தாய்த் தமிழை தூய்மை செய்வோம்..
>> Sunday, May 4, 2008
நெல்லும் கல்லும் - அறிமுகம்
-கம்பார் கனிமொழி குப்புசாமி-
முன்னுரை:
நம் தமிழ் மொழியில் சமற்கிருதம், உருது, ஆங்கிலம், அரபி, மராத்தி, பிரஞ்சு, இந்தி, பிராகிருதம், பாரசீகம், போர்த்துகீசியம், தச்சு ஆகிய பிறமொழிச்சொற்களும் நம் திராவிடமொழிக் குடும்பச் சொற்களும் மிகுதியாகக் கலந்துள்ளன.
நம்மில் சிலர் அறிந்தும் பலர் அறியாமலும் இச்சொற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். பல்லின மக்கள் கூடி வாழும் சூழலில் மொழியில் கலப்பு ஏற்படுவது இயல்பு. ஏற்படும் கலப்பைத் தவிர்த்து மொழியைத் தூய்மைபடுத்த வேண்டியது நமது கடமை. அது நம்மால் முடியும். அந்தக் கடமையில் ஈடுபட வேண்டியது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பாகும். அதற்கு இந்தத் தொடர் சிறிதாவது துணைசெய்யும் என்று நம்பலாம்.
பிறமொழிச் சொற்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்துச் சிறுசிறு தொடர்களாகத் தொகுத்து இப்பகுதியில் தொடர்ந்து வெளியிடப்படும்.
இத்தொகுப்பிற்கு மொழியியற்றுமை அறிஞர் பலரின் ஆய்வியல் நூல்களும் தனிக் கட்டுரைகளும் தொகுப்புக் கட்டுரைகளும் துணைக்கொள்ளப்பட்டன. அவற்றில் குறிப்பாக மொழியறிஞர் அருளியாரின் அயற்சொல் அகராதி, முனைவர் இரா.மதிவாணரின் அயற்சொல் கையேடு, தி.நீலம்பிகை அம்மையாரின் 'வடசொற்றமிழ் அகரவரிசை' ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இத்தொகுப்பை உருவாக்கக் கருவியாக இருந்த, இருக்கின்ற அனைத்துப் பெருமக்களுக்கும் நன்றி.
கலப்பது என்பது இயல்பாகும் - அதைக்
களைந்திட முயல்வதே கடனாகும் - இது
மொழியைக் காத்திடும் வழியாகும் - இன
விழிப்பைக் காட்டிடும் நெறியாகும்.
ஞாயிறு நண்பன் (20.04.2008)
நெல்லும் கல்லும் (தொடர் 1)
கம்பார் கனிமொழி குப்புசாமி
உருதுமொழி கலப்புத்தொடர் - தமிழ்த்தொடர்
அக்கப்போராக இருக்கு - வீண்வம்பாக இருக்கு
அக்குதொக்கு இல்லாதவன் - உரிமைபற்று இல்லாதவன்
அகர்பத்தி வாங்கி வா - அகில் மணத்தி வாங்கி வா
அகஸ்மாத்தா நடந்தது - தற்செயலாய் நடந்தது
அச்சா பகுதச்சா - நன்று மிகநன்று
அசல் கொடுத்தால் போதும் - முதல் கொடுத்தால் போதும்
அண்டாவில் நீர் ஊற்று - பெருங்கலத்தில் நீர் ஊற்று
அண்டா கொண்டு வா - பெருங்கலம் கொண்டு வா
அணா கொடுத்தான் - காசு கொடுத்தான்
அத்து மீறாதே - வரம்பு மீறாதே
அபின் பழக்கம் தீது - கசினிப் பழக்கம் தீது
அம்பாரியில் அமர்க - மேலிருக்கையில் அமர்க
அமுல் படுத்தினார் - நடைமுறைப் படுத்தினார்
அமீனா இவர் - நயனகக் கட்டளையர் இவர்
அலாக்கா தூக்கினான் - தனியாகத் தூக்கினான்
அலாக்கா எடுத்தான் - அப்படியே எடுத்தான்
ஆசாமி போகிறான் - ஆள் போகிறான்
ஆஜர் என்றான் - வந்தேன் என்றான்
ஆஜரானார் அவர் - நேர்முன்வந்தார் அவர்
அனுமதி கிடைத்தது - ஒப்புதல் கிடைத்தது
அபினி தீமைதருவது - கசினி தீமைதருவது
அமுல் படுத்தினர் - நடைமுறைப் படுத்தினர்
அர்த்தல் நடந்தது - கடையடைப்பு நடந்தது
அலாதியானது - தனித்தன்மையானது
ஆசாமி பிடிப்பட்டான் - ஆள் பிடிப்பட்டான்
ஆஜரானார் - வருகை தந்தார்
ஆஜர் என்றார் - வந்தேன் என்றார்
ஆஜர் படுத்தினார் - முன்னிலைப் படுத்தினார்
இலாக்கா இல்லாதவர் - துறை இல்லாதவர்
இலாக்கா எங்கே? - திணைக்களம் எங்கே?
இனாம் கொடுத்தார் - நன்கொடை கொடுத்தார்
இஸ்திரி பெட்டியை எடு - தேய்ப்பத்தை எடு
உருட்டா பண்ணாதே - கபடி பண்ணாதே
உஷார் படுத்தினான் - எச்சரிக்கைப் படுத்தினான்
உஷாராக்கினான் - விழிப்புறச் செய்தான்
உதா வண்ணமலர் - செந்நீல வண்ணமலர்
ஐசாபைசா என்றான் - இரண்டிலொன்று என்றான்
கச்சடா பண்ணாதே - அழுக்குப் பண்ணாதே
கச்சா பொருள் - மூலப்பொருள்
கச்சா எண்ணெய் - தூய்மைப்படுத்தா எண்ணெய்
தொடரும்..
ஞாயிறு நண்பன் (27.04.2008)

1 கருத்து ஓலை(கள்):
இனவியல் சார்ந்த சிந்தனைகளைப் பரப்பிவந்த ஓலைச்சுவடியின் சிறகுகள்
மொழியியல் சார்ந்த சிந்தனைகளைப்
பரப்புவதற்கு விரிந்துள்ள நிலைகண்டு
மகிழ்கிறேன்.
அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்
Post a Comment