உதயாவிற்காக காவல்நிலையத்தில் புகார்!
>> Friday, February 27, 2009
நாளை (சனிக்கிழமை 28/02/2009) காலை 10 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் மக்கள் சக்தி ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு, உதயாவிற்கு மறுக்கப்படும் முறையான சிகிச்சையைக் கண்டிக்கும் வகையில் அம்னோ, கெம்தா மற்றும் உள்துறை அமைச்சிற்கு எதிராக புகார் அளிக்கவிருக்கின்றனர்.
நாடு தழுவிய நிலையில் மக்கள் சக்தி ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் திரளாக ஒன்று திரண்டு பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு திரு.செயதாசு அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்.
தற்சமயம், உதயாவின் கால்கள் வீக்கமடைந்தும் நாளுக்கு நாள் கறுத்துக்கொண்டும் போகிறது. தொடர்ந்து உதயாவிற்கு சிகிச்சை மறுக்கப்பட்டு வந்தால் அவர் தன் கால் விரல்களை இழக்கும் நிலைமை ஏற்படலாம். எனவே, உதயா விரும்புவதுபோல் ஒரு தனியார் நிபுணத்துவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனபது அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.
உரிமைப் போராட்டத்திற்காக ஓயாது நடந்த அந்த கால்களை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமையென அறிக.. அனைவரும் திரண்டு வாரீர்!!
போராட்டம் தொடரும்...

0 கருத்து ஓலை(கள்):
Post a Comment