இலங்கைத் தமிழர், பாலசுதீனர்களுக்காதரவான அமைதிப் பேரணியில் 21 பேர் கைது!

>> Sunday, January 11, 2009

நேற்றிரவு சுதந்திர சதுக்கத்தில் நடைப்பெற்ற இலங்கைத் தமிழர், பாலசுதீனர்களுக்கு ஆதரவான அமைதிப் பேரணி காவல்த்துறையினரால் கலங்கப்படுத்தப்பட்டது. பாலசுதீனர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம் என வாய்க்கிழிய பேசும் அம்னோ அரசாங்கம் நேற்று எதிர்மறையாக நடந்துக் கொண்டது வேடிக்கையாக உள்ளது. 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுதிரண்ட இப்பேரணியில் கைதான 21 பேரில், கிள்ளான் நாடாளுமன்ற பிரதிநிதி திரு.சார்ல்சு சந்தியாகோ, மலேசிய சோசியலிச கட்சியின் செயலாளர் திரு.அருட்செல்வன், ‘.சா சட்டத்தை அகற்று' இயக்கத்தின் ஆர்வலரான நோர்லைலா ஓத்மான் ஆகியோரும் அடங்குவர்.

மலேசியாகினீ படச்சுருள்மனித உரிமைப் போராட்டம் என்பது சமநோக்குப் பார்வையோடு இருக்க வேண்டியது அவசியமாகிறது. இலங்கைத் தமிழர் விவகாரமாகட்டும், பாலசுதீன விவகாரமாகட்டும், அல்லது உலகில் வேறெங்கும் மனித உரிமை மீறல்கள் நடைப்பெற்றாலும் அதற்கு நம்முடைய ஒருமித்த எதிர்ப்புக் குரலை எழுப்ப வேண்டியது உலக மக்கள் கடமையாகிறது. இந்த விடயத்தில் மலேசிய அரசாங்கம் தனக்கு தேவைப்படுபவர்களை மட்டும் ஆதரிக்கும் செயலானது கண்டிக்கத்தக்கதாகும். பாலசுதீன விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் மலேசிய அரசாங்கம், இங்கிருந்து 2000 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இலங்கையில் 30 ஆண்டு காலமாக தமிழர் இனப்படுகொலை நடைப்பெற்று வருவதைக் குறித்து இதுவரையில் வாய்திறக்காதது அவமானத்திற்குரிய விடயமாகும்.

பாலசுதீனர்களுக்கு ஆளுங்கட்சியினர் மட்டும்தான் ஆதரவுப் பேரணி நடத்த வேண்டும் என சட்டத்தில் இடமுண்டா என்ன? இவர்கள் கூட்டம் போடலாம், அதற்கு அமைதிப் பேரணி என்று பெயர் கூறிக் கொள்ளலாம்! எதிர்க்கட்சிகளோ, அரசு சாரா இயக்கங்களோ அல்லது பொதுமக்களோ கூட்டம் போட்டால் அது ஆர்ப்பாட்டம், வன்முறை என முத்திரைக் குத்தப்பட்டு விடுகிறது! இனி, வெளிநாடுகளில் மனித உரிமைகள் செத்துக் கொண்டிருக்கின்றன என அழுவதைவிடுத்து மலேசியாவில் மடிந்துகொண்டிருக்கும் மனித உரிமைகளை நினைத்து ஒப்பாரி வைக்கலாம்!!

இடைத்தேர்தல் என்னவெல்லாம் வேலைப் பண்ணுகிறது பாருங்கள்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

து. பவனேஸ்வரி January 12, 2009 at 3:57 PM  

//இனி, வெளிநாடுகளில் மனித உரிமைகள் செத்துக் கொண்டிருக்கின்றன என அழுவதைவிடுத்து மலேசியாவில் மடிந்துகொண்டிருக்கும் மனித உரிமைகளை நினைத்து ஒப்பாரி வைக்கலாம்!!//

உண்மைதான்! ஆனால், கேட்பதற்கு ஆள் இல்லையே?

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP