பேராக் மந்திரி புசாரின் மேசையிலிருந்து...

>> Wednesday, February 4, 2009


பேராக் மாநில மக்கள் கூட்டணி அரசு இன்னும் ஆட்சியை இழந்துவிடவில்லை. அனைத்து அலுவல்களும் வழக்கம்போல் நடைப்பெறும்.”

சற்றுமுன்பு நிருபர்களிடம் பேராக் மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் நெருக்கடி குறித்த விவகாரத்தை விளக்குகையில், மேற்கண்டவாறு பேராக் மாநில மந்திரி புசார் டத்தோ சிறீ முகமது நிசார் சமாலுதீன் கூறியுள்ளார்.

பேராக் மாநில மக்கள் கூட்டணி அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக இயங்கி வருகிறது. இறுதி முடிவு பேராக் மாநில சுல்தான் கையில். இவ்விடயம் குறித்து துவாங்கு இன்னும் முடிவெடுக்கவில்லையாதலால், மக்கள் கூட்டணியின் அரசு தொடர்ந்து வழக்கம்போல் இயங்கிவரும். பேராக் மாநில சுல்தானின் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வுகளில் நான் கலந்துக் கொள்வேன்என அவர் கூறினார்.

இதற்கு முன்பு தாம் மாட்சிமை தங்கிய பேராக் மாநில சுல்தான் அசுலான் சா அவர்களை 'கிந்தா' அரண்மனையில் சந்தித்து அரசியல் நிலவரங்கள் மற்றும் மாநில அரசு எதிர்நோக்கிவரும் நெருக்கடி குறித்து விளக்கமளித்ததாகவும், புதிய மாநில தேர்தல் நடத்தப்பெறுவதற்கு விண்ணபித்ததாகவும் கூறினார்.

இனி முடிவு துவாங்கு கையில். ஒருவேளை மாநில தேர்தல் நடத்தப்பெற்றால், மக்கள் உண்மையான தலைவர்களை தேர்தெடுப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இவ்விடயம் குறித்து முடிவெடுக்க துவாங்கு சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். துவாங்குவின் முடிவில் நீதி இருக்கும். இவ்வேளையில், பேராக் மாநில மக்களை அமைதியுடன் இருக்குமாறும், எந்தவொரு அசம்பாவிதங்களுக்கும் துணைப்போகாது பொறுமை காக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அலுவல்கள் வழக்கம்போல் நடைப்பெறும்என்றாரவர்.

நிருபர் சந்திப்பு கூட்டத்தில் டத்தோ சிறீ நசீப் துன் ரசாக் கூறிய விளக்கம் குறித்து அவரிடம் அணுகிக் கேட்டபொழுது, “நசீப் பேராக் மாநில அரசாங்கத்தை கைப்பற்றுவதில் கண்ணியமற்ற போக்கை கையாளுகிறார். டத்தோ நசாருதீன் அம்னோவில் மீண்டும் இணைவது குறித்து நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. காரணம், நசாருதீன் பாரிசானை ஆதரிக்கிறார் எனும் நசீப்பின் கூற்றை நாம் மறுக்கவேண்டியுள்ளது. நசாருதீன் கட்டாயத்தின்பேரில் கட்சி தாவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நசாருதீனின் குடும்பத்தினரே அவரைக் காணவில்லையென காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். பேராக் மாநில ராசா மூடா அழைப்பதாகக் கூறி இரு ஆடவர்கள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அச்சந்திப்பு உண்மையில் நடைப்பெறவில்லை. நானும் அவரின் குடும்பத்தினரும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கு பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்காமல் போய்விட்டது.” என்றாரவர்.

***

மாட்சிமை தங்கிய பேராக் மாநில சுல்தான் அசுலான் சா அவர்கள், மக்களின் நலனையும் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு நியாயமான முடிவை அறிவிப்பார் என எதிர்ப்பார்ப்போம். தற்சமயம் பேராக் மாநிலத்தில் பாரிசானுக்கு ஆதரவாக 31 சட்டமன்ற இடங்களும், மக்கள் கூட்டணியின் சார்பில் 28 சட்டமன்ற இடங்களும் கைவசம் உள்ளன. பேராக் மாநில அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 16(6)-ன்படி, சட்டமன்றத்தில் மாநில மந்திரி புசாருக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தாலோ அல்லது பெரும்பான்மை ஆதரவை இழந்தாலோ, மந்திரி புசாரும் அவரின்கீழ் பணிக்கப்படிருக்கும் சட்டமன்ற செயலவை உறுப்பினர்கள் பதவியைத் துறந்தாக வேண்டும் என வரையறுக்கிறது.

முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்...

பி.கு : கருத்துக்கணிப்பில் உங்களது வாக்கை அளியுங்கள்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP