புவா பாலாவில் மனிதச் சங்கிலி!

>> Friday, August 14, 2009

இன்று வருவானோ, நாளை வருவானோ என்று அனுதினமும் மன உளைச்சலுடன் வாழ்க்கையைக் ஓட்டிக் கொண்டிருக்கும் புவா பாலா கிராம மக்களுக்கு நேற்றுமொரு பலப்பரிட்சை ஏற்பட்டது. புலி வருது, புலி வருது என்கிற கதையாக அக்கிராம மக்களை அனுதினமும் மிரட்டிக் கொண்டிருந்த நுஸ்மெட்ரோ நில மேம்பாட்டாளர்கள், நேற்று காலை 7 மணியளவில் புல்டோசர்களுடன் கிராமத்தினுள் நுழைய, மக்களனைவரும் கொதித்தெழுந்துவிட்டனர். இச்செய்தி காட்டுத் தீப்போல் பரவ, சற்று நேரத்திற்கெல்லாம் பொதுமக்கள் ஒன்றுதிரளத் தொடங்கிவிட்டனர்.

புல்டோசர்களை உள்ளே நுழைய விடாமல் கிராம மக்கள் மனித சங்கிலி அமைத்து நில மேம்பாட்டாளர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆண்கள் வேளைக்குச் செல்லவில்லை! குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை! வீட்டில் உலை கொதிக்கவில்லை. காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மக்களுக்கெதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் நில மேம்பாட்டாளர்கள் பின் வாங்கினார். ஆனால், இரவு நேரங்களில் அங்குள்ள கிராம மக்கள் நிம்மதியான உறக்கத்தினைக் காண இயலவில்லை. கனவுகளிலும் புல்டோசர்களின் சத்தம்!

இன்னும் எத்தனை முறை இம்மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வேடிக்கை பார்க்கப்போகிறார்களோ??



போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

கே.பாலமுருகன் August 17, 2009 at 11:21 PM  

விழித்துக் கொண்டேயிருக்கிறது ஒரு போராட்டம். தனது உறக்கங்களைத் தொலைத்து பொழுதுகளை ஒன்று திரட்டி, சங்கிலியென பிணைந்து, எதிர்க்குரலாக எல்லாமும் நிகழ்ந்துகொண்டிருக்க, நிம்மதியாக குரட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் வாய் கிழிய மக்கள் நலன் என்று மேடையில் கதறும் அரசியல் தலைவர்கள்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP