புவா பாலாவில் மற்றுமொரு விசேசமுங்கோ..
>> Thursday, July 30, 2009
எதிர்வரும் (02-08-2009) ஞாயிற்றுக்கிழமை, புவா பாலா கிராமத்தில் பண்பாட்டு, கலாச்சார விழா நடைப்பெறவுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், கோலாட்டம் மற்றும் விளையாட்டுகளான உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் காலை 10 மணி தொடங்கி இரவு 8 மணிவரை நடைப்பெறவிருக்கின்றது. அன்றைய நிகழ்விற்கான மதிய, மாலை உணவினை கிராமத்துப் பெண்கள் சமைத்து பரிமாறவுள்ளனர்.
பினாங்கில் 200 வருடங்களாக நிலைப்பெற்றிருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இனி இருக்குமா என்பது கேள்விக்குறியே! இந்நிகழ்வானது அக்கிராமத்தின் கடைசி நிகழ்வாகக் கூட இருக்கலாம். எனவே, இவ்வறிவிப்பை அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு புவா பாலா கிராம மக்களுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறோம்.
கீழ்காணும் அழைப்பிதழை உங்களுக்கு அறிமுகமானவர்களிடமும் இணைய நண்பர்களிடமும் மின்னஞ்சல்வழி, அச்சடித்து அனுப்பி தெரியபடுத்தவும்.
இக்கண்,
-உங்கள் வரவை பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் புவா பாலா தமிழ் மக்கள்-
போராட்டம் தொடரும்..
-உங்கள் வரவை பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் புவா பாலா தமிழ் மக்கள்-
போராட்டம் தொடரும்..
2 கருத்து ஓலை(கள்):
//இந்நிகழ்வானது அக்கிராமத்தின் கடைசி நிகழ்வாகக் கூட இருக்கலாம்.//
அதனால் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்களா ? வருத்தத்தோடு கொண்டாடுகிறார்களா ?
// மதிய, மாலை உணவினை கிராமத்துப் பெண்கள் சமைத்து பரிமாறவுள்ளனர்.//
சைவமா ? அசைவமா?
அது சரி யார் தலைமையில்?
பாரிசானா? பக்காத்தானா? ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் ஹின்ட்டராப்பா?
அரிப்புக்கு சிறிது நேரம் சொரிந்து கொள்ளலாம். ஆனால் அதுவே நிரந்தர தீர்வாகாது. ஏன் எதற்கு எப்படி என்று அறிந்து முறையான வழி வகைகளை கண்டறிய வேண்டும். ஆட்டமாம் பாட்டமாம்.எப்படியெல்லாம் தேசிய அளவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண பார்க்கிறோம் பாருங்கள்.
//அதனால் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்களா ? வருத்தத்தோடு கொண்டாடுகிறார்களா ?//
//சைவமா ? அசைவமா?
அது சரி யார் தலைமையில்?
பாரிசானா? பக்காத்தானா? ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் ஹின்ட்டராப்பா? //
இக்கேள்விகளை புவா பாலா கிராமத்திற்கு வந்து மக்களிடம் கேட்குமாறு பரிந்துரைக்கிறேன்..
Post a Comment