வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! - உதயகுமார்
>> Tuesday, May 19, 2009
கடந்த 17-ஆம் திகதி மே மாதமன்று, பத்துமலை வளாகத்தில் திரு.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் முடிகணிக்கை செலுத்தினார். இந்நிகழ்வில் சுமார் 3,000 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். காலை 6 மணி தொடங்கி பத்துமலையில் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். 10.30 மணியளவில் உதயகுமார் பத்துமலை அருகில் அமைந்துள்ள ஆற்றங்கரைக்கு வருகைப் புரியும்பொழுது கூட்டம் 2000க்கும் மேல் கூடியிருந்தது. அங்கு முடிகாணிக்கை செலுத்தியபின்பு, அனைவரும் திரளாக பத்துமலை முருகனை தரிசிக்கச் சென்றனர். நண்பகல் 12 மணியளவில் ஆதரவாளர்கள் கூட்டம் சுமார் மூவாயிரத்தை எட்டியிருந்தது.
பிரார்த்தனை முடிந்தவுடன், திரு.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பின்பு, உயரமான முருகன் சிலை முன்பு திரளாகத் திரண்டிருந்த மக்கள் முன்பு அவர் சுவாரசியமாக உரை நிகழ்த்தினார்.
514 நாட்கள் கொடூரச் சட்டத்தின்கீழ் கமுந்திங் தடுப்புக் காவலில் சிறைவைக்கப்பட்டாலும், அண்ணன் உதயாவின் எண்ணம் , பேச்சு, எழுத்து, செயல் அனைத்தும் அதே பழைய உதயாவை அன்று நமக்கு நினைவூட்டின என்று கூறலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலர் மாறிவிட்டனர். உதயா மட்டும் தான் முன்னெடுத்த போராட்டத்தினின்று துளியளவும் மாறவில்லை!
அன்றைய உரையில் உதயகுமார் கூறியது :-
"போராட்டம்னு வந்துட்டா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்!" இதுதான் உதயாவின் கொள்கை.

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment