இளைஞர் படை உருவாக்குவோம் !!!

>> Monday, October 1, 2007

வணக்கம் தமிழ் வாசகர்களே,

பல ஆண்டுகளாக, என்னுள் புதைந்து கிடக்கும் எண்ணங்களுக்கு சரியான அலைவரிசையை தேடிக்கொண்டிருக்கின்றேன்.சிந்தனை, சொல், செயல் இவை மூவற்றிலும் ஒத்தக் கருத்துடைய நண்பர்களை தேடுகிறேன், தேடிக்கொண்டேயிருக்கின்றேன்.தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் வீணே இப்படி காலம் கழிந்துகொண்டு போகிறதே எனும் ஏக்கம் என்னுள் அடிக்கடி எழுகிறது.தனித்து நின்று எதையும் செய்ய முடியாது எனும் கருத்தை நான் எற்காவிட்டாலும், தனி ஒருவனால் சாதிக்கும் காரியங்களை விட, பல பேர் ஒன்று சேர்ந்து செயல்படுத்தும் காரியமே மிக சிறந்தது என நான் கருதியதன் பலனாக இன்று தேடலில் இறங்கியிருக்கின்றேன்.

தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு எடுத்துக்காட்ட, அவர்களின் இன்னலில் நாமும் பங்கேற்று அவர்களின் கரங்களை பிடித்துத் தூக்கி நிறுத்த, மூதாதையர்களின் சுறுசுறுப்பை பெற்றிட, மொழி, இனம், மதம் ஆகிய அம்சங்களில் சிறந்து விளங்கிட, மூடத்தனங்களை ஒழித்துக்கட்ட, விவேகத்தையும் ஞானத்தையும் சமுதயத்திற்கு ஊட்ட ஒரு முறையான அமைப்பு உருவாகவேண்டும்.

என்ன செய்தால் நம் சமுதாயம் அதிவேகத்தில் முன்னேறும், எப்படி வாழ்ந்தால் பிறரால் மதிக்கப் படுவோம், எப்படி மலேசியா மட்டும் அல்லாமல் உலகத்திற்கே நம் தனித்துவத்தை நிலைநிறுத்திக் காட்டலாம்,மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, மதம் இவற்றை உலகெங்கும் அழியாமல் காப்பாற்றிட, தமிழ் சமுதாயத்திற்கு சரியான பாதையை வழிவகுக்கத் திறமையான தமிழ் இளைஞர் படை ஒன்று உருவாக வேண்டும்.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல், அடிமேல் அடிவைத்து காய்களை நகர்த்தும் சிறந்த விவேகிகளை எதிர்ப்பார்க்கின்றேன்.
இளைஞர் படையில் இணைய விரும்பும் இளைஞர்கள், தங்கள் முழு விவரங்களையும் எனக்கு மின்னஞ்சல் வழி அனுப்பிவிடவும், அதோடு உங்கள் கருத்துக்களையும் எனக்கு தெரிவிக்கவும்.விவேகமான கருத்துக்களுக்கு என்றுமே இடமுண்டு.

வளர்க சமுதாயம் !!ஒங்குக தமிழ் !!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

4 கருத்து ஓலை(கள்):

Anonymous November 18, 2007 at 12:31 AM  

INI SATU WEBSID YANG BAGUS,SAYA MESTI MENOLONG KEPADA INDIA MAKKAL.MALAYSIA INDIAN MAKKAL BOLEH!!!.

Anonymous November 18, 2007 at 12:34 AM  

MALAYSIA INDIAN MAKKAL BOLEH!!!!.SAYA AMAT GEMBERA KERANA ANDAH TELAH BUKA WEB MACAM INI.ANY TIME MY SUPPORT ADE 10Q.

Unknown January 28, 2009 at 5:52 PM  

என்ன செய்தால்! நம் சமுதாயம், எப்படி? அதிவேகத்தில் முன்னேறும் என்ப‌து வெகு சுல‌ப‌ம் அல்ல‌....எல்லோரிட‌த்திலும் புதைந்து கிடக்கும் சிந்தனையை....தூண்ட‌ வேண்டும்....

ந‌வ‌னீத‌ன்

Sathis Kumar January 28, 2009 at 10:02 PM  

சுலபம் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.. ஆனால், கடந்த ஓராண்டில் மலேசிய இந்தியர்களின் விழிப்புணர்வு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் முன்னேற்றத்திற்கான வழிகள்தான்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP