'கம்போங் புவா பாலா'வில் விசேசமுங்க...

>> Friday, July 3, 2009


நாளை (04/07/2009) சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இண்ட்ராஃப் வழக்கறிஞர் திரு.உதயகுமார் பினாங்கு புக்கிட் குளுகோரில் அமைந்துள்ள தமிழர்களின் பாரம்பரிய கிராமமான 'கம்போங் புவா பாலா' அல்லது 'தமிழ் செப்பரல்' என்றழைக்கப்படும் கிராமத்திற்கு வருகைப் புரியவுள்ளார்.

பினாங்கு மாநிலத்திலேயே மிகப் பழமையான தமிழர்களின் பாரம்பரியத்தை 200 ஆண்டுகளாக பறைச்சாற்றி வரும் இக்கிராமத்தை பாரம்பரிய மிக்க கிராமம் என பிரகடனப்படுத்தும் வகையில்,'கம்போங் புவா பாலா' மக்கள் நாளை அதிகாரப்பூர்வமாக கிராம வரவேற்பு வாசலை திறப்புவிழா செய்யவிருக்கின்றனர்.

இந்நிகழ்வில் திரு.உதயகுமார் மற்றும் பல அரசு சார்பற்ற இயக்கங்கள் கலந்துகொண்டு அம்மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். பினாங்கு மாநிலத்தில் தமிழர்களுக்கென எஞ்சியிருக்கும் ஒரே கிராமமான புவா பாலாவை காப்பாற்றும் முயற்சியாக இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது. அக்கிராம நிலத்திற்கு சொந்தகாரர்கள் அம்மக்களே என்பதற்கான ஆதாரங்கள் தெள்ளத் தெளிவாக இருந்தும், சட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றமடைந்த அம்மக்களுக்கு எஞ்சியிருக்கும் சில வழிகளில் இதுவும் ஒன்று.

தனி மனிதராகவோ அல்லது இயக்கங்களைப் பிரதிநிதித்தோ இந்நிகழ்வில் கலந்துகொண்டு புவா பாலா மக்களுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறோம். அதேவேளை பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 'புவா பாலா' கிராமத்தை மீட்டெடுக்க நியாயமான உதவிகளை செய்ய இயக்கங்கள் முன்வந்தால், அது நீதிக்கும் மனித உரிமைக்கும் மதிப்பளிப்பதற்கு சமமாகும்.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

மூர்த்தி morthy@yahoo.com July 6, 2009 at 1:59 PM  

உதயா அண்ணா,நீங்கள் ஏன் உங்கள் இந்திய மக்கள் செல்வாக்கை பயன் படுத்தி ஒவ்வொரு இந்தியர்களிடமும்,10 அல்லது 100 சேகரித்து பல மில்லியன்களை திரட்டி அக்கிராமத்தை வாங்க கூடாது?நான் உங்களுக்கு துணை...ஆரம்பிங்க அண்ணா நான் இல்லை நாம் வருவோம்....
மூர்த்தி 017

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP