பேராக் மாநிலத்திற்கு புதிய மந்திரி புசார்??

>> Thursday, February 5, 2009


பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக பங்கோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சம்ப்ரி அப்துல் கதிர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அப்துல்லா அகமது படாவி இன்று அறிவித்துள்ளார். பேராக் மாநிலத்தின் அரசியல் நெருக்கடிக்கு இன்னும் முறையான தீர்வு காணப்படாத இவ்வேளையில் பிரதமர் இவ்வறிப்பை செய்துள்ளார். பாரிசானால் புதிய மந்திரி புசாராக தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ டாக்டர் சம்ப்ரி அரசியல்த்துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். சட்டமன்ற பதவி வகிப்பதற்கு முன்பு அவர் அனைத்துலக இசுலாமியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரைஞராகப் பணியாற்றியுள்ளார்.

1998-ஆம் ஆண்டில் அனுவார் இபுராகிம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையொட்டி வெடித்த போராட்டத்தில் இவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாளை மாலை 3.30 மணியளவில் பேராக் கோலாகங்சாரில் அமைந்திருக்கும் இஸ்கந்தாரியா அரண்மனையில் பாரிசான் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுல்தான் அசுலான் சா முன்னிலையில் பதவியேற்பர் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வருகின்ற செவ்வாய்க்கிழமையன்று மாநில செயலவை உறுப்பினர்கள் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மக்களின் விருப்பத்தையும் மீறி நாளை இவரின் பதவியேற்புச் சடங்கு நடைப்பெறுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

கிருஷ்ணா February 6, 2009 at 12:17 AM  

மக்களாட்சியை மீறும்
ஒரு
சர்வாதிகார நாடகம்...

இதன் முடிவு..

சர்வாதிகாரத்தை மீறும்
மக்களின் ஆதிக்கம்!

Wayang Kulit Malaysia February 6, 2009 at 9:23 AM  

அரசர் என்பவர் எப்பொழுதும் நடுநிலை வகிக்க வேண்டும் என்று இவரது புத்திரன் கூறி ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இவரே ஒரு தலைப் பட்சமான முடிவினை வழங்கி மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிட்டாரே!!!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP