வெற்று வாக்குறுதிகளால் வஞ்சிக்கப்பட்ட புவா பாலா மக்கள்!
>> Wednesday, July 22, 2009
கடந்த சனவரி மாதம் 19-ஆம் திகதி, புவா பாலா கிராம மக்கள் 'பொங்கல் திருவிழா 2009' நிகழ்வினை ஏற்று நடத்தினர். இவ்விழாவில் பினாங்கு மாநில துணைமுதல்வர் திரு.இராமசாமி, வழக்கறிஞர் கர்பால் சிங், சிறீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் இரவீந்திரன் மற்றும் பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்வில் பக்காதான் அரசியல்வாதிகள் புவா பாலா கிராம மக்களுக்கு கொடுத்த வெற்று வாக்குறுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி காட்சியில் இடம்பெற்றுள்ளது.
அந்நிகழ்வில் பக்காதான் அரசியல்வாதிகள் புவா பாலா கிராம மக்களுக்கு கொடுத்த வெற்று வாக்குறுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி காட்சியில் இடம்பெற்றுள்ளது.
2 கருத்து ஓலை(கள்):
அரசியல் என்றாலே வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு பின் மறந்துவிடுவதுதானே நண்பா! ஆனால், ஒன்று மட்டும் உறுதி, இந்தியர் சம்பந்தப்பட்ட வாக்குறுதிகளை மட்டும் எந்த அரசியல்வாதியும் எப்போதும் மறப்பதில்லை! நினைவில் இருந்தால்தானே மறப்பதற்கு!
புவா பாலா கிராம விவகாரத்தில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டு விட்டோம் நண்பரே..
புவா பாலா நிலத்தை மீட்டெடுத்துவிட்டால், இனி மலேசியாவில் எந்தவொரு கிராமத்தையும் உடைப்பதற்கு முன்பு அரசியல்வாதிகள் ஆயிரம் தடவை யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அழுத்தமும் ஏற்படும்.
ஒருவகையில் இக்குக்கிராமம் மலேசியாவின் பிற கிராமங்களைக் காப்பாற்றப் போகிறது எனலாம்.
Post a Comment