நண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..
>> Thursday, May 7, 2009
பலநாட்களாக நோய்வாப்பட்டிருந்த நண்பர் கலையரசுவின் தாயார் இன்று காலையில் இயற்கை எய்தினார். இவ்வேளையில் நண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் கலையரசு எனக்கு 2007-ஆம் ஆண்டில் இணையம் மூலம் அறிமுகமானார். மலாக்காவில் நடைப்பெறும் இண்ட்ராஃப் மக்கள் சக்தி நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனது ஒளிப்படக்கருவியில் பதிவு செய்து ஓலைச்சுவடிக்கு அனுப்பியவர். அவரை ஓலைச்சுவடி நிருபர் எனவே எனது பதிவுகளில் குறிப்பிட்டுவந்தேன்.

வலதுபுறம் நிற்பவர் : நண்பர் கலையரசு
நண்பரை முதன்முதலாக பிப்ரவரி 16 இண்ட்ராஃப் பேரணியின்போது சந்தித்தேன். அப்பேரணிக்குச் செல்லும்வழியில் நெடுஞ்சாலை கட்டண சாவடியில் காவல்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு ‘புலாபோல்’ மையத்திற்கு கலையரசு அனுப்பப்பட்டார். அவருடன் வந்திருந்த மலாக்கா இண்ட்ராஃப் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் புடு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இடப்புறம் நிற்பவர் : நண்பர் கலையரசு
தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கெடுத்த நண்பர் கலையின் உதவிகளை இவ்வேளையில் நினைத்துப் பார்க்கிறேன்.
“நண்பரே, மனதைத் திடப்படுத்துங்கள்! ஒவ்வொரு மனிதனும் கடந்தாக வேண்டிய ஓர் அனுபவம்தான் இது! மேலும் நீங்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய உண்டு!”
அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
“நண்பரே, மனதைத் திடப்படுத்துங்கள்! ஒவ்வொரு மனிதனும் கடந்தாக வேண்டிய ஓர் அனுபவம்தான் இது! மேலும் நீங்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய உண்டு!”
அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
3 கருத்து ஓலை(கள்):
ஆழ்ந்த வருத்தங்கள்... :(
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
he got called me tat day... feel very sorry for him.. :(
god bless
Raaja
Post a Comment