இண்ட்ராஃப் குரல் - மனோகரன் பதவி விலகக்கூடாது.

>> Monday, May 4, 2009


அண்மைய காலமாக .சா கைதி எம்.மனோகரன் மலையாளம் தம் தொகுதி மக்களுக்கு முழுமையாக சேவையாற்ற இயலாததன் காரணத்தை முன்னிட்டு, கோத்தா அலாம் சா சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவிருப்பதாக அறிக்கைகள் வெளிவருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு, இண்ட்ராஃப் அவரை பதவி விலகக் கூடாது என கேட்டுக் கொள்கிறது.

எம்.மனோகரனைத் தேர்வு செய்த கோத்தா அலாம் சா தொகுதி மக்கள், அவரைத் தேர்வு செய்ததன் காரணத்தை நன்கு அறிவர். இனவாத அம்னோ அரசாங்கத்தின் கீழ் இருண்ட எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்துவிட்ட அம்மக்கள், ஓர் அரசியல் மாற்றத்தைக் காணவிரும்பி மார்ச் 8 2008-இல் முடிவெடுத்தனர்.

தற்கால நடப்புச் சூழலை கருத்தில் கொண்டு, மனோகரனின் இக்கட்டான நிலையை நன்கு அறிந்தவர்களாய் எதனையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் மக்கள் உள்ளனர். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி சிறையில் அடைக்கப்பட்டு முழுமையாக அத்தொகுதி மக்களுக்கு சேவையாற்ற இயலாது போனாலும், அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து மனோகரனுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர் கோத்தா அலாம் சா மக்கள்.

இண்ட்ராஃப் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இண்ட்ராஃப் ஐவரையும் பிற இசா கைதிகளையும் விடுவிக்கக்கோரி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிவருகிறது. இந்நடவடிக்கைகள் நம்முடைய எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்வரை தொடரப்பட வேண்டும்.

இதுகாறும் மனோகரனின் விடுதலை மற்றும் தொகுதி மக்களுக்கு முழுமையான சேவை வழங்குவதில் அவர் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலை குறித்த மக்கள் கூட்டணியின் நிலைப்பாடானது அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிடுவதோடு தொக்கி நிற்கிறது. இந்நிலைகுறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மக்கள் கூட்டணி அரசாங்கம் இறங்காததுகண்டு இண்ட்ராஃப் அதிருப்தி கொள்கிறது.

இதுபோக, கணவரின் துணையின்றி தாம் ஒருவராகவே பல சுமையான பொறுப்புகளை ஏற்று தொகுதி மக்களுக்கு தொண்டாற்றிவரும் மனோகரனின் துணைவியாருக்கு பக்க பலமாக மக்கள் கூட்டணியினர் உதவி புரிந்திருக்க வேண்டும். மக்கள் கூட்டணி நினைத்திருந்தால் மற்ற மக்கள் பிரதிநிகளைக் கொண்டு சுழல் முறையில் அத்தொகுதிக்கு சேவையாற்றியிருக்கலாம். வழக்கறிஞர் பணி, குடும்பப் பொறுப்பு ஆகியவைகளால் சற்று சிரமப்பட்டுவரும் மனோகரனின் துணைவியாருக்கு உதவியாக இருந்திருக்கலாம்.

மக்கள் கூட்டணியின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக, மக்கள் கூட்டணியினர் சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும். மனோகரன் மற்றும் பிற இசா கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவர வேண்டும். மக்களால் சனநாயக ரீதியில் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான எம்.மனோகரன் விடுதலையாகி முழுமையாக தன் தொகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனக் கோரும்வகையில் மக்கள் கூட்டணியினர் உடனடியாக மக்களவையில் ஒரு தீர்மானத்தினை கொண்டுவர வேண்டும். அத்தீர்மானமாது ஏற்றுக்கொள்ளப்படாவிடின், குறைந்தபட்ச நடவடிக்கையாக மக்களைவையிலிருந்து மக்கள் கூட்டணியினர் வெளிநடப்பு செய்ய வேண்டும்.

பொ.வேதமூர்த்தி
இலண்டன்
இண்ட்ராஃப் தலைவர்


போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

கிருஷ்ணா May 5, 2009 at 12:36 PM  

அண்ணன் மனோகரன் போராட்டவாதி..! தன் இனத்துக்காக தன் எதிர்காலத்தையே அடகு வைத்து இப்போது நான்கு சுவர்களுக்குள் இருட்டில் இருக்கிறார். அவரின் மனத்திடம் சுலபத்தில் கரைந்து போவது அன்று! அவர் ஒரு முடிவு எடுக்கிறார் என்றால், அதன் பின்ன்ணியில் ஏதோ இருக்கிறது. அவர் என்ன முடிவு எடுத்தாலும், யாரும் அவரை குறை சொல்வது கூடாது. இந்த விஷயத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இடைத்தேர்தல் என்றால் நடுங்கும் அரசாங்கம்.. இவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு முறை தோல்வியை எதிர்நோக்க நேரிடும்.. இது உறுதி!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP