அறுவர் சுடப்பட்டது நியாயமா?

>> Tuesday, February 24, 2009

கடந்த வாரம், சுடப்பட்ட ஆறு இந்தியர்களின் குடும்பத்தினரையும் அவர்களோடு நெருங்கிய சில நண்பர்களையும் அண்டை வீட்டார்களையும் மக்கள் சக்தியினர் சுங்கை கராங்கான், கூலிமிற்கு சென்று சந்தித்து நடந்த விவரங்களை கேட்டு அறிந்தனர். இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களை ஆய்ந்து பார்க்கும்பொழுது அந்த அறுவரும் சுடப்பட வேண்டிய அவசியமே இல்லை எனத் தெரிய வருகிறது. சுடப்பட்ட ஒருவர் உடல் அங்கவீனரும் கூட..

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிகளை மட்டுமே கண்டெடுத்ததாக காவல்த்துறையினர் கூறுகின்றனர். அப்படியென்றால், குறைந்தது இருவர் மட்டுமே துப்பாக்கி ஏந்தியிருக்க வேண்டும். ஆனால், சுடப்பட்ட நபர்களோ அறுவர்! ஒருவேளை காவல்த்துறையினர் அவ்வறுவரையும் சுட்டப்பின்பு இரண்டு துப்பாக்கிகளை சம்பவ இடத்தில் வைத்திருக்க வேண்டும்!

இறந்த நபர்களின் சூடுபட்ட இடங்களைப் பார்க்கும்பொழுதும் அவர்கள் அருகிலிருந்து சுடப்பட்டு இறந்திருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

சூடு நடைப்பெற்ற நேரத்தில்நான் சரணடைகிறேன்!” என சிலர் கூச்சலிட்டதை தாம் கேட்டதாக அண்டை வீட்டார் ஒருவர் கூறுகிறார்.

சுடப்பட்ட அறுவரில் ஒருவரே காவல்த்துறையினரால் தேடப்பட்டவராகவும், மற்ற ஐவரும் தவறுதலாக சுடப்பட்டு வீணே உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றனர் என அவரவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சுங்கை கராங்கானில் பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சியைக் காணவும்!



நாட்டில் எவனெவனோ லட்சக் கணக்கில் மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கின்றான் , சி4 வெடிகுண்டைப் பயன்படுத்தி ஆட்களை காலி செய்கின்றனர், கொள்ளை, கொலை என பெரிய அளவில் குற்றங்கள் புரிந்துவரும் முக்கியப் புள்ளிகளை விட்டுவிட்டு சில்லரைத் தனமான பிரச்சனைகளைக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்திவரும் காவல்த்துறையினர் மீது நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து வருகிறது. சந்தேகத்திற்குரியவர்களை திறமையாக வளைத்துப் பிடிப்பதற்கு இவர்களுக்கு என்ன கேடாம்!!?

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

PETER JOHNSON'S BLOG February 24, 2009 at 9:09 PM  

காவல் துறை கேவலத்துறையாக மாறியதேனோ? காவல்துறையினரின் அநியாயம், அட்டூழியம், அராஜகம் தொடர்வதைத் தடுத்து நிறுத்த என்ன வழி? அதனைப் பற்றி நம் சமுதாயத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். செயல்பட வேண்டும்.
பீட்டர் J

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP