புதிய பணிமனைக்குச் செல்லும் உதயகுமார்..

>> Saturday, June 6, 2009

இண்ட்ராஃப் வழக்கறிஞர் திரு.உதயகுமார் பங்சாரில் புதிய பணிமனை ஒன்றினை திறக்கவுள்ளார். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பங்சாரில் தன்னுடைய பழைய பணிமனையின் மாதக் கட்டணம் செலுத்தவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் இயலாது போனதால் மூட வேண்டியதாயிற்று. பல நல்லுள்ளங்கள் அவருக்கு பக்கபலமாக இருந்து நிதியுதவி அளிக்க முன்வந்தாலும், அப்பொழுது இசாவில் தடுத்து வைக்கப்படிருந்த உதயகுமார் அவ்வுதவியை மறுத்துவிட்டார்.

இருப்பினும், விடுதலைக்குப்பின் மீண்டும் 18 கோரிக்கைகளை முன்னெடுத்து போராடத் துவங்கியுள்ள உதயா அவர்கள், சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து 25 பிரிவுகளாக பட்டியலிட்டு வைத்துள்ளார். இந்த ஆய்வுகளைக் கொண்டு உதயா முன்னெடுக்கவிருக்கும் உரிமைப் போராட்டத்திற்கு புதிய செயலகமாக அமையவுள்ளது இப்பணிமனை.

இதற்கிடையில் எதிர்வரும் 19-ஆம் திகதி சூலை மாதம், கிள்ளான் ஒக்கியன் மண்டபத்தில் உதயா தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை வெளியிடுவார் என நம்பப்படுகிறது. அதுவரை பொறுமைக்காக்கும்படி இண்ட்ராஃப் ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





படங்கள் : ரேம்போ ரவி (நன்றி)

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP