புவா பாலா மக்களுக்கு கையெழுத்திடப்படாத கடிதம்..
>> Wednesday, July 15, 2009
நேற்று புவா பாலா கிராமத்திலுள்ள 23 வீடுகளுக்கு கையெழுத்திடப்படாத இக்கடிதம் சென்றடைந்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் புவா பாலா கிராம மக்களோடு மனந்திறந்து பேசவிருக்கிறாராம். நாளை காலை 10 மணியளவில் இச்சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். வழக்கம்போல் சட்ட வல்லுநர்களை கிராம மக்கள் தங்கள் பிரதிநிதியாக உடன் அழைத்து வரக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கின்றனர். இதிலிருந்து, ஒரு விடயம் நன்கு புலப்படுகிறது. லிம் குவான் எங் அந்நிலத்தை மக்களுக்கு கொடுப்பதைவிட நில மேம்பாட்டாளர்களுக்கு கொடுப்பதையே விரும்புகிறார். அதனால்தான், சட்ட அறிவு இல்லாத பாமர மக்களின் மனங்களை ஏதாவது சொல்லி குழப்பி அரசு வழங்கும் நட்ட ஈடை வாங்கிக் கொண்டு அனைவரின் வாயையும் மூட வேண்டும் என்பது அவர்களின் திட்டம். பிறகு, நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் "நாங்கள் புவா பாலா மக்களுடன் ஒரு சுமூகத் தீர்வு கண்டுள்ளோம், இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!" என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.
பாரிசானாகட்டும் பக்காதானாகட்டும் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்தாம் என்பதற்கு இச்சம்பவங்கள் ஒரு சிறு உதாரணம்.
பாரிசானாகட்டும் பக்காதானாகட்டும் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்தாம் என்பதற்கு இச்சம்பவங்கள் ஒரு சிறு உதாரணம்.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment