பூமாதேவி சீற்றமடைந்தாள்.. உயிர்கள் பல செல்லாக் காசுகளாகின...!

>> Wednesday, May 14, 2008


அன்வாங், சீனா - அண்மையில்தான் நர்கீசு சூறாவளிப்புயலால் மியன்மார் புரட்டிப் போடப்பட்ட சம்பவம் நம்மை துயரத்தில் ஆழ்த்தியது. இதற்கு அடுத்தாற்போல் கடந்த திங்கட்கிழமை பூமாதேவியின் சீற்றத்தால் சீனாவில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதைக் கேட்டு மனம் அதிகமாக கனக்கிறது. வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள சீசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தில் தற்போதைய தகவலின்படி 15,000 பேர்களுக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். சீசுவான் மாகாணத்தில் மட்டும் 26,000 பேர்கள் இன்னும் நில மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இன்னும் உயிரோடு சிக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மற்ற நகரங்களின் கணக்கெடுப்பில் இவ்வெண்ணிக்கை இன்னும் உயரும் என சின்சுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மலை அடிவாரங்களில் உள்ள சிறு கிராமங்கள் கடுமையான வானிலையால் வெளியுலக தொடர்பு அற்று இருப்பதால், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகள் இராணுவ விசையுந்தின் உதவியோடு இன்று வானத்தின்வழியாக போடப்பட்டு வருகிறது.இரண்டு நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்த பலர் இன்று உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். எனவே மற்றவர்களும் உயிரோடு இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணி மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மத்திய சீசுவான் மாகணத்தில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 178 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 23 சிறுவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்னும் இதுபோன்ற உயிரிழப்புச் செய்திகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் உள்ளன. திபேத்து நாட்டிற்கு சீனா செய்துவந்த அடக்குமுறைக்கு பூமாதேவி இப்படி ஒரு கடும் தண்டனையை வழங்கியிருக்கிறாள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் அப்பாவி மக்களின் துயரத்தை பார்த்துச் சகித்துக் கொள்ள முடியவில்லை. உலகில் சமாதானம் அற்றுப்போய் சண்டைகள் உருவெடுக்கும்பொழுது கடவுள் 'இயற்கை பேரிடர்' எனும் அவதாரம் கொண்டு மக்களுக்கு பாடம் கற்பிக்கிறார். அதன்வழி கருணையை பிறர்மீது நாம் பொழிய பாடம் கற்றுத் தருகிறார்.

ஆனால் மனிதர்கள் இதன்வழி பாடம் கற்றுக் கொள்கிறார்களா?

பல கேள்விகள் மனதைக் கேள்வி கேட்டு துளைத்துக் கொண்டிருக்கின்றன...

பல எண்ணங்கள் பூமியை பிளந்த வலியோடு மனதையும் பிளக்கின்றன...

பிளக்கப்பட்ட மனதில் மனிதநேயம் எனும் சொல் மட்டும் பற்றிக் கொண்டுள்ளது..

மனிதநேயம் இல்லையேல்.....???

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

8 கருத்து ஓலை(கள்):

usha May 15, 2008 at 12:16 PM  

Sathis sir Kaalai Vanakkam. Migavum urughi varighalai nagarthi irukireerghal.

Ithu pondra IYARKAIYINAAL manithanuku ilhaikka padum kodumaighalai vidha ikkaalathil MANITHANAAL manithanukku nadattha padum phala kodumaigal innum kodooramaagha irukirathe...!

சதீசு குமார் May 15, 2008 at 4:25 PM  

இயற்கை சீற்றத்தின் கொடுமையைவிட மனிதனின் சீற்றமே கொடுமையினும் கொடுமை.. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை உசா..

விக்னேஸ்வரன் May 16, 2008 at 12:03 PM  

ஹீம்.... என்னதான் பல கொடூரங்கள் நடந்தாலும் மனிதன் திருந்துவதாக தெரியவில்லை... என்னத்த சொல்ல எல்லாம் ஈசன் செயல்...

சதீசு குமார் May 16, 2008 at 4:18 PM  

விக்கினேசு சார், நீங்க இங்கதான் நிக்கிறீங்க...

VIKNESHWARAN May 16, 2008 at 5:19 PM  

//விக்கினேசு சார்//

பெயரில் தனித் தமிழ், வார்த்தையில் ஆங்கிலமா??

சதீசு குமார் May 16, 2008 at 5:54 PM  

'சார்' எனும் சொல் தமிழ்தானே, விக்கினேசு சார் என்றால் கடவுளைச் சார்ந்திருப்பவர் எனப் பொருள்படுகிறது. நீங்கள், நடப்பவற்றிற்கு அனைத்தும் ஈசனே காரணம் என்றீர்கள் அல்லவா, அதனால்தான் உங்கள் கருத்தும் கடவுளைச் சார்ந்தே இருக்கிறது எனக் கூறினேன்.:)

VIKNESHWARAN May 16, 2008 at 6:07 PM  

யோவ்... இது ஓவரா இல்லையா??

Gayathri May 18, 2008 at 7:07 PM  

hmm, பூமாதேவியின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று திரூபித்து விட்டால் ...மனிதனின் அளேவேற்ற அக்ரமெ செய்யலுக்கு ஒரு தற்காளே முடிவு ...இதன் பிறகும் மனிதன் புத்தியை தீட்டே வில்லை என்றாள், வாழ்க்கையில் துயரங்களை அனுபவிப்பான்...

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP