சலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே! உனதுரிமையைக் கேள்! சலுகை நிரந்தரமானதல்ல! உரிமை மட்டுமே நிரந்தரமானது!
சிந்திப்போம்..!!
இந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை! இதுதான் மலேசியா!
இன்று குகன், நாளை நீங்கள்!!
குகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.
காவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..?
3 கருத்து ஓலை(கள்):
//18 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த எனக்கே இந்த கதி என்றால் மற்ற கைதிகளின் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்//
இது அண்ணன் உதயா தன் வீக்கமடைந்திருக்கும் காலை காவல் அதிகாரி வேண்டுமென்றே மெதித்தபின் உதிர்த்த சொற்கள். இது எத்தனை உண்மை.
மலேசியாவில் மனித உரிமை என்பது ஏட்டில் மட்டுமே உறங்குகிறது.
போராட்டம் தொடரும். வாழ்க மக்கள் சக்தி.
அதே வீரம்..
அதே கர்ஜனை..
அதே இலட்சியம்..
துவண்டிருந்த சமுதாயத்தை
தூக்கி நிறுத்திவிட்டு..
இன்று
தனியறையில்
தனிமைச் சிறையில்
அண்ணன் உதயா..
தம்பிகள் நாம்
என்ன செய்யப் போகிறோம்??
மீண்டும் ஒரு பேரணி
திரட்ட வேண்டாமா?
மீண்டும் ஒரு பேரொலி
எழுப்ப வேண்டாமா??
தம்பிகள் நாம்
என்ன செய்யப் போகிறோம்??
அதே வீரம்..
அதே கர்ஜனை..
அதே இலட்சியம்..
துவண்டிருந்த சமுதாயத்தை
தூக்கி நிறுத்திவிட்டு..
இன்று
தனியறையில்
தனிமைச் சிறையில்
அண்ணன் உதயா..
தம்பிகள் நாம்
என்ன செய்யப் போகிறோம்??
மீண்டும் ஒரு பேரணி
திரட்ட வேண்டாமா?
மீண்டும் ஒரு பேரொலி
எழுப்ப வேண்டாமா??
தம்பிகள் நாம்
என்ன செய்யப் போகிறோம்??
தம்பிகள் நாம் அதை
எப்போது செய்யப் போகிறோம்??
Post a Comment