ணா,

நீங்கள் மொழிவது முற்றிலும் உண்மை. இவ்விடயத்தை துருவி துருவி ஆராய்ந்தால், கிடைக்கும் உண்மைகளில் நமது கோபம் கொப்பளிக்கும். இருப்பினும், இப்போதைக்கு அம்மக்களின் நலனே மிகப் பெரிது. அவர்களுக்கு ஆதரவாக நாம் இருந்தாக வேண்டும்.

நாளிதழ்களையும் சில இணையத்தள ஏடுகளையும் படித்தீர்களா? பேச வேண்டிய விடயத்தை விட்டுவிட்டு, "இயக்கத்தின் உண்மை தலைவன் யார்?", வெளிநாட்டிலிருந்து அறிக்கை விடாதே!", "இவ்வளவு பணத்திற்கு எங்கு போவது?", "எல்லாம் அரசியல் சித்து வேலைகள்!" என பல பிதற்றல்கள்! இதன்வழி அம்மக்களுக்கு என்ன நன்மை நேர்ந்துவிடும் என இவர்கள் நினைக்கிறார்கள்...?!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP