மாமன்னரை இழிவு படுத்தியது மலேசியக் காவல்துறை..!

>> Saturday, June 21, 2008



கடந்த 14-ஆம் திகதி சூன் மாதம் இந்து உரிமைப் பணிப்படை, நாட்டின் மாட்சிமை தங்கிய பேரரசரிடம், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவர்களை விடுதலைச் செய்யக் கோரி மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

பெரியவர்களின் துணையோடு, 70 மழலைகள் தங்கள் கைகளில் கரடி குட்டி பொம்மைகளை ஏந்திக் கொண்டு அமைதி ஊர்வலமாக மாமன்னரின் அரண்மனையை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்து உரிமைப் பணிப்படை இயக்கத்தின் பிரதிநிதிகளை, அரண்மனை நிர்வாகத்தோடு தொடர்புக் கொண்டு பரிசுகளை வழங்குவதற்கும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.

காவல் துறையினரின் மிரட்டல்களுக்கிடையே, கண்ணீர்ப் புகை குண்டு மற்றும் அமில நீர் பாய்ச்சி அடிக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் முயற்சியை தளரவிடாது காவல் துறையினரின் அராஜகங்களை சகித்துக் கொண்டு அவர்களை சமாளித்த திரு.தனேந்திரனுக்கும் திரு.செயதாசு அவர்களுக்கும் இவ்வேளையில் பாராட்டுகளைத் தெரிவித்தாக வேண்டும்.

காவல் துறையினர் அரண்மனை நிர்வாகத்தினரோடு தொடர்புக் கொள்வதற்கு அனுமதி அளிக்காததனால், அன்போடு பரிசளிக்கவிருந்த கரடி குட்டி பொம்மைகள் அரண்மனை நுழைவாயிலிலேயே வைக்க வேண்டியதாயிற்று. இது காவல் துறையினர் பேரரசரை அவமதித்தத் செயலாகும்.



மழலைகளின் அணிவகுப்பு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரண்மனை நுழைவாயிலில் கைதாகினர். இத்தகைய அராஜக செயல்களின் வழி காவல் துறையினர் மீண்டும் ஒருமுறை இந்நாடு காவல்துறையின் ஆளுமைக்கு உட்பட்டது என நிரூபித்துள்ளனர். அவர்கள் போட்டதுதான் சட்டம் என ஆகிவிட்டது.

அப்படியென்றால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு மதிப்புக் கிடையாதா? இச்சட்டத்தின் பத்தாவது பிரிவில் அமைதிப் பேரணி நடத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை என்ன ஆனது?

காவல் துறையினரின் அராஜகப் போக்கு சகிக்க முடியாததாயும், அவர்களின் பணித்திறமையின்மையினால் குடிமக்களின் நம்பிக்கையையும் தொடர்ந்து இழந்து வருகின்றனர்.

- திரு.வேதமூர்த்தி, இலண்டன் -

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Anonymous June 22, 2008 at 8:57 PM  

yaarai ninaithu nonthu kolvathu? ivargalin arajagam innum ettanai naal, ettanai thooram sellum...ninaithaal bayamagave irukirathu....intha naatil namakellam urimaiye illya? ivargal nadanthu kolvathu appadi thaane irukirathu? yaar ivargal? enna vendumaanalum seivaargala? itharkellaam mudivu vegu viraivil varum...athuthaan en uruthiyaana nambikkai...unggal pathivugal nam malaysiyargalukku vilhipunarvai yerpadutugirathu, Sathis sir...thodarunggal urchagamaaga...naalai saritirathil unggal peyar elutha pattalum aachariya paduvatharkilla...vaalga unggal pani...

Sathis Kumar June 23, 2008 at 2:01 PM  

வணக்கம் உசா, ஐயா வேதமுர்த்தி அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும் ஆங்கிலக் கட்டுரைகளை நான் எனக்குத் தெரிந்த தமிழ் நடையில் எழுதி வருகிறேன்.

நமது பெயர் சரித்திரத்தில் இடம்பெறுவதைவிட, வருங்கால சந்ததியினர் நம்மைக் குறைக் கூறிவிடக் கூடாதென்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

நாம் தொடங்கிய இந்த போராட்டத்தில் வெற்றி அடையும் நாளானது வெகு தொலைவில் இல்லை. எனவே, விழிப்புணர்வை என்றும் தக்க வைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு தொடர்ந்து கருத்துகளைச் சொல்ல வேண்டியதாயுள்ளது.

தொடர்ந்து ஓலைச்சுவடியில் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.. மீண்டும் வருக..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP