புவா பாலா நிலமோசடி - சில கேள்விகள்

>> Sunday, August 9, 2009


மாநில முதல்வர் லிம் குவான் எங் அவர்களே,
எங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.

பினாங்கு மாநில அதிகாரிகள் கூட்டுறவுக் கழகத்திற்கு உங்கள் அரசு செய்த எங்கள் கிராம நில விற்பனை.

தேர்தல் தேதி : 8 மார்ச் 2008

கிராம செயற்குழு உங்களைச் சந்தித்த தேதி : 13 மார்ச் 2008
இந்தத் தேதியில் இன்னும் நில விற்பனை பூர்த்தி அடையாமல் இருந்தால், இந்த நில விற்பனையைத் தடுத்து நிறுத்துவதாக கிரமச் செயற்குழுவிடம் உறுதிக் கூறியுள்ளீர்கள்.

கேள்வி 1

ஏன் 14 மார்ச் 2008-ல், உங்கள் அரசாங்கம் ரி.ம 3.2 மில்லியனை அந்த கூட்டுறவுக் கழகத்திடமிருந்து பெற்றுக் கொண்டது?

கேள்வி 2

ஏன் 27 மார்ச் 2008-ல், உங்கள் அரசு அந்த கூட்டுறவின் பெயரில் புவா பாலா கிராம நிலத்தை பதிவு செய்தது?


கேள்வி 3

ஏன் 14 ஏப்ரல் 2008-ல், நுஸ்மெட்ரோ வென்சர்ஸ் எனும் மேம்பாட்டாளர் இந்த நிலத்தை கேவியட் செய்துக் கொள்ள உங்கள அரசு உடந்தையாக இருந்தது?

தேசிய நிலச் சட்டப்பிரிவு 320

உங்கள அரசு, புவா பாலா கிராம நில பரிவர்த்தனையில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளது. கிராம நிர்வாகத்தினரும் இந்தப் புகாரை இரண்டு முறை செய்துள்ளனர்.

கேள்வி 4

உங்கள் அரசு புவா பாலா நில விற்பனையில் நிறைய தவறுகளைக் கண்டுபிடித்துள்ளதாகப் புகார் செய்துள்ளது. அப்படியானால் ஏன் இந்த நிலப் பரிவர்த்தனையை முழுமைப் படுத்தி, நிலத்தை விற்று முடித்தீர்கள்?

தேசிய நிலச் சட்டப்பிரிவு 320-ன் படி, ஒரு நிலப் பரிவர்த்தனையில் தில்லுமுல்லு (FRAUD) கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிலப் பட்டா மூலம் செய்யப்பட்ட நில உரிமை மாற்றம் தடுத்து நிறுத்த முடியும்.

கேள்வி 5

ஏன் உங்கள் அரசு, ஊழல் தடுப்பு ஆணையம், (MACC), தன் விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்கக் கூடாது? MACC பின்னர் தில்லு முல்லு நடந்திருப்பதை உறுதிப்படுத்தினால், நீங்கள் அந்த கூட்டுறவுக்குக் கொடுத்த நிலத்தை மீட்டுக் கொள்ள வேண்டி வரும். இது கிராம மக்களுக்கு நன்மையாக முடியும். பின்னர் உங்கள் அரசு தலைவர்களான இராமசாமி, கர்பால் சிங், மற்றும் சனீசுவர நேதாஜி இராயர் ஆகியோர் கொடுத்த வாக்கிற்கிணங்க, இக்கிராமத்தை இந்திய பாரம்பரிய கிராமமாக அறிவிக்கலாம். ஏன், MACC விசாரணை முடிவிற்குக் காத்திருக்கக் கூடாது?


நிலப் பட்டாவில் கட்டுப்பாடுகள்

கேள்வி 6

நிலப்பட்டாவில் சில கட்டுப்பாடு சரத்துகள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?
இந்த நிலம் எந்த வியாபார நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது. அந்தக் கோப்பராசி எந்த தரப்பினரோடும் கூட்டு முயற்சியில் ( JOINT VENTURE ) நிலத்தை மேம்படுத்த அனுமதியில்லை.

கேள்வி 7

உங்கள் அரசு எப்படி தொடர்ந்து இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை அனுமதித்து வருகின்றது?

கேள்வி 8

உங்களுக்குப் பின் வரும் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு தெரியுமா?

"கோ ஹீ சிங் Vs வில் ராஜா மற்றும் அனூர், உயர் நீதிமன்ற நீதிபதி சங்கர் மகாதேவ் (1993) வழங்கிய தீர்ப்பு"

மேற்கண்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலத்தை எவரும் கேவியட் செய்து கொள்ள முடியாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

கேள்வி 9

உங்கள் அரசாங்கம் எப்படி இந்த சட்டத்திற்குப் புறம்பான நில கேவிட்டை அனுமதித்தது? நுஸ்மெட்ரோ வென்சர்ஸ் இந்த புவா பாலா நில விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளது, சட்டத்திற்குப் புறம்பானது என்பதை தாங்கள் அறியவில்லையா?

கேள்வி 10

இன்று வரை, அந்த நிலப்பட்டாவில் உள்ள கட்டுப்பாடுகள் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்களா?

சிறி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் 3-8-2009 தேதியன்று, நீதிமன்றத்தில் தேசிய நிலச் சட்டம் பிரிவு 116(1)(d)-யைப் பயன்படுத்த விண்ணப்பம் செய்தாராம். அந்தச் சட்டப்பிரிவின்படி அரசு அனுமதியில்லாமல், மேம்பாட்டாளர் கிராமத்தை வந்து உடைத்து நொறுக்க முடியாது. இராயர் செய்த விண்ணப்பம் என்ன ஆனது? ஏன் லிம் அவர்களே நீங்கள் இந்த சட்டப்பிரிவைப் பற்றி அறவே பேச மாட்டேன் என்கிறீர்கள்?

கேள்வி 11

ஒருவர் தமக்கென்று, தம் சட்ட ஆலோசனைக்கு ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்வது பழக்கம்தானே?

நீங்கள் கிராம மக்களை ஒரு வழக்கறிஞர் பிரதிநிதித்து உங்களை சந்திப்பதை கடைசிவரை மறுத்து வந்துள்ளீர்கள்.

இது சரியா?

ஆ. திருவேங்கடம்
புவா பாலா கிராம மக்களுக்காக ..


தயவு செய்து இதனை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லவும்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

6 கருத்து ஓலை(கள்):

முனைவர் கல்பனாசேக்கிழார் August 10, 2009 at 12:06 AM  

வணக்கம் நல்ல வினாக்கள்...........

கே.பாலமுருகன் August 10, 2009 at 3:34 PM  

ஒவ்வொரு அரசியல் பின்னனியிலும் அரசியல் சூழ்ச்சியிலும் இறுதியாக விளிம்பின் கடைவாயில் சிக்கிக் கொண்டு ஏமாற்றுப்படுவதும் ஏமாந்து தொலைவதும் அப்பாவி மக்களே.

மூன்றாம்தர குடிகளாக நடத்தப்படுவதோடு, நிலம், வ்ருவாய், என்று எல்லாம் அடிப்படைகளிலும் கை வைத்துவிட்டால், மிஞ்சுவது மனிதர்கள் அல்ல. . பண அரசியலும், பணக்கார அரசியல்வவதிகளுமே.

சுப.நற்குணன்,மலேசியா. August 12, 2009 at 3:56 PM  

உரலுக்கு ஒரு பக்கம் இடி! மத்தளத்திற்கு...??? இப்படித்தான் ஆகிவிட்டது நம் மக்கள் நிலையும்.

அரசியல் நிலையில் இன்னும் விழிப்புணர்வு பெறவேண்டிய தேவை நமக்கு நிறையவே உள்ளது.

காலம்தான் நமது மக்களின் கண்களைத் திறக்க வேண்டும்.

புவா பாலா பற்றி தொடர் பதிவுகளை வழங்கி வரும் ஒற்றன் பணி நன்று!

Sathis Kumar August 13, 2009 at 1:21 AM  

@முனைவர் சே.கல்பனா
//வணக்கம் நல்ல வினாக்கள்...........//

வணக்கம் முனைவரே,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

மீண்டும் வருக..

Sathis Kumar August 13, 2009 at 1:24 AM  

@கே.பாலமுருகன்
//ஒவ்வொரு அரசியல் பின்னனியிலும் அரசியல் சூழ்ச்சியிலும் இறுதியாக விளிம்பின் கடைவாயில் சிக்கிக் கொண்டு ஏமாற்றுப்படுவதும் ஏமாந்து தொலைவதும் அப்பாவி மக்களே.

மூன்றாம்தர குடிகளாக நடத்தப்படுவதோடு, நிலம், வ்ருவாய், என்று எல்லாம் அடிப்படைகளிலும் கை வைத்துவிட்டால், மிஞ்சுவது மனிதர்கள் அல்ல. . பண அரசியலும், பணக்கார அரசியல்வவதிகளுமே.//

அந்த ஒடுக்கப்பட்ட மக்களே வெகுண்டெழுந்து தங்களுடைய உரிமைக்காக போராடினாலேயே ஒழிய தீர்வுக்கு வேறு வழியில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலமுருகன்.

Sathis Kumar August 13, 2009 at 1:28 AM  

@சுப.நற்குணன்
//உரலுக்கு ஒரு பக்கம் இடி! மத்தளத்திற்கு...??? இப்படித்தான் ஆகிவிட்டது நம் மக்கள் நிலையும்.

அரசியல் நிலையில் இன்னும் விழிப்புணர்வு பெறவேண்டிய தேவை நமக்கு நிறையவே உள்ளது.

காலம்தான் நமது மக்களின் கண்களைத் திறக்க வேண்டும்.

புவா பாலா பற்றி தொடர் பதிவுகளை வழங்கி வரும் ஒற்றன் பணி நன்று!//

பெரும்பாலும் விழிப்புணர்வு என்பது சிந்தனை, பேச்சு ஆகியவையோடு நின்றுவிடாது செயலில் பரிணமிக்கும் பொழுதுதான் இழந்த உரிமைகளை மீட்டெடுத்து நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

கருத்துகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா..

மீண்டும் ஒற்றன் தளத்திற்கு வருக..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP