புவா பாலா நிலமோசடி அம்பலம்! ஆதாரங்கள் சிக்கின!

>> Friday, July 31, 2009

இன்று மதியம் மூன்று மணியளவில் இண்ட்ராஃப், ஜெரிட், சுவாராம் போன்ற மனித உரிமை இயக்கங்களோடு இணைந்து புவா பாலா கிராம மக்கள், பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கை சந்தித்து மனு ஒன்றினைச் சமர்ப்பிக்க சென்றனர். கோப்பராசியிடமிருந்து புவா பாலா நிலத்தை விற்கவோ, வாடகைக்கு விடவோ, அல்லது வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தவோ முடியாது எனவும் அப்படி மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக அந்நிலம் பயன்படுத்தப்படுமெனின், அது மாநில அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (இணைக்கப்பட்டுள்ள படங்களைக் காண்க)

கூட்டுறவு கழகத்திற்கும் நுஸ்மெட்ரோ வெஞ்சூர்சுக்கும் இடையிலேயான இவ்வொப்பந்தக் கடிதமானது 27-03-2008 எனும் திகதியில் கையெழுத்திடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது விற்க, வாடகைக்கு விட, வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடாத இந்நிலத்தை விற்க அனுமதியளித்தவர்கள் பக்காதான் மாநில அரசுதான் என்பது ஊர்சிதப்படுகிறது. எனவே, மாநில அரசு நுஸ்மெட்ரோ வென்சூர்சுக்கு சல்லி காசு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என வாதம் எழுந்துள்ளது. கூட்டுறவு கழகத்திடமிருந்து 3.2 மில்லியன் செலவில் புவா பாலா நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தலாம்.

இதனை லிம் குவான் எங்கிற்கு நினைவூட்டி உரிய நடவடிக்கை எடுக்க கோரும் முயற்சியாக இன்று புவா பாலா கிராம மக்கள் முதல்வரிடம் மனுவைச் சமர்ப்பிக்கச் சென்றனர். அம்மனுவை முதல்வரின் செயலாளர் பெற்றுக் கொண்டுள்ளார்.

லிம் குவான் எங்கிற்கு கொடுக்கப்பட்ட மனு


கூட்டுறவு கழகத்திடமிருந்து நுஸ்மெட்ரோவிற்கு விற்கப்பட்ட விவரம்
பகுதி 1


பகுதி 2
போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

tamilvanan August 1, 2009 at 3:11 PM  

//மாநில அரசு நுஸ்மெட்ரோ வென்சூர்சுக்கு சல்லி காசு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என வாதம் எழுந்துள்ளது. கூட்டுறவு கழகத்திடமிருந்து 3.2 மில்லியன் செலவில் புவா பாலா நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தலாம்.//

மாநில முதல்வர் நேர்மையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஆமாம் சட்ட நுட்பணர்கள் சுற்றியுள்ள முதல்வருக்கு இதுவரை இதுவெல்லாம் தெரியாமாலா இருக்கும்?

சிவனேசு August 3, 2009 at 2:11 AM  

செய்வதையெல்லாம் செய்து விட்டு இன்று நல்ல பிள்ளையாய் நாடகம் ஆடுகிறது பாக்காத்தான் அரசு! இருக்கட்டும், கூடிய விரைவில் இதற்கு இவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டி வரும்

சிவனேசு August 3, 2009 at 2:11 AM  

செய்வதையெல்லாம் செய்து விட்டு இன்று நல்ல பிள்ளையாய் நாடகம் ஆடுகிறது பாக்காத்தான் அரசு! இருக்கட்டும், கூடிய விரைவில் இதற்கு இவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டி வரும்

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP